விநாயகர் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்கப்படும் – பெருநகர காவல்துறை!

வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் தெற்கு கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், விநாயகா் சதுா்த்தியை அமைதியாகக் கொண்டாடுவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இக்கூட்டத்தின் போது அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது,  “கடந்த காலங்களில் விநாயகா் சதுா்த்தியின்போது எந்தெந்த இடங்களில் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டதோ, அதே இடங்களில்தான் சிலைகள் வைக்கப்பட வேண்டும். புதிய இடங்களில் சிலைகளை வைக்கக் கூடாது. தீயணைப்புத் துறை அனுமதி அவசியமாகும். ஒலி பெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட … Read more

ஜெ. மரணம் | 600 பக்கங்கள் கொண்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை முதல்வரிடம் தாக்கல்

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை மொத்தம் 600 பக்கங்களை கொண்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க கடந்த 2017 செப்டம்பரில் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. சசிகலா, ஓபிஎஸ், அப்போலோ … Read more

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் விலகுமா? ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு 72 நாள்கள் அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் சந்தேகம் கிளப்ப, அது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 2017 பிப்ரவரி மாதம் ஓபிஎஸ் தர்ம யுத்தம் தொடங்கியதற்கு ஜெயலலிதா மரணம் குறித்து எழுப்பிய சந்தேகமே முக்கிய காரணமாக இருந்தது. ஆர்கேநகர் இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதாவின் … Read more

தமிழகத்தில் பாஜகவிற்கு 2 தலைவர்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நக்கல்

நெல்லை: தமிழகத்தில் பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள் உள்ளனர், ஒருவர் அண்ணாமலை மற்றொருவர் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி என நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதில் ஆளுநர் ரவி மிக சிறப்பாக செயல்படுகிறார் அண்ணாமலை விளம்பரத்திற்காக முரண்பாடான தகவல்களை சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். ராகுல் காந்தி வருகிற 7- ந்தேதி இந்திய நாட்டை ஒருங்கிணைக்கும் நடை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்குகிறார். இது தொடர்பாக நெல்லை, தென்காசி … Read more

ஸ்ரீமதி உடற்கூராய்வுகள் தொடர்பான ஜிப்மர் மருத்துவ குழு அறிக்கையானது மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைப்பு

விழுப்புரம்: கனியமூரில் உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடற்கூராய்வுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஜிப்மர் மருத்துவர் குழுவின் அறிக்கையானது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம்வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி உயிரிழந்தார். இதனை அந்த பள்ளி நிர்வாகம் தற்கொலை என பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அது தற்கொலை அல்ல, இந்த மரணத்தில் மர்மம் உள்ளது … Read more

அரபிக்கடலில் சூரைக் காற்றுடன் பெய்யும் கனமழை – கடலுக்குச் செல்லாத முட்டம் மீனவர்கள்

அரபிக்கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் கனமழை பெய்து வருவதால் குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாத நிலையில், படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் குமரிக்கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் முதல் … Read more

சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் தீவிர சோதனை நடைபெற்றது. காலை 7.20 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்தது இண்டிகோ விமானம். அந்த விமானத்தில் 167 பயணிகள் இருந்த நிலையில் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்படது. விமான நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி மிரட்டலைத் தொடர்ந்து விமானத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், விமான … Read more

கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்த கார்த்திக் கோபிநாத்துக்கு புதிய சிக்கல்..! வேகமெடுக்கும் விசாரணை..!

கோயில் திருப்பணிகளுக்காக பணம் வசூலிக்க கூடாது எனநோட்டீஸ் அனுப்பியதையும் மீறி கார்த்தி கோபிநாத் பணம் வசூலித்து முறைகேடு. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோவில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக கார்த்திக் கோபிநாத் மீது புகார் அளிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில்காவல்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்குவிரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல். காவல்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில்,கோயில் திருப்பணி … Read more

எச்.ராஜா போட்டியிட்டு தோல்வியடைந்த பதவியை கைப்பற்றிய அன்பில் மகேஷ்

சென்னை: உலக அளவிலான இளைஞர் இயக்கங்களில் ஒன்றான சாரணர் இயக்கத்தின் தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக பேரியக்கங்களில் ஒன்றான சாரணர் இயக்கம் 1907-ல் பேடன் பவல் என்பவரால் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் செயல்பாடாக, 1908-ம் ஆண்டு ஜனவரி 24-ல் ஆண்கள் சாரணர் குழுவை அவர் உருவாக்கினார். நாளைய குடிமக்களான இளைய தலைமுறையினருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் … Read more

விற்பனை குறைவு தேக்கம் அதிகம்: ஒரே நாளில் 10 காசுகள் குறைந்த முட்டை விலை

நாமக்கல் மண்டலத்தில் சரிந்த முட்டை விலை. ஒரே நாளில் 10 காசுகள் சரிந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளில் இருந்து 10 காசுகள் குறைத்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில்… தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆடி மாதம் … Read more