வேலூர்: விவசாய நிலத்தில் சடலமாக கிடந்த சிறுத்தை – வனத்துறையினர் விசாரணை

வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் சடலமாக கிடந்த சிறுத்தையை மீட்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் அடுத்த சாரங்கள் வனப் பகுதியை ஒட்டி துரைசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பெரிய சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் பேர்ணாம்பட் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பேர்ணாம்பட் சரக வனத்துறையினர், உயிரிழந்து கிடந்த சிறுத்தையின் உடலை மீட்டு, உயிரிழப்புக்கான காரணம் … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இன்று முதல் ஆட்டத்தில் இலங்கை- ஆப்கன் மோதல்

Afghanistan vs Sri Lanka, Asia Cup 2022 Tamil News: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (27-ம் தேதி) முதல் தொடங்கி வருகிற செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடர் முதலில் தீவு நாடான இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. பொதுவாக ஒருநாள் ஃபார்மெட்டில் விளையாடப்படும் இத்தொடர், இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் … Read more

விசாரணையை தாமதிக்கவில்லை: ஜெ. மரண விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை தாமதிக்கவில்லை என்று விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க கடந்த 2017 செப்டம்பரில் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில், விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி இன்று (ஆகஸ்ட் 27) காலை தாக்கல் செய்தார். தமிழ், ஆங்கிலம் … Read more

ராஜாத்தி அம்மாளுக்கு என்னாச்சு? ஜெர்மனி கூட்டிச் சென்றது ஏன்?

ராஜாத்தி அம்மாள் மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி சென்றுள்ளார். அவருடன் உடன் பயணித்துள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மனைவியும், தூத்துக்குடு எம்.பி. கனிமொழியின் தாயுமான ராஜாத்தி அம்மாள் முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செரிமான மண்டல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவரை மகள் கனிமொழி மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் சென்றுள்ளார். இரண்டு வாரங்கள் அங்கு தங்கி சிகிச்சை … Read more

தஞ்சையில் வாகனத்தில் மோதி மயில் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் நேற்று காலை 11 மணியளவில் வாகனத்தில் மோதி மயில் இறந்த நிலையில் கிடந்தது.  இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்றும் எந்த வாகனம் மீது மோதி மயில் உயிரிழந்தது என்றும் தெரியவில்லை. எனவே இந்த விபத்து குறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

காஞ்சிபுரம் அருகே 140 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் பணம் கொள்ளை. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருகே பெரியநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி (52). இவர், நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த … Read more

சென்னை லாட்ஜில் பெட்ரோல் குண்டு வீச்சு: காரணம் என்ன? போலீஸ் விசாரணை

சென்னை வடபழனியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 38). இவர், அதே பகுதியில் 21 அறைகள் கொண்ட தங்கும் விடுதியை சொந்தமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 26) இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, தீ வைத்து விடுதியின் வரவேற்பு அறையில் வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இதைப் பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் விடுதியை விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதில் விடுதியின் … Read more

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து – வாலிபர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் சீனிவாசன் (27). இவர் திருவள்ளூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  அப்பொழுது ஊத்துக்கோட்டை புதிய மேம்பாலம் அருகே சென்ற போது, நெல் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சீனிவாசன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை … Read more

காஷ்மீர் வரை 150 நாட்களுக்கு நடைபயணம் குமரியில் செப். 7-ல் ராகுல்காந்தி தொடக்கம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைபயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, குமரியில் செப். 7-ம்தேதி பயணத்தைத் தொடங்குகிறார். இதற்காக வரும் 7-ம் தேதி காலைசென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசும் ராகுல் காந்தி, பின்னர் நடைபயணத்தை தொடங்குகிறார். அன்று இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தங்குகிறார். செப். 8-ம் தேதி காலை அகஸ்தீஸ்வரத்தில் இருந்து கொட்டாரம், பொற்றையடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம் வழியாகச் சென்று, மாலையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் … Read more

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா செய்தது என்ன? ரவிக்குமார் எம்.பி., கேள்வி!

உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த 2021ஆம் ஆண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 26ஆம் தேதியுடன் (நேற்று) முடிவடைந்ததையடுத்து, அவர் ஓய்வு பெற்றார். பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம், பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை விடுவித்தது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டம் செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிரான மனு, பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடி ஆகிய 4 முக்கிய வழக்குகளை ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் நீதிபதி என்.வி.ரமணா விசாரித்தார். முன்னதாக, … Read more