ஹெச்.ஓ.டி மீது மாணவி பாலியல் புகார்; பேராசிரியர்கள் போர்க்கொடி: கொந்தளிப்பில் திருச்சி ஈ.வே.ரா கல்லூரி 

திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரி கடந்த 24-8-1965 துவங்கப்பட்டது. இந்த கல்லூரி துவங்குவதற்கு தந்தை பெரியார், தங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை வழங்கினார். இந்த கல்லூரியில் திருச்சி மட்டுமல்லாமல், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கடந்த 55 ஆண்டுகளாக இங்கு படித்து முடித்துள்ளனர். பெரியார் இறப்புக்கு பிறகு இந்த கல்லூரிக்கு அவரின் பெயர் சூடப்பட்டது. இக் கல்லூரியில் … Read more

கோவையில் மக்களை திரட்ட பள்ளி வாகனங்களை அழைத்த தமிழக அரசு, கொந்தளிக்கும் பாஜக அண்ணாமலை! 

மூன்று நாள் அரசு பயணமாக கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மு க ஸ்டாலின் அங்கு பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொள்கிறார். நேற்று  விமானத்தில் கோவை சென்ற முதலமைச்சர் ஆகஸ்ட் 24 25 26 ஆகிய மூன்று நாட்கள் இந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்த சுற்று பயணத்திற்காக மக்களை அழைத்து வர பள்ளி வாகனங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை … Read more

தமிழக மின்வாரியம் சார்பில் சமூக வலைதளங்களில் கணக்கு தொடக்கம்: பொதுமக்கள் ஆலோசனை தெரிவிக்கலாம்

தமிழக மின்வாரியம் சார்பில் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மின்தடைபற்றிய புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். மின்தடை, மின்சார விபத்து,மின்மாற்றிகள், பில்லர் பாக்ஸ் உள்ளிட்ட மின்சாதனங்களில் ஏற்படும் பழுதுகள் உள்ளிட்ட புகார்களை தெரிவிப்பதற்கு வசதியாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ‘மின்னகம்’ என்ற நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை 94987 94987 என்ற செல்பேசி எண் மூலம் 24 மணி … Read more

வீரமங்கை வேலுநாச்சியார்: மதுரையில் அரங்கேற்றப்பட்ட இசையார்ந்த நாட்டிய நாடகம்

மதுரையில் வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு குறித்த இசையார்ந்த நாட்டிய நாடகத்தை அமைச்சர்கள் துவங்கி வைத்தனர். மதுரையில் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாடகத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மற்றும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்து கண்டு ரசித்தனர். வீரம் என்ற மூன்றெழுத்தை தன் மூச்சாகக் கொண்ட வீரமங்கை வேலுநாச்சியார் மருது சகோசேகாதரர்கள் ஆதரவுடனும். ஹைதர் அலி, கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப் … Read more

Tamil news today live : மருத்துவ பரிசோதனைக்கு வெளிநாடு செல்லும் சோனியா காந்தி

Go to Live Updates பெட்ரோல் –டீசல் விலை பெட்ரோல் –டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழை நிலவரம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. எழும்பூர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. வெளிநாடு செல்லும் சோனியா காந்தி</strong> காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல உள்ளார். அவருடன் … Read more

தமிழக அரசு மக்களுக்காக செய்த செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட பாஜக வலியுறுத்தல்

விருதுநகர்: தமிழக பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர ரெட்டி விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவினர் மீது திமுகவும், காவல்துறையும் பழி வாங்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. பல மாவட்டங்களில் பாஜகவினரை கைதுசெய்து வருகின்றனர். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு திமுக அரசு. இதுதான் திராவிட மாடலா? 502 தேர்தல் வாக்குறுதிகளில் சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். திட்டங்களை அறிவித்து வருமானம் ஈட்டும் முயற்சியில்தான் உள்ளனர். தமிழகத்தில் குடும்ப அரசியல்தான் நடக்கிறது. மதுக்கடைகள்தான் … Read more

அம்மையார்குப்பம் ஊராட்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்

பள்ளிப்பட்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவின் பேரில், போதை பொருட்கள்  நடமாட்டம் தடுப்பு  பணிகள் தீவிரமடைந்து வருகிறது.   இதில் ஒரு பகுதியாக ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் திருத்தணி டி.எஸ்.பி  விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார்,  விழிப்புணர்வு கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்  ஜெயந்தி சண்முகம் வரவேற்றார். இதில் ஊராட்சி  மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி பேசுகையில், … Read more

மதுரையில் தரமற்ற உணவகங்களா? அதிகாரிகள் அதிரடி சோதனை – நடந்தது என்ன?

மதுரையில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மதுரையில் சுகாதாரமாற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாகவும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மதுரை தெப்பக்குளம் மற்றும் காமராஜர்புரம் பகுதியில் உள்ள உணவகங்களில் 15-க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். … Read more

கள்ளக்குறிச்சி கலவரம் – பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய மேலும் 5 பேர் கைது..!

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் கலவரத்தின் போது, பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய மேலும் 5 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது. மாணவி இறப்புக்கு நீதி கேட்டு போராட வந்தவர்கள், பள்ளியை சூறையாடி வன்முறை சம்பவத்தை அரங்கேற்றினர். இதில், வாட்ஸ் அப் குழு அமைத்து கலவரத்தில் ஈடுபட்ட சர்புதீன், சத்யராஜ் ஆகிய இருவரும், பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய … Read more

போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இழுபறி – இன்று மீண்டும் நடப்பதாக அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை, துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், போக்குவரத்து துறைசெயலர் கே.கோபால், நிதித் துறைகூடுதல் செயலர் ஜி.கே.அருண்சுந்தர் தயாளன், தொழிலாளர்தனி இணை ஆணையர் லட்சுமிகாந்தன், மாநகர போக்குவரத்துகழக … Read more