ஆதார் நகலை பயன்படுத்தி, பல லட்ச ரூபாய் கடன் பெற்று பண மோசடி.. கனரா வங்கியில் சம்பவம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கியில், மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் வாங்க அளித்த ஆதார் நகலை பயன்படுத்தி, பல லட்ச ரூபாய் கடன் பெற்று பண மோசடி நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி என்பவர் கூலி வேலை செய்த வரும் நிலையில், ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் கனரா வங்கியில் இருந்து 5 லட்ச ரூபாய் அவர் கடன் பெற்றதாகவும், அதனை கட்ட வலியுறுத்தியும் அவருக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இதனால், … Read more

இலங்கையில் சீன உளவுக் கப்பல் எதிரொலி: ரேடார் கண்காணிப்பில் ராமநாதபுரம் மாவட்ட கடல் எல்லைகள்

ராமேசுவரம்: இலங்கை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் வந்துள்ளதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டக் கடல் எல்லைகளில் ரேடார் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணு படைப்பிரிவு சார்பில் யுவான் வாங்க் என்ற பெயரில் உளவுக் கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இது 1, 2, 3, 4, 5, 6, 7 என்ற பெயர்களில் 7 உளவு கப்பல்கள் இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடலில் உலா வருகின்றன. இதில் சீன உளவு கப்பலான யுவான் வாங்க் … Read more

40 சதவீதம் விலை உயர்வால் சிவகாசியில் பட்டாசு விற்பனை ‘டல்’

சிவகாசி: சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு விலை 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் விற்பனை மந்த நிலையில் உள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 1,100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு உற்பத்திக்கு பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தவும், சரவெடி பட்டாசு தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவகாசியில் பட்டாசு தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது. ஆலைகளில் தற்போது பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டாசு அலுமினிய பவுடர், சிகப்பு உப்பு, வெடி உப்பு, சல்பர் … Read more

ராமஜெயம் கொலை வழக்கு : வாகன உரிமையாளர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

தமிழகத்தின் மையப்பகுதியாக திருச்சியை சேர்ந்தவர் கே.என். ராமஜெயம்.  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான இவர், திருச்சியின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வந்தார். இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் காலை தனது வீட்டில் இருந்து நடைப்பயிற்சிக்கு சென்ற இவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. சில மர்மநபர்கள் இவரை கடத்திச்சென்று படுகொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்போது திருச்சி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், .இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த … Read more

தீக்குளித்து இளைஞர் தற்கொலை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், எஸ். கொல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன். பி.இ பட்டதாரியான இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். … Read more

ஊர்வலம், கடலில் சிலை கரைப்பு நிகழ்வுகள்; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை: அரசின் வழிகாட்டுதல் குறித்து காவல்துறை விளக்கம்

மாமல்லபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை அமைத்து வழிபாடு செய்தல், சிலை கரைப்பு நிகழ்வுகள், ஊர்வலங்கள் தொடர்பான அரசின் வழிகாட்டுதல்கள் குறித்து, பல்வேறு அமைப்பு மற்றும் பொதுமக்களுடன் மாமல்லபுரத்தில் நேற்று போலீஸார் ஆலோசனை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடற்கரையோர கிராமங்களின் வழியாக, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படும். இதனால், விநாயகர் சதுர்த்தியின்போது, சிலை அமைத்து வழிபாடு செய்வது மற்றும் … Read more

கீழடி அகழாய்விற்கு டிரோன் மூலம் நிலங்களை அளவிடும் பணி துவக்கம்

திருப்புவனம்: கீழடி அகழாய்விற்காக டிரோன் மூலம் நிலங்களை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி மற்றும் சுற்று வட்டாரத்தில் 110 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டு, பள்ளிச்சந்தை திடலில் முதலாம் கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறை துவக்கியது. தொடர்ந்து கீழடியில் 2 ஏக்கர் அளவில் மட்டுமே அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள நூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கீழடி, … Read more

கோவை | 1 லட்சம் பேர் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்தனர்: முதல் ஆயிரம் பேருக்கு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை 1 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதை ஊக்கப்படுத்தும் வகையில் முதல் ஆயிரம் பேருக்கு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள், கோவை, பொள்ளாச்சி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைத் … Read more

மனைவி, மகன்கள் கைவிட்டதால் பிச்சையெடுத்த மாஜி ஏட்டுக்கு மறுவாழ்வு; எஸ்பி உத்தரவையடுத்து நடவடிக்கை

திங்கள்சந்தை: மனைவி, மகன்கள் கைவிட்டதால் பிச்சை யெடுத்து வந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டுக்கு போலீசார் மூலமே மறுவாழ்வு கிடைத்துள்ளதுகருங்கல்  அருகே தெருவுக்கடை அடுத்த பூட்டேற்றியை சேர்ந்தவர் விக்ரமன் (60). போலீஸ்  ஏட்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சித்ரா. கேரள மாநிலம்  காட்டாக்கடை பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து  வருகிறார். இதனால் விக்ரமன் குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வந்தார்.  இவர்களுடைய 2 மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது. ஒரு மகன் வெளிநாட்டிலும்,  மற்றொரு … Read more

களிமண் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி : விநாயகர் சதூர்த்தி விதிமுறைகளை வெளியிட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதூர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பது தொடர்பான விதிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆண்டு தோறும் ஆவனி மாதத்தில் வரும் வளர்பிறை சதூர்த்தி நாளில் விநாயகர் சதூர்த்தி தினம் கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருத்தப்படும் இந்த விநாயகர் சதூர்த்தி நாளில் மக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலை செய்து அதற்கு பூஜை செய்து வழிபட்டு, அடுத்த 3-வது நாளில் நீரில் … Read more