வேலை வழங்காமல் புதிதாக நிலம் எடுக்க என்எல்சி-யை அனுமதிக்க மாட்டோம்: அன்புமணி

சென்னை: நெய்வேலியில் ஏற்கெனவே நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காமல் புதிதாக நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதிபட கூறியுள்ளார் இது குறித்து இன்று அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “என்எல்சி சுரங்க விரிவாக்கம், புதிய சுரங்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நோக்கத்துடன் கடலூர் மாவட்டம் தென்குத்து, வானதி ராயபுரம் பகுதிகளுக்கு இயந்திரங்களுடன் வந்த அதிகாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். நெய்வேலி … Read more

தமிழ்நாட்டில் நான்கு நாள்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (23.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, டெல்டா மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் … Read more

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 23 சிறார்கள் – வெளியான அதிர்ச்சி பின்னணி !!

கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் பழக்க வழக்கங்கள் கல்லூரி மாணவர்களைக் கடந்து தற்போது பள்ளி மாணவர்களிடமும் வேகமாக பரவ தொடங்கி விட்டது. இதனால் மாணவர்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் சிரமங்களும், எல்லை மீறல்களும், அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அப்படி சிறு சிறு பிரச்சினைகளில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களின் பாதை கொலை,கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் சென்று முடிகிறது. தமிழகம் முழுக்க அரங்கேறும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் போலீசார் பிடியில், சிறார்கள் சிக்காத ஊரே இருக்காது. அப்படியாகிவிட்டது … Read more

பழுதான மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணி தீவிரம் விவசாய மின் இணைப்புக்கு 1000 கம்பங்கள் தயார்-பொள்ளாச்சி மின்வாரிய அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் பல இடங்களில், கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்புவரை குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டிருந்தது. சில இடங்களில் மின்கம்பத்தில் உள்ள மின் இணைப்பு கட்டையில் இருந்து மின் இழை துண்டிப்பு ஏற்பட்டதால், மின்தடை அவ்வப்போது ஏற்பட்டது.  நகர்ப்புறம் மட்டுமின்றி பல்வேறு கிராம பகுதியிலும் மின் அழுத்த குறைபாடு அடிக்கடி ஏற்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, நகர் மற்றும் கிராம பகுதிகளில் மின் அழுத்த … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு: இறுதி விசாரணை நாளை மறுதினம் தள்ளிவைப்பு

அதிமுக ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அம்மன் வைரமுத்து தொடர்ந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன் ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று … Read more

Tamil News Live Update: ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates India vs Zimbabwe 3rd ODI.. இந்திய அணி வெற்றி ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. … Read more

'ஆர்டர்லி' முறையை 4 மாதத்திற்குள் ஒழிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ‘ஆர்டர்லி’ முறையை நான்கு மாதத்திற்குள் ஒழிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்க நேரிடும் என தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ‘ஆர்டர்லி’களை பணியமர்த்துவது, வாகனங்களில் … Read more

இலவச வேட்டி, சேலை: தமிழக அரசு எடுக்கும் முடிவு என்ன?

இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 158 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 1983 முதல் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஏழைகள், முதியோர், விதவை, ஆதரவற்றோர் என சுமார் 1 கோடியே 80 லட்சம் பேருக்கு வேட்டியும், சுமார் 1 … Read more

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு – முதலமைச்சரை சந்திக்க பெற்றோர் முடிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி பள்ளி அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் நிர்வாகிகள் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில்,உயிரிழந்த மாணவியின் இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவினர் நேற்று … Read more

காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு விதிமீறி இரவில் கேரட் அறுவடை செய்ய நிர்பந்திக்கும் ஏஜென்டுகள்

உயிரை பணயம் வைத்து வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள்; நடவடிக்கை பாயுமா? குன்னூர் : நீலகிரியில் இரவு நேரங்களில் கேரட் அறுவடை செய்ய கலெக்டர் தடை விதித்துள்ள நிலையில் இதை மீறி சில தோட்ட ஏஜென்டுகள் தொழிலாளர்களை நிர்பந்தம் செய்து இரவில் பணிக்கு வருமாறு வற்புறுத்துகின்றனர். இதனால், மனித, விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த ஏஜென்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக  … Read more