ஒரே நாளில் ஸ்டாலின்- இ.பி.எஸ்: கோவையில் மாஸ் காட்டிய தலைவர்கள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது கோவை சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, அதிமுக பிரமுகரின் இல்ல விழாவில் பங்கேற்ற கோவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். கோவை மாவட்ட அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் இல்ல விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார். இதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு அவரது தொண்டர்கள் சுமார் 1000″க்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர். விமான நிலைய நுழைவாயில் முதல் அவிநாசி … Read more

மீண்டும் சனிக்கிழமைகளில் வகுப்புகளா.? தனியார் பள்ளிகள் சங்கம் கடிதம்.!

சனிக்கிழமைகளில் தனியார் பள்ளிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தனியார் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் விரும்புகின்றனர். அதற்கேற்ப செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தனியார் பள்ளிகள் இருக்கிறது.  சனிக்கிழமை அரசு பள்ளிகள் செயல்படவில்லை என்ற … Read more

மதுரையில் நடக்கும் தேசிய நாட்டின நாய் கண்காட்சியில் சமூக நாய்களையும் சேர்க்க தமிழக அரசுக்கு ஆர்வலர்கள் கோரிக்கை 

மதுரை: மதுரையில் சனிக்கிழமை நடக்க இருக்கும் தேசிய நாட்டின நாய் கண்காட்சியில் சமூக நாய்களையும் இடம்பெற செய்ய கால்நடை பராமரிப்பு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் க.ப.மாரிகுமார் கூறியதாவது: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வரும் 27-ம் தேதி சனிக்கிழமை தேசிய அளவிலான நாட்டின நாய் வளர்ப்பு கருத்தரங்கம் மற்றும் நாட்டின நாய்கள் கண்காட்சி நடக்கவிருக்கிறது. தேனியில் அமைந்துள்ள தமிழ்நாடு … Read more

திராவிட மாடலை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை… பாஜகவை வெச்சு செஞ்ச ஸ்டாலின்!

கொங்கு மண்டலத்தில் மூன்று நாட்கள் பயணம் மேற்கொ்ள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்டம், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரை: ஏதோ சிலருக்கு உதவிகளைச் செய்துவிட்டு கணக்குக் காட்டுபவர்கள் அல்ல நாங்கள். கணக்கில்லாத உதவிகளை – கணக்கிட முடியாத நலத்திட்ட உதவிகளைச் செய்யும் அரசுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு என்பதை நான் கம்பீரமாகச் சொல்வேன். 161 கோடி ரூபாய் … Read more

பிஇ 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி துவக்கம்: செயலாளர் தகவல்

காரைக்குடி: பிஇ நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் வரும் 29ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது என சேர்க்கை செயலாளர் பழனி தெரிவித்தார். பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் பி.இ மற்றும் பி.டெக் நேரடி இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கான  கவுன்சலிங்கை ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த ஜூன் … Read more

நீலகிரி சோதனை சாவடிகளில் கோடிக்கணக்கில் மோசடி? புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் வசூலிக்கப்படும் பசுமை நுழைவு வரி மற்றும் சுங்க நுழைவு வரியில் முறைகேடு செய்திருப்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் ஆதாரங்களோடு தெரிய வந்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா இருந்தபோது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் முன்னாள் படைவீரர்களை கொண்டு பசுமை நுழைவு வரி மற்றும் சுங்க நுழைவு வரி வசூலிக்கும் பணிகள் துவங்கியன. அதன்படி மாவட்டத்தில் உள்ள பர்லியாறு … Read more

என்.டி.டிவி.,யின் 29 சதவீத பங்குகளை வாங்கிய அதானி.. அடுத்த திட்டம் என்ன?

அதானி குழுமம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 23) என்டிடிவி (NDTV) நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. நடப்பாண்டின் மே மாதத்தில் அதானி குழுமம் BloombergQuint நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை மே மாதம் வாங்கியது.தொடர்ந்து, மற்றொரு செய்தி நிறுவனத்தில் அதன் முதலீட்டை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதானி குழுமத்தின் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் நிறுவனம், விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் நிறுவனத்தை வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 2009 மற்றும் … Read more

ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரிக்கான விரிவுரையாளர்கள் தேர்வு நேர்மையாக நடக்குமா? – புகாரும் புலம்பலும்

சென்னை: ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரிக்கான விரிவுரையாளர்கள் தேர்வு நேர்மையாக நடக்க வேண்டும் என வாய்ப்புக்கென நீண்ட நாள் காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பதாக கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையிலுள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் மாவட்டங்களிலுள்ள ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் மூத்த விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர்கள் என 155 காலிப் பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 20-ல் வெளியிட்டது. இதற்கான கல்வித் தகுதி முதுகலை … Read more

எதிர்க்கட்சிகளின் பழிச்சொற்களுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு நேரமில்லை..! – ஸ்டாலின் பேச்சு..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கொங்கு பகுதிக்கு சென்றுள்ளார். இன்று பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் சுமார் 50,000க்கு மேற்ப்பட்ட மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் திமுக ஆட்சியமைத்த ஒன்றரை ஆண்டில் செய்யப்பட்ட சாதனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் முழுமைக்குமான பொதுவான தேர்தல் … Read more

தொடர் கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது: 3வது வாரமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுப்பு

கம்பம்: தொடர் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3வது வாரமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம் சுருளி அருவியாகும். இந்த அருவிக்கு தமிழகம், கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான கம்பம், கூடலூர், பாளையம், சின்னமனூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. … Read more