75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த முயற்சி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

சென்னை: ஏறத்​தாழ 75 டன் எடை கொண்ட செயற்​கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்​து​வதற்​காக 40 மாடி உயரம் கொண்ட ராக்​கெட்டை உரு​வாக்கி வரு​வ​தாக இஸ்ரோ தலை​வர் நாராயணன் கூறி​னார். தெலங்​கானா மாநிலம் ஹைதரா​பாத்​தில் உள்ள உஸ்​மானியா பல்​கலைக்​கழக பட்​டமளிப்பு விழா​வில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணனுக்​கு, தெலங்​கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா கவுரவ டாக்​டர் பட்​டம் வழங்கி சிறப்​பித்​தார். தொடர்ந்து நாராயணன் பேசி​ய​தாவது: நடப்​பாண்​டில் இந்​திய ராக்​கெட்​டு​களைப் பயன்​படுத்தி அமெரிக்​கா​வின் 6,500 கிலோ எடை​யுள்ள … Read more

விநாயகர் சதுர்த்தி விழா: முதல்வர் ஸ்டாலினுக்கு இ-மெயிலில் இந்து முன்னணி அழைப்பு

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இ-மெயில் மூலம் இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ‘நம்ம சாமி, நம்ம கோயில், நாமே காப்போம்’ எனும் தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 15 லட்சம் வீடுகளில் கடந்த ஆண்டு விநாயகர் சிலை … Read more

எஸ்.ஐ தேர்வில் புது நடைமுறை அமல்: பொதுப்பிரிவு, காவலர் ஒதுக்கீடு கிடையாது – அரசாணை வெளியீடு

சென்னை: எஸ்.ஐ தேர்வில் இனி காவல் துறை இட ஒதுக்கீடு கிடையாது, அனைவருக்கும் ஒரே மாதிரியான எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 1,299 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மே 4-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து, சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். வழக்கமாக காவல் துறையில் 2-ம் … Read more

“போதைப்பொருள் ஒழிப்பு… கடைசி வரை ‘ஓ’ போட்டது தான் மிச்சம்” – இபிஎஸ் சாடல்

வேலூர்: தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட டிஜிபியால் அவர் ஓய்வுபெறும்வரை ஒழிக்க முடியவில்லை. கடைசி வரை ‘ஓ’ போட்டது தான் மிச்சம் என அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குற்றம்சாட்டினார். வேலூர் மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசும்போது, “தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்கிறார்கள். இதை தடுக்க இந்த அரசால் முடியவில்லை. இதில், ஆளும் கட்சிக்கு … Read more

எம்ஜிஆர், அண்ணாவுடன் விஜய்.. கூடப்போகும் 5 லட்சம் தொண்டர்கள்.. களைகட்டும் மதுரை தவெக மாநாடு!

நாளை மறுநாள் மதுரையில் தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், மாநாடுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

‘உடல் உறுப்பு திருட்டு கொடூரமானது, அபாயகரமானது’ – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: உடல் உறுப்பு திருட்டு கொடூரமானது, அபாயகரமானது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, நாமக்கல் சிறுநீரக திருட்டு வழக்கின் விசாரணை மற்றும் மனித உடல் உறுப்புகள் விற்பனையை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள், சாய ஆலை தொழிலாளர்களிடம் சட்டவிரோதமாக சிறுநீரகம் திருடப்பட்டது வெளிச்சத்துக்கு … Read more

1967, 77 தேர்தலில் தமிழ்நாட்டில் நடந்தது என்ன? விஜய் இதை குறிப்பிடுவது ஏன்?

Why Vijay mentioned 1967 and 1977 elections: தவெக தலைவர் விஜய் ஏன் 1967 மற்றும் 1977ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலை போல் 2026 தேர்தல் இருக்கும் என குறிப்பிடுக்கிறார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

மதுரை தவெக மாநாட்டு திடல் தயார் – பாதுகாப்பு பணியில் 3,000 போலீஸார், 500 பெண் பவுன்சர்கள்!

மதுரை: மதுரை பாரபத்தியில் ஆகஸ்ட் 21-ம் தேதி (நாளை மறுநாள்) நடக்கும் விஜய்யின் தவெக மாநில மாநாட்டுக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி, மாநாட்டு திடல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை அருகே அருப்புக்கோட்டை – தூத்துக்குடி சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை மறுநாள் (ஆக.21) நடக்கிறது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் விடிவிலான மேடை, பார்வையாளர்கள் கேலரிகள், வாகன பார்க்கிங், மாநாட்டுத் திடலை … Read more

தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ.1 கோடி தொழில் கடன்… இவர்களுக்கு மட்டும் – விண்ணப்பிப்பது எப்படி?

Mudhalvarin Kakkum Karangal: முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

நாமக்கல்: கல்லீரல் முறைகேட்டை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு!

கல்லீரல் முறைகேட்டை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தானம் அளிக்கப்படுகிறது. அதேநேரம், உயிருடன் இருப்பவர்கள் சிறுநீரகம், கல்லீரலை தானம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஏழ்மை நிலையில் உள்ள மக்களை பயன்படுத்தி, இடைத்தரகள்கள், பணத்துக்காக ஒரு சிறுநீரகம், கல்லீரலில் ஒரு பகுதியை பெற்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக, போலி ஆவணங்களை தயாரித்து … Read more