ஆய்வுக்குள்ளான கள்ளக்குறிச்சி மாணவி உடற்கூராய்வு: நீதிமன்றத்தில் தாக்கலானது அறிக்கை!

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்த மாணவியின் பிரேத பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவக் குழுவினர், தங்கள் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியையடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவியொருவர், கடந்த மாதம் 13ம் தேதி அதிகாலை பள்ளியின் தரைதளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து, மாணவி இறப்புக்கு நீதி கேட்டு 17ம் தேதி பொதுமக்கள், இளைஞர்கள் பள்ளி முன் … Read more

சாதி ரீதியாக பேசிய கல்லூரி இணைப் பேராசிரியர் மீது விசிக புகார்

மாணவர்களை சாதி ரீதியாக தாழ்த்தி பேசிய, சென்னையில் உள்ள அரசுக் கல்லூரித் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திங்கள்கிழமை சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. விசிகே-வைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.செல்வம் செஞ்சுடர் அளித்த புகாரின்படி, சென்னையில் உள்ள பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றின், தமிழ்த் துறைத் தலைவர் மாணவர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசும் போது சாதிரீதியாக இழிவாக பேசினார். . மாணவர்களின் சமூகப் பின்னணி குறித்தும், ஒரு குறிப்பிட்ட … Read more

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை.. இதுவரை 93,000 மாணவிகள் சேர்ப்பு.!

மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் இதுவரை 93 ஆயிரம் மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.  அந்த வகையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ.யில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தில் இதுவரை 93 … Read more

தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக கூறப்படுவது மாயை: கே.எஸ்.அழகிரி கருத்து

தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது என்பது ஒரு மாயை என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக, ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. செப்.7-ம் தேதி தொடங்கும் இந்த நடைபயணத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்தி … Read more

ஆத்தூர் அருகே கோர விபத்து; 6 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் லீபஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் கடந்த 30 தினங்களுக்கு முன்பு இறந்துள்ளார், இவரது 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சி நேற்று (22.8.22) இரவு நடைபெற்றுள்ளது .இந்த நிகழ்ச்சிக்கு ஆறுமுகத்தின் உறவினர்கள் எல்லோரும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்நிலையில் ஆறுமுகத்தின் துக்க நிகழ்ச்சிக்கு திருச்செங்கோட்டில் இருந்து வந்திருந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ் என்பவர் தனது ஆம்னி காரில் துக்க நிகழ்வுகளில் கலந்து கொண்ட கோட்டை பகுதியைச் சேர்ந்த சரண்யா, சுகன்யா, சந்தியா மற்றும் … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2வது நாளாக நகை சரிபார்க்கும் பணி தொடங்கியது..!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2வது நாளாக நகை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நடராஜர் கோயிலில் நகைகள் சரிபார்க்கப்படுகிறது. அறநிலையத்துறை ஆணையர்கள், நகை மதிப்பீட்டாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஃபரிதா குழுமம் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

ஃபரிதா குழுமம் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வருமான வரித்துறை பல்வேறு தொழில் அதிபர்கள், சினிமா பைனான்சியர்கள்  வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் வீடு என்ன பல்வேறு பகுதிகளில் அதிரடியாக சோதனை செய்தது. இந்த நிலையில் தோல் நிறுவனங்களில் ஒன்றான ஃபரிதா குழுமம் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். வேலூரை … Read more

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை விரைவுபடுத்தக் கோரி போராட்டம் – ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அறிவிப்பு

பெரியகுளம்/கோவை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை விரைவுபடுத்தும்படி திமுக அரசை வலியுறுத்திப் போராட்டம் நடத்த உள்ளோம் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கூறினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி பெரியகுளத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட புகழேந்தி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ஜெயலலிதா காலத்தில், அவருக்கு அருகில் இருந்து செயல்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அதிகார வெறியால் என்னை மட்டுமல்ல, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவையும் கட்சியில் இருந்து பழனிசாமி நீக்கினார். அவர்கள் கூறிய … Read more

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு..!

நாகை : நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அகஸ்தியன்பள்ளி, கொடியக்காடு, கடினல்வயல் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் உப்பு பாத்திகள் சேதமடைந்ததால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

`அதிமுக பொதுக்குழு செல்லாது’ தீர்ப்பை எதிர்த்த இபிஎஸ் மனு மீது இன்று உயர்நீதிமன்ற விசாரணை!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த கூடுதல் மனு கொடுத்துள்ளார். இந்த மனுவை இன்று விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. `அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் – ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது’ உள்ளிட்ட தனி நீதிபதியின் உத்தரவை … Read more