கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம்: கலெக்டருக்கு 10 நாள்கள் டைம்!

மாணவி மரணத்தை அடுத்து சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை சீரமைக்கவும், பள்ளியை திறக்கவும் அனுமதிக்கோரி அளிக்கப்பட்ட மனு மீது பத்து நாட்களுக்குள் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளி மாணவி மரணத்தை அடுத்து கடந்த ஜூலை 17ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு எவரும் நுழைய கூடாது என மாவட்டம் நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. … Read more

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை: 4,400 லிட்டர் தரமற்ற எண்ணெய் பறிமுதல்

சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்ததில் 4 ஆயிரத்து 400 லிட்டர் தரமற்ற எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  பூமிக்கு அடியில் சம்ப்பு கட்டி எண்ணெய் விற்றது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தவிர அசைவ பொருட்களை சமைத்து விற்பனை செய்யும் உணவகங்களில் கலர் சாயம் பூசி விற்பனை செய்வது தொடர்பாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி … Read more

கீரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை: கீரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மேரி பள்ளிநேரம் முடிந்து வீடு திரும்பிய போது சங்கிலி பறிக்கப்பட்டது. காசிம்புதும்பேட்டை அருகே மற்றோரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் 3 சவரன் சங்கிலி பறித்து தப்பியோடியுள்ளனர்.

குறுக்கே வந்த நாய்.. திடீரென ப்ரேக் பிடித்த ஓட்டுநர் – தவறிவிழுந்து நடத்துநர் உயிரிழப்பு

சேலம் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் பேருந்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காடு அடிவாரம் பகுதியை நோக்கி, அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை வீராசாமி புதூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஓட்டிச் சென்றார். நாமக்கல் மாவட்டம் அத்தனூர் ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (56) என்பவர் நடத்துநராக அந்தப் பேருந்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சேலம் செட்டிசாவடி பகுதியில் சென்றுவிட்டு … Read more

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: சில விவகாரங்களில் இரட்டை நிலைப்பாடுக்கு எதிராக இந்தியா எச்சரிக்கை

சீனாவிடம் வெளிப்படையாக குறிப்பிடுகையில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் பிரச்சினையில் எந்தவொரு இரட்டைத் நிலைப்பாட்டுக்கும் எதிராக இந்தியா எச்சரிக்கிறது. தற்போதைய நிலையை வலுக்கட்டாயமாக மாற்ற முயலும் எந்தவொரு வற்புறுத்தல் அல்லது ஒருதலைப்பட்ச நடவடிக்கையும் பொதுவான பாதுகாப்பு கொள்கைக்கு எதிரானது என்று வலியுறுத்தியது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ், திங்கள்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு மூலம் பொதுவான பாதுகாப்பை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் பேசுகையில், அனைத்து நாடுகளும் பரஸ்பர இறையாண்மை … Read more

தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் ‘தூய்மை இந்தியா’ நிதியில் ஒரு கழிவறை கூட கட்டப்படவில்லை

சென்னை: தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் ‘தூய்மை இந்தியா’ நிதியில் ஒரு கழிவறை கூட கட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்கவும், சாலைகளையும் பொது இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் கடந்த 2014-ம் ஆண்டு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தத் திட்டத்தில் பொது இடங்களில் கழிவறைகள் மற்றும் வீடுகளில் தனிநபர் கழிவறைகள் மானியம் வழங்கப்படுகிறது. முதல் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் வீடுகளில் ஒரு தனி நபர் … Read more

செம்மொழி தமிழ் விருது: யார் இந்த ழான் லூயிக் செவ்வியார்?

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மறைந்த கலைஞர் மு.கருணாநிதி பெயரில் செம்மொழி தமிழ் விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் கடந்த மூன்று வருடங்களுக்கும் சேர்த்து மூன்று பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 2020க்கான விருது முனைவர் ம.ராசேந்திரனுக்கும், 2021க்கான விருது பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியனுக்கும் 2022ம் ஆண்டுக்கான விருது பிரெஞ்சு நாட்டின் தமிழ் அறிஞர் ழான் லூயிக் செவ்வியார் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் பிரெஞ்சு தமிழ் அறிஞர் ழான் லூயிக் செவ்வியார் குறித்து தமிழ்நாட்டில் பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரைப்பற்றி … Read more

தூக்கு மாட்டிக் கொள்ளும் வீடியோ பதிவு செய்து, 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை!

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி, குமரன் நகர், மகாத்மா காந்தி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சேகர் (46). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவர்களது மூத்த மகன் பார்த்தசாரதி (18). இவர், தனியார் கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். இளைய மகன் பாரதி செல்வா (14). இவன் இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் திங்கட்கிழமை காலை சேகர், தனது மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு, … Read more

அறிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 9 மணி நேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு..

சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு  வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவு பெற்றது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 9 மணி நேர அறுவை சிகிச்சையில் 10 பேர் கொண்ட மருத்துவ வல்லுனர் குழு அறுவை சிகிச்சையை  வெற்றிகரமாக முடித்துள்ளனர். ஆவடி அருகே அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது. ஆவடியை அடுத்த வீராபுரம், ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-செளபாக்யா தம்பதியின் மூத்த மகள் டானியா … Read more

’’எனக்கு முதல்வர் ஸ்டாலின் தான் கடவுள்’’ – சிறுமி தான்யாவின் தந்தை உணர்ச்சிப் பேட்டி!

’’நான் எத்தனையோ கடவுளை வேண்டி இருக்கிறேன்; எந்த கடவுளும் எதுவும் செய்யவில்லை. எனக்கு முதல்வர் ஸ்டாலின் தான் கடவுள்’’ என்று பேசுகிறார் ஸ்டீபன்ராஜ். இவர் ஏன் இப்படி சொல்கிறார் என்பதனை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி செளபாக்கியம். இந்த தம்பதிக்கு 9 வயதில் தான்யா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அரியவகை முகச்சிதைவு நோயில் பாதிக்கப்பட்டுள்ளார். தான்யாவிற்கு 3 வயதாக இருக்கும்போது … Read more