திருமுல்லைவாயலில் சாலையில் வீணாகும் குடிநீர்; அதிகாரிகள் அலட்சியம்

ஆவடி: சென்னை புழல் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ராட்சத குழாய்கள் மூலமாக ஆவடி மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்டு, ஆவடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இதற்கிடையே, கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருமுல்லைவாயல் காவல் நிலையம் எதிரே புழல் ஏரியிலிருந்து வரும் ராட்சத குடிநீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் உடைந்து போன … Read more

60 தம்பதிகளுக்கு மணி விழா: வயதான பெற்றோரிடம் அன்பைப் பகிர ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி: 60 தம்பதிகளுக்கு ஒரே மேடையில் மணி விழா புதுச்சேரியில் நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை, “பெற்றோருக்கு உணவு தந்து பார்த்துக் கொண்டால் மட்டும் போதாது. அன்பைப் பகிருங்கள்” என்று உருக்கமாக குறிப்பிட்டார். புதுச்சேரி திருக்காஞ்சி, ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் ‘மணி விழா மகா சங்கமம்’ நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். 60 தம்பதிகளுக்கு 60ம் ஆண்டு மணிவிழா நடந்தது. அதையடுத்து மணிவிழா தம்பதிகளை வாழ்த்திப் பேசினார். முன்னதாக … Read more

விமான நிலையம் வேண்டாம்: பரந்தூர் மக்கள் போர்க்கொடி..! அரசு என்ன செய்யப்போகிறது?

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படுகிறது என மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது. பரந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 12 கிராமப் பகுதிகளில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பரந்தூர் விமான நிலையம் அமைப்பது சென்னைக்கு மிக முக்கிய தேவை எனவும், பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் கிடைக்கும் என தமிழக தொழில்துறை அமைச்சர் … Read more

தஞ்சாவூர் அருகே ‘இன்னும்’ ஆற்றில் இறங்கி பிணத்தை எடுத்துச்செல்லும் அவல நிலை!

‘யாருப்பா இப்ப சாதி பாக்குறா’ என்ற சொலவடை இருப்பதுபோல, இப்பலாம் பிணத்தை எறிக்க மெஷின் வந்துடுச்சி எல்லாம் மாறிடிச்சு என்ற மேட்டிமைச் சொற்களும் உலவுகின்றன. எல்லாம் மாறிவிட்டது என்ற நினைப்பு பலரிடம் உதிக்கும்போதெல்லாம் கிராமங்களில் இருந்து வரும் யதார்த்தம், ‘இல்லை. அப்படியெல்லாம் ஒன்றும் மாறிவிடவில்லை’ என்று முகத்தில் அறைகிறார்போல சம்பவங்களை தந்துகொண்டே இருக்கிறது.  தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே உள்ள நெப்பு கோவில் என்கிற நெய் குப்பை பகுதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். … Read more

மறைமலைநகர் நகராட்சியில் கழிவறை கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்க்காரணை பகுதியில், கடந்த 2014ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் ₹24 லட்சம் மதிப்பில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே நவீன கழிவறை கட்டிடம் கட்டப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நாளடைவில் இந்த கழிவறை முறையான பராமரிப்பின்றி குடிநீர் குழாய், பீங்கான் தொட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உடைந்து சேதமாகிவிட்டன. இதனால் அந்த கழிவறையை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் … Read more

குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு வழங்கும் சத்துமாவு கலவையில் உள்ள வெல்லம் தரமானதா?

வெல்லத்தில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் சத்துமாவு கலவையில் உள்ள வெல்லம் தரமானதுதானா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 6 மாத குழந்தையின் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்கான தேவை அனைத்தும், தாய்ப்பால் மூலமாகக் கிடைப்பதைவிட கூடுதலாகத் தேவைப்படுகிறது. அதற்காக தமிழக அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்ககம் சார்பில் 6 மாதம்முதல் 6 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு … Read more

உறக்கம் இழந்த ஓபிஎஸ்; வந்து..வந்து..போகும் ஒட்டகம்!

தமிழகத்தில் ஆட்சியை இழந்த பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையே பனிப்போர் தொடங்கியது. அதிமுகவில் எனக்கு தான் அதிக செல்வாக்கு என இருவருமே மார்தட்டியதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கலகமாக மாறியது. இதை எதிர்பார்க்காத எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை முழுமையாக கைப்பற்ற வியூகம் வகுத்தார். இதையடுத்து பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கையில் போட்டுக்கொண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கடந்த மாதத்தில் நடத்தினார். இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி … Read more

லவ்வர் பக்கத்து பெட் எனக்குதான் வேணும்! மதுபோதையில் அடம்பிடித்த காதலனுக்கு அடி உதை!

தருமபுரி மாவட்டம் திப்பம்பட்டி அடுத்த கடம்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதாப் என்பவரும், அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரும் நண்பராக இருந்துள்ளனர். இந்நிலையில் உதயகுமார் போச்சம்பள்ளி அடுத்த கீழ் மைலம்பட்டி கிராமத்தை சேர்ந்த வைஸ்ணவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் உதய குமாரின் மனைவியுடைய தங்கை (பள்ளி மாணவி) மீது காதல் கொண்ட பிரதாப் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி மாணவி  கடந்த ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாமல் போச்சம்பள்ளி அரசு … Read more

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 19ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்…

சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறாத கோயில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக சிறுவாபுரி முருகன் கோவிலில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஓர் ஆண்டாக இத்திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றன. மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், இராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. மதிற்சுவர் … Read more

’நானும் உதயநிதியும் அண்ணன், தம்பியா எனக் கேட்பார்கள்’ – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: நானும் என்னுடைய மகனும் எங்கேயாவது வெளிநாடு சென்றால் அண்ணன், தம்பிகளா என்று கேட்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் இன்று (21.08.2022) பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை மாநகராட்சியினுடைய காவல்துறை, ஒருங்கிணைந்து நடத்திய “மகிழ்ச்சியான தெருக்கள்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் ஆர்றிய உரையில், “அனைவருக்கும் அன்பான வணக்கம். பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை மாநகராட்சியினுடைய காவல்துறை, ஆங்கில ஊடக்கத்துடன் இணைந்து, “மகிழ்ச்சியான தெருக்கள்” (Happy … Read more