கோடப்பமந்து பகுதியில் நிலச்சரிவை தடுக்கும் ஹைட்ரோ சீடிங் தொழில்நுட்பம் ஆய்வு

ஊட்டி : ஊட்டி காந்தல் பகுதியில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம், அறிவுசார் மையம் மற்றும் கோடப்பமந்து பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோ சீடிங் முறையில் புற்கள் வளர்த்து நிலச்சரிவை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் அறிவை வளர்த்து கொள்ளும் வகையிலும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வசதிக்காகவும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து … Read more

`பாலியல் புகாருக்குள்ளான நபரின் கீழ் பணியாற்ற முடியாது’- கடிதம் கொடுத்த பிற பேராசிரியர்கள்

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆங்கிலத்துறை தலைவரின் கீழ் பணியாற்ற முடியாது என 17 பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் மீது முதுகலை மாணவி ஒருவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்குப் பாலியல் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணை … Read more

#BigBreaking | சேலத்தில் அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் கூட்டாக தற்கொலை முயற்சி – வெளியான அதிர்ச்சி காரணம்.!

சேலம் வாழப்பாடி அருகே, அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கியிருந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் கூட்டாக எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. புதுப்பாளையம் அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படித்து வந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் 4 பேர், நான்கு நாள் விடுமுறையை முன்னிட்டு விடுதியில், வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு, தனது நண்பர்களின் இல்லத்திற்கு சென்றதாக தெரிகிறது. நேற்று பள்ளி திறந்த … Read more

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அரசு கொள்கைகளை வகுக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “தமிழக அரசை பொருத்தவரை எந்த திட்டமிடுதலாக இருந்தாலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத்தான் அது அமையும். அவ்வாறு அமைய வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். இதை மனதில் வைத்துதான் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், கொள்கைகளும் வகுக்கப்படுகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் … Read more

க்ரீன் சிக்னல்..! ஒன்றிணையும் ஓபிஎஸ் – சசிகலா; எடப்பாடி அன்கோ ஷாக்!

– வி.கே.சசிகலா சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் என்றும் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி … Read more

காவல்துறையினர் கால்களை பிடித்துக்கொண்டு கதறி அழுத சகோதரிகள்: சேலத்தில் பரபரப்பு

சேலத்தில் காவல்துறையினரின் கால்களை பிடித்து அழுத சகோதரிகளின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கே பதபதைக்கும் வகையில் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சகோதரரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்றதாக இந்த சகோதரிகள் குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள்.  சேலம் மாமாங்கம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா மொத்த வியாபாரிகளிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அவர் … Read more

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் கதண்டு கடித்து பள்ளி மாணவிகள் உள்பட 10 பேர் படுகாயம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் கதண்டு கடித்து பள்ளி மாணவிகள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். பள்ளிக்கு சென்றபோது கதண்டு கடித்து காயமுற்ற மாணவிகள் உள்பட 10 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலையை கடக்க முயன்ற 11 வயது சிறுமி பைக் மோதி பலி

சென்னையில் சாலையை கடக்க முயன்ற 11வயது சிறுமி மீது இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் சீசோர் டவுன் 10வது அவென்யூவை சேர்ந்தவர் பிரதாப் சிங். இவரது மகள் ஸ்ரீசனா(11). இவர் பனையூர் பாரத் பெட்ரோல் பங்க் எதிரில் சாலையை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து … Read more

ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு: உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு (ஆக.25) சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், “கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ம் … Read more

மாணவர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு – பள்ளிக்கல்வி துறை அதிரடி!

ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இட வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், இனிஷியலை, தமிழில் தான் எழுத வேண்டும் என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிறப்பித்திருந்த உத்தரவில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், … Read more