தமிழக மக்களே உஷார்..! 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 21.08.2022 மற்றும் 22.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில … Read more

உதகை அருகே தலைகுந்தா பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த கரடி

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை தினமும் காண்கிறோம். இதில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெளியிடப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் கரடிகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கரடிகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. கரடிகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. கரடிகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. கரடியை நினைத்தாலே முதலில் வரும் வார்த்தை … Read more

ஆகஸ்ட் 23-25ல் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: ஆகஸ்ட் 23-25ல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னைக்கு வயது 383.. Save The blue பேரில் பெசன்ட் நகர் பீச்சில் தூய்மைப்பணி!

383வது சென்னை தினத்தையொட்டி , யமஹா மோட்டார் இந்தியா குழுமம் சார்பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் அரசு சாரா நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட யமஹா வாகன வாடிக்கையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கடற்கரை பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தினர். யமஹா நிறுவனத்தின் தலைவர் ஈஷின் சிஹானா மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையர் சினேகா … Read more

இங்கிலாந்து, அரபு நாடுகள் உட்பட 7 நாடுகளில் ஐ.ஐ.டி தொடங்க திட்டம்

Sourav Roy Barman UK, Gulf countries and Egypt among 7 locations on IIT expansion list: ஐ.ஐ.டி.,களின் உலகளாவிய விரிவாக்கத்திற்கான மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் கலந்தாலோசித்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, சவுதி அரேபியா, கத்தார், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை “இந்தியன் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி” பிராண்ட் பெயரின் கீழ் வெளிநாட்டு வளாகங்களுக்கு வருங்கால இடங்களாக அடையாளம் கண்டுள்ளது என்பதை … Read more

தீண்டாமையை ஒழிக்கும் ஆர்எஸ்எஸ், பாஜகவை திருமாவளவன் ஆதரிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

தீண்டாமை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆர்எஸ்எஸ், பாஜகவை திருமாவளவன் ஆதரிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார். பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தரவு மேலாண்மை பிரிவினருக்கு ஒருநாள் பயிற்சி முகாமில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்திருந்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது: திமுக தலைவர் மற்றும் அக்கட்சியின் பல்வேறு சீனியர்கள் இந்துமத நம்பிக்கைகளை புண்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து புகார் … Read more

உணவு பாதுகாப்பு… திமுக அரசு நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்!

பொது மக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதில் திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் மனிதப் பிறவி விழுமியது. அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்றால், நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற வேண்டுமென்றால், சுற்றுப்புறம் சுகாதாரமாக இருப்பதோடு, தரமான உணவும், பாதுகாக்கப்பட்ட குடிநீரும் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் தற்போது உணவுப் … Read more

இலங்கையிலிருந்து ஈழத்தமிழர்கள் 8 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் அரிச்சல்முனை மணல் தீடையில் தஞ்சம்

ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து ஈழத்தமிழர்கள் 8 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் அரிச்சல்முனை மணல் தீடையில் வந்திறங்கினர். மூன்று சிறுவர்கள் மற்றும் இரண்டு மாத கைக்குழந்தையுன் இரவோடு இரவாக படகில் வந்து மணல் தீடையில் தஞ்சம் அடைந்தனர். இவர்களை கடலோர காவல் படையினர் மீட்டுனர். மரைன் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடை காலம் முடிந்தது -அதிமுக அலுவலகத்திற்கு செல்ல தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்களா?

அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்த உத்தரவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜூலை 11ஆம் தேதி நடந்த வன்முறை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட்டுள்ளதால் தொண்டர்கள் கட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அதிமுக அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். இதனால் எடப்பாடி … Read more

பரந்தூர் பகுதியில் நீர்நிலைகள் பாதுகாக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் முழு விவரம்

சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையும் பகுதியில் சுற்றுப்புற நீர்நிலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்படும். மழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படும் என்று, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான கட்டுரைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 18-ம் தேதி ‘நீருக்குள் ஒரு விமான நிலையம்!’ என்ற தலைப்பில் … Read more