முதலமைச்சரை பாஜக ஆட்டிப்படைக்கிறது – நாராயணசாமி விமர்சனம்

இதுதொடர்பாக பேசிய நாராயணசாமி, “புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் ரூ.10,696 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டை நாம் உற்றுநோக்கி பார்த்தால், இதில் வளர்ச்சித் திட்டங்கள், கட்டமைப்புகள், தொழிற்சாலைகள் கொண்டு வர எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. கடந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் எந்தெந்த திட்டங்களை கொண்டு வந்தோமோ அவையே திரும்பவும் சொல்லப்படுகின்றன. கடந்தாண்டு முதலமைச்சர் சொன்ன அம்சங்களும் இதில் வந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு மிக குறைவாக இருக்கிறது. கல்வியை … Read more

கூடலூர்- மலப்புரம் செல்லும் மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

நீலகிரி: கூடலூர்- மலப்புரம் செல்லும் மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகள், வாகன டிரைவர்கள் கவனமுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மலைப்பாதையில் காட்டு யானைகள் கேரள மாநிலம் தொடங்கி நீலகிரி மலைப்பிரதேசம், கர்நாடகாவின் பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயம் ஆகிய இடங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் குன்னூர், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செல்லும் சாலைகளை காட்டு யானைகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுகிறது. … Read more

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழாவிற்காக வெட்டி அகற்றப்பட்ட மரக் கிளைகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் இல்ல திருமண விழாவிற்காக மரங்களின் ராட்சத கிளைகள் வெட்டப்பட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். முன்னாள் அமைச்சரும், தற்போது அதிமுக எடப்பாடி அணியின் முக்கிய நிர்வாகியுமான சிவபதி இல்ல திருமணம் வரும் 29 ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இந்த திருமண … Read more

“புதுச்சேரியில் ரூ.1,000 திட்டத்தால் 5% பெண்களே பலனடைவர்” – நாராயணசாமி விமர்சனம்

புதுச்சேரி: “முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டால் புதுச்சேரி மக்களுக்கு எந்தவித பலனும் இல்லை” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப் பேரவையில் ரூ.10,696 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டை நாம் உற்றுநோக்கி பார்த்தால், இதில் வளர்ச்சித் திட்டங்கள், கட்டமைப்புகள், தொழிற்சாலைகள் கொண்டு வர எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. கடந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி … Read more

‘பறையர் கலகம்’ சுதந்திர போராட்டமாக அங்கீகரிக்க வேண்டும் – ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்!

பிரிட்டிஷ் ஆவணங்களாலும் வரலாற்றறிஞர்களாலும் உறுதிப்படுத்தப்படும் ‘பறையர் கலகம்’ போராட்டத்தை காலனிய எதிர்ப்புப் போராட்டமாக அங்கீகரிக்க வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் எம்.பி., கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு அமுதப் பெருவிழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நன்றியோடு இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து அவர்களது போராட்டங்களைப் போற்றிவருகிறோம். இந்திய சுதந்திரத்துக்கு அனைத்துத் … Read more

நாகை மாவட்டம் கோடியக்கரை சரணாலயத்துக்கு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்..!

கோடியக்கரை: கோடியக்கரை சரணாலயத்துக்கு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றது ரஷியா, ஈரான், ஈராக், சைபிரியா நாடுகளில் இருந்து வரும் பூநாரை தனி சிறப்பு வாய்ந்தது. 47 வகையான உள்ளான் பறவைகள் ஆர்டிக் பிரதேசத்தில் … Read more

"என்னப்பா விசேஷம்.. கல்யாணம்ப்பா.. சரக்கு உண்டா".. வைரலாகும் திருமண அழைப்பிதழ்!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனது திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சிட்டு வழங்கி வருகிறார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசனுக்கும், நவீனா என்வருக்கும் வருகிற 29.08.2022 அன்று திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், அவரது திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சிட்டு வழங்கி வருகிறார். அதில் என்னப்பா விசேஷம் கல்யாணம்ப்பா… யாருப்பா மாப்பிள்ளை நம்ம ஹீரோ கண்ணதாசன். யாருப்பா பொண்ணு நம்ம ஹீரோயினி … Read more

டீ மேட் பால் விலை லிட்டருக்கு ரூ 60; விஞ்ஞான ரீதியாக விலை உயர்த்தும் ஆவின்: முகவர்கள் சங்கம் கண்டனம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விஞ்ஞான ரீதியாக பால் விற்பனை விலையை உயர்த்தும் ஆவினின் முடிவு கண்டிக்கத்தக்க செயல் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது இது தொடர்பாக  தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின்  நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் ஆவின் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (ஆரஞ்சு கலர் பாக்கெட்) விநியோகத்தை குறைத்து “மேலிடத்து உத்தரவு” என்கிற பெயரில் சென்னையில் … Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆக.27-ல் பள்ளிகள் செயல்படும்: அரசு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை (ஆக.27) பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதையொட்டி, ஜூலை 28-ம் தேதி, … Read more

ஒண்டிவீரனை சுமக்கும் பாஜக; பதிலடிக்கு தயாரான சமூகம்!

இந்தியா 75வது சுதந்திர தினத்தை அமுதப் பெருவிழாவாக கொண்டாடி மகிழும் இந்த நேரத்தில் தமிழ் மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட ஒண்டிவீரன் என்கிற அருந்ததியர் சமுதாய போராளியின் வீரமரணத்தின் 250வது ஆண்டை நினைவு தினத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. ஒண்டிவீரனை பாஜக திடீரென தூக்கி பிடித்திருப்பதன் காரணம் அருந்ததியர்கள் மீது இருக்கும் பாசமா? என்றால் அது தான் இல்லை என்று அரசியல் நோக்கர்கள் தெளிவாக கூறுகின்றனர். கடந்த தேர்தலுக்கு முன்பு … Read more