கோயம்புத்தூரில் சில பகுதிகளில் கனமழை: சுரங்கப்பாதைகள் தண்ணீரில் முழ்கின

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக கோயம்புத்தூரில் சுரங்கப்பாதைகள் தண்ணீரில் முழ்கிய நிலையில் காணப்படுகிறது.

சசிகலாவை நேரில் விசாரிக்காதது ஏன்? போதிய பதில்கள் கிடைத்ததா?- ஆறுமுகசாமி விளக்கம்

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மறைந்த ஜெயலலிதாவின் மரணம் சார்ந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தனது விசாரணை அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்திருக்கிறது. இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆணையத்தை தொடரலாம் என்று அனுமதி … Read more

தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்கள் – 912 பேருக்கு பணிநியமன ஆணையை முதல்வர் வழங்கினார்

சென்னை: தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு 912 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.8.2022) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 912 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 8 நபர்களுக்கு … Read more

செப். 10ல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தொடங்கும் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசியதாவது: பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக செப்டம்பர் 10 ஆம் தேதி … Read more

ஜெ. மரணம் – முதல்வரிடம் அறிக்கையை தாக்கல் செய்தது ஆணையம்

அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க கடந்த 2017 செப்டம்பரில் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சசிகலா, ஓபிஎஸ், அப்போலோ மருத்துவர்கள், அதிகாரிகள் உட்பட 154க்கும் மேற்பட்டோரிடம்  ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை சில நாள்கள் … Read more

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வெளிமாநிலங்களுக்கு செல்லும் கொடைக்கானல் பேரிக்காய்கள்

கொடைக்கானல்: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்காக, கொடைக்கானலில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பேரிக்காய்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் ஆரஞ்சு, பிளம்ஸ், பட்டர் ப்ரூட், மலைவாழை, பேஷன் ப்ரூட், சீதாப்பழம், பேரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான மருத்துவ குணம் கொண்ட பழ வகைகள் அதிகம் விளைகின்றன. கொடைக்கானலில் விளைவிக்கப்படும் அதிக இரும்புச்சத்து கொண்ட பேரிக்காய்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. கடந்த மாதம் தொடங்கிய பேரிக்காய் … Read more

''நாட்டின் சட்டத்திற்கு புறம்பானதாக நான் ஏதும் பேசவில்லை”- ஜாமீன் கோரும் கனல் கண்ணன்

பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பேசினார். அப்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே … Read more

இ.சி.ஆர் பங்களா… சுற்றிக் காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா: விலை எவ்ளோ தெரியுமா?

விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார். மேலும் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார். ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இதில் ஜீவாவின் மனைவியாக மீனாவாக, … Read more

இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார். இதுகுறித்து திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது:பெரியாரைப் பற்றி கட்டுரைப் போட்டி நடத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். தமிழைக் காட்டுமிராண்டி மொழிஎன்றும், சுதந்திரம் வேண்டாம் என்றும் சொன்னவர் பெரியார். அவரது வரலாற்றை பாடத்திட்டத்தில் கொண்டுவர … Read more

மருத்துவத்துறைக் கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.194.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவத்துறைக் கட்டடங்களை திறந்து வைத்து, மருத்துவக் கருவிகளை பயன்பாட்டிற்காக வழங்கியதோடு, 236 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (27.8.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 65.60 கோடி ரூபாய் செலவில் இம்மருத்துவமனையின் 200-வது ஆண்டையொட்டி கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட இருநூறு நூற்றாண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். … Read more