TNPSC Group 4 தேர்வு; கட் ஆஃப் எப்படி இருக்கும்? ரிசல்ட் எப்போது?

TNPSC Group 4 VAO exam expected cut off and result date: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பிரிவு வாரியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு வரும் என்பதை இப்போது பார்ப்போம். தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை … Read more

தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் அரசின் விதிகள் செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசின் விதிகள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் பணி நியமனம் மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய பணி விதிகள் கடந்த 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும், ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி … Read more

ஐந்து நாள்களுக்கு கனமழை தான்: உங்க ஊர் லிஸ்டுல இருக்கான்னு பாருங்க!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஐந்து தினங்களுக்கு எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பது குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (22.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, … Read more

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ 22.08.2022:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 23.08.2022:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி … Read more

குமரி மாவட்டத்தில் 1.70 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்தனர்-வீடு வீடாக சென்று பதிவு செய்யும் அலுவலர்கள்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 92 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்களர்கள் 7 லட்சத்து 92 ஆயிரத்தி 410 பேர், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 950 மற்றும் இதர வாக்காளர்கள் 195 பேர் உள்ளனர். இந்தநிலையில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைத் தடுக்கவும், ஒரு வாக்காளரின் விவரம் ஒரே தொகுதியில் … Read more

தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து: அச்சத்தில் கூச்சலிட்ட பயணிகள் – காரணம் என்ன?

அரசுப் பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் நடத்துநர் பேருந்தை இயக்கினார். இதனால் பயத்தில் பேருந்தை நிறுத்தி இறங்கிய பயணிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதியிலிருந்து புதுச்சேரிக்கு தடம் எண் 212 இயக்கப்படுகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் வந்த அரசுப் பேருந்தை ஓட்டுநர் தரணியேந்திரன் இயக்கி வந்தார். இந்நிலையில், 46 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி வருவதற்குள் பல்வேறு இடங்களில் தாறுமாறாக இயக்கபட்டதால் சந்தேகம் அடைந்த பயணிகள் பேருந்தை இயக்கிய நடத்துநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். … Read more

காவேரி கூக்குரல் இயக்கத்தின் 1 லட்சம் மரங்கள் நடும் திட்டம்: தேவராயபுரத்தில் 16,500 மரக்கன்றுகள் நடவு

கோவை: காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் “பசுமை தொண்டாமுத்தூர்” திட்டம் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினம் சுமார் 17,000 மரங்கள் நடவு செய்தனர். இது குறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட தகவல்: பசுமை தொண்டாமுத்தூர் திட்டம் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினம் சுமார் 17,000 மரங்கள் நடவு செய்தனர். அதன் இரண்டாம் கட்ட நிகழ்வாக 20 ஆகஸ்ட் 2022 தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட … Read more

ஸ்டாலினை ஓவர்டேக் செய்த ரங்கசாமி: நல்ல செய்தி விரைவில் வருமா?

2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை பேசுபொருளானது. தொலைநோக்கு திட்டங்கள், கவர்ச்சிகர அறிவிப்புகள் கலந்த கலைவையாக அந்த அறிக்கை அமைந்திருந்தது. தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளதாக அரசு தற்போது கூறிவரும் நிலையில் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என எதிர்கட்சிகள் கூறிவருகின்றன. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பட்டிருந்தது. திமுகவை பார்த்து அதிமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என … Read more

அனைவரும் அர்ச்சகராகும் திட்டம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணிபுதிய விதிகள் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. அதில்,18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஒராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.  … Read more

மேட்டுப்பாளையத்தில் 40 மாடுகள் மீது ஆசிட் வீச்சு: போலீசார் தீவிர விசாரணை…

கோவை: மேட்டுப்பாளையத்தில் 40 மாடுகள் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசி இருக்கிறார்கள். ஆசிட் வீச்சால் மாடுகளின் தோள்கள் சுருங்கி, தோல் கருகி காயம் ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் கல்லார் என்ற இடத்தில் உள்ள ரயில்வே கேட் அருகில் ராஜ்குமார் என்பவர் 40 எருமை மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ராஜ்குமார் தனது இடத்தில் கட்டி வைத்து பராமரித்து வந்த  40 மாடுகளையும் பார்த்தபோது அதனுடைய தோல்கள் சுருங்கிய நிலையிலும், சில இடங்களில் தோல்கள் உரிந்தும் காணப்பட்டது. … Read more