அதிருப்தியில் சேலம் திமுக எம்பி பார்த்திபன்! மனக்குமுறலை கொட்டி தீர்த்தார்!  

சேலம் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த எஸ் ஆர் பார்த்திபன். இவரை மாநகராட்சி சார்பில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பதில்லை எனவும், தன்னை திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.  முன்னதாக இவருடைய எம்பி நிதியிலிருந்து நிதி ஒதுக்கினாலும் அதனை பயன்படுத்துவதில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் தன்னுடைய குமுறலை ட்விட்டரில் கொட்டி தீர்த்துள்ளார். அவருடைய பதிவில், “சுயமரியாதை என் உயிருக்கு மேலானது‌. அரசு நிகழ்ச்சிகளுக்கு … Read more

புதிய திட்டங்களுக்காக விவசாய நிலங்களை எடுப்பது தவிர்க்க முடியாதது: அமைச்சர் எ.வ.வேலு கருத்து

சென்னை: பரந்தூர் விமான நிலையம் தொடர்பான அரசின் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள் அதிகமான இழப்பீடு தரவேண்டும் என்று கேட்டனர் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், அரசு சார்பில் நிலங்கள் எடுக்கும் முதல்கட்ட பணியில் இறங்கியுள்ளோம். … Read more

டிசம்பருக்குள் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (26.8.2022) அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கிரே நகரில் அமைக்கப்பட்டுள்ள எம்மாம்பூண்டி நீர்உந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்திக்கடவு – அவிநாசி திட்டமானது கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிற்கு 1.50 டி.எம்.சி. உபரிநிரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு … Read more

அரசு விழாக்கள் பொழுதுபோக்கு அல்ல – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சரளை பகுதியில் நடைபெற்ற  அரசு விழாவில்  261.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில்   135 முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும் , 183.70 கோடி ரூபாய் மதிப்பில்  1761 புதிய பணிகளுக்கான அடிக்கலும் முதலமைச்சரால் நாட்டப்பட்டது.  மேலும், 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு 167.50 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், “ஈரோடு என்பது தமிழராகிய நாம் உணர்வோடு கலந்த ஊர். பெருந்துறை அருகே திங்களுரில் … Read more

வைத்தீஸ்வரன் கோயில் சித்தாமிர்த தீர்த்த குளம் தூர்வாரும் பணி தீவிரம்: பக்தர்கள் மகிழ்ச்சி

சீர்காழி: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி தையல் நாயகி அம்பாள் உடனாகிய கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர் கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசால் பாடல் பெற்ற தலமாகும். இத்தகைய புகழ்பெற்ற கோயிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் … Read more

`அங்க நிக்குது திமுக-வின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை!’- அண்ணாமலை கடும் விமர்சனம்!

சில தினங்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் எம்.எல்.ஏ அசோக்குமாரின் பேரக்குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது. அதில் 11 கோடி ரூபாய் மொய் பணம் பெறப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. 1,200 கிலோ கறி விருந்து சமைக்கப்பட்டு, சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர் என்றும், நிகழ்ச்சியில் மொய் எழுதுவதற்காக 18 இடங்களில் தனியாக பந்தல் அமைக்கப்பட்டன என்றும் தகவல்கள் வெளிவந்தன. தொடர்புடைய செய்தி: எம்எல்ஏ வீட்டு காதணி விழா… 1200 கிலோ கறி விருந்து.. மொய் மட்டும் இத்தனை … Read more

இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் காரசார வாதம்: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தீர்ப்பை தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் காரசாரமாக வாதிட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். ‘கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து … Read more

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அடுத்த ஐந்து தினங்களுக்கான மழை பற்றிய முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் (26.08.2022 மற்றும் 27.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் … Read more

வானிலை எச்சரிக்கை: தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் கனமழை

வானிலை தகவல்: இன்றும் நாளையும் (26-08-2022 மற்றும் 27-08-2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.   நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,  தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர்  மற்றும்  திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: செப். 23க்கு ஒத்திவைத்தது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 23க்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான  நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பங்களாவில் நடைபெற்ற இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து … Read more