#BREAKING : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்.!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட்-30ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.  சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட்-30ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Source link

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 100 கிடா வெட்டி 8 ஆயிரம் பேருக்கு மொய் விருந்து!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்எல்ஏ நடத்திய மொய் விருந்தில் 100 கிடா வெட்டி 8 ஆயிரம் பேருக்கு விருந்து வைக்கப்பட்டது. சைவ பிரியர்களுக்கு சாம்பார், பாயாசம், வடையுடன் உணவு பரிமாறப்பட்டது. மொய் விருந்தில் பங்கேற்றவர்கள், அவரவர் வசதிக்கேற்ப, மொய் செய்தனர். பணத்தை எந்திரம் மூலம் எண்ணி அண்டாவில் அடுக்கி வைத்தனர். பணம் வசூலிக்கப்பட்ட 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர்.   Source link

அம்ரூத் திட்டத்தில் தமிழகத்தில் 12 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அனுமதி

சென்னை: அம்ரூத் திட்டத்தில் தமிழகத்தில் 12 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, நகர்புறங்களில் குடிநீர் மற்றும் கழிவு நீர் தொடர்பான உட்டகட்டமைப்பு வசதிகளை மேம்டுப்பத்த மத்திய அரசு புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் திட்டத்தின் மூலம் (அம்ருத்) நிதி உதவி வழங்கி வருகிறது. குடிநீர் குழாய் அமைத்தல், பாதாள சாக்கடை அமைத்தல், கழிவு நீர் சுத்தகரிப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு இந்த அம்ரூத் திட்டத்தில் முக்கியத்துவம் அளித்து நிதி உதவி … Read more

வாலாஜாபாத் பேரூராட்சியில் மழைக்காலத்துக்கு முன்பே கால்வாய்களை தூர்வாரப்படும் கூட்டத்தில் தீர்மானம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் மழைக்காலத்துக்கு முன்பே கால்வாய்களை தூர்வாரப்படும் என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வாலாஜாபாத் பேரூராட்சியின் மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் இல்லா மல்லி தலைமை தாங்கினார், துணை தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது, பேரூராட்சியின் வரவு, செலவு குறித்த அறிக்கைகள் வாசிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் என்னென்ன பணிகள் செய்வது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகள் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை பற்றி தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்து வருவதாகவும், அதற்கு தடைவிதிக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பேச்சுரிமை என்பது இருந்தாலும் யார் குறித்தும் அவதூறாக பேசுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை தமிழகத்தின் ஏக்நாத் … Read more

சுற்றுச்சூழல் அனுமதி பெறாத தென்காசி ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணியை ஏன் நிறுத்தக் கூடாது? – உயர் நீதிமன்றம்

மதுரை: மாநில சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறாமல் ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுவது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த எஸ்பி முத்துராமன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. ரூ.119 கோடி செலவில் 6 மாடிகளுடன் ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணியை நடைபெற்று வருகிறது. இந்த … Read more

எல்.ஜி.பி.டி. பிரிவினரை இப்படித்தான் அழைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

எல்.ஜி.பி.டி. பிரிவினரை கண்ணியமாக குறிப்பிடும் வகையிலான சொல்லகராதியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த சொல்லகராதியில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளையே இப்பிரிவினரை குறிப்பிட பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது தொடர்பான சொல்லகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணையில் உள்ளது. எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுதாயத்தினரை குறிப்பிடும் சொல்லகராதியை நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு, … Read more

ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கும்பாபிஷேகம் பங்காரு அடிகளார் தலைமையில் நடந்தது

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் தலைமையில் உடுமலைப்பேட்டையில் உள்ள, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் கும்பாபிஷேக விழா நடத்தி வைத்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சர்தார் வீதி பகுதியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்  சக்தி பீடம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. அதன் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை மிக விமர்சையாக நடந்தது. இந்த விழாவிற்காக உடுமலைப்பேட்டை பகுதிக்கு சென்ற பங்காரு அடிகளாருக்கு வழிநெடுகிலும் பக்தர்களும், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பளித்தனர். இதனை … Read more

மதுரை: தாயென நினைத்து மற்றொரு மாட்டிடம் பால் குடித்த கன்றை அடித்துக் கொன்ற கொடூரம்

மதுரையில் தான் வளர்க்கும் பசு மாட்டிடம் மற்றொருவரின் கன்றுக் குட்டி பால் குடித்ததாகக் கூறி 7மாத பசுங்கன்றுக் குட்டியை அடித்துகொன்ற கொடூரம் – சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகர் கிழக்குவெளி வீதியைச் சேர்ந்த சிக்கந்தர் சேக்அப்துல்லா என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் குமாஸ்தவாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஆடு, மாடுகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர், வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் 7 மாத கன்றுடன் மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் … Read more

வங்கி கணக்கே இல்லாத பெண் பெயரில், கடன்.. நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு.!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே பட்டணம் ரோடு சின்ன சந்து கிராம பகுதியில் பழனிவேல் என்பவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருக்கிறார். இவர் நகராட்சி துவக்கப் பள்ளியின் மேலாண்மை குழு தலைவராக இருக்கின்றார். இவர் தனது பெயரில் வங்கி கணக்கு துவங்க கனரா வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது ஆதார் கார்டை வாங்கி பார்த்த வங்கி அதிகாரிகள் அவரது பெயரில் ஏற்கனவே 75 ஆயிரம் ரூபாய் மகளிர் குழு கடன் இருப்பதை சுட்டிக்காட்டி கடனை உடனடியாக … Read more