கலெக்டர்களுக்கு கடிதம் எழுதிய இறையன்பு: எடுத்த நடவடிக்கை என்ன?

தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுக்குத் தக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற தகவல் கிடைக்கப்பெற்றதும், 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை அலுவலகங்களில் … Read more

ஆத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் காரில் சென்ற 4 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். துலுக்கனூர் புறவழிச்சாலையில் கார் சென்ற போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மோதியது. விபத்தில் பலத்த காயம் அடைந்த மேலும் 6 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து துறையின் வருவாயை பெருக்க நடவடிக்கை – சேவைக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்படுகின்றன

சென்னை: போக்குவரத்துத் துறையின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை தமிழக அரசு பலமடங்கு உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இம்மாத இறுதியில் அமலாகும் எனக் கூறப்படுகிறது. தமிழக உள்துறையின்கீழ் செயல்பட்டு வரும் போக்குவரத்துத் துறை, உரிமம் வழங்குதல், வாகனப் பதிவு, பதிவு புதுப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், தகுதிச்சான்று வழங்குதல், மோட்டார் வாகன வரி, பசுமை வரி உள்ளிட்டவற்றின் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. கடந்த ஆண்டில் இந்த வகையில் அரசுக்கு ரூ.5,272 கோடி வருவாய் … Read more

மாவூரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் கூலூர் ஊராட்சிக்குட்பட்ட மாவூர் கிராமம் உள்ளது. இதில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பழுதடைந்துவிட்டது. இதனால் அந்த பள்ளிக் கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய பள்ளி கட்டிடம் கட்ட திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த பள்ளிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று … Read more

கடனை திரும்ப செலுத்தாத வழக்கு: இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை

எண்ணி ஏழு நாட்கள் என்ற திரைப்படத்திற்காக வாங்கிய கடனை திருப்ப செலுத்தாத வழங்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2001-ம் ஆண்டு வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து ரன் சண்டைக்கோழி. பையா, வேட்டை, என சில வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இதில் கடந்த 2014-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படம் படுதோல்வியை சந்தித்து. அதன்பிறகு படவாய்ப்பு கிடைக்காமல் இருந்த லிங்குசாமி, … Read more

10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. இந்த இணையதக முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்..!

கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்நிலையில்,10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று (23.08.2022) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  தேர்வு முடிவுகளை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து கொள்ளலாம் எனவும் … Read more

வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட 5 தெற்காசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தலின் பேரில் மத்திய அரசால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைவராக தமிழக முதல்வர் உள்ளார். கடந்த 2008-ல் கருணாநிதி தனது சொந்த நிதி ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக அளித்து, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி … Read more

கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்தும், விநாயகர் சிலை வைப்பது, ஊர்வலம் செல்வது குறித்த ஆலோசனை கூட்டம் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியோ சக்தி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டாார். இந்நிகழ்வில் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், வழக்கமாக விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலை வைத்து விழா … Read more