மருந்துகளை போதைக்கு பயன்படுத்துவது தீவிர குற்றம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!

புதுக்கோட்டையைச் சேர்ந்த அண்ணாதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டையில் நகர் பகுதியில் சொந்தமாக மெடிக்கல் வைத்து நடத்தி வருகின்றேன். என் மீது போதை ஊசி விற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரர் அண்ணாதுரை மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் போதை … Read more

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காகவும், 20 மாவட்டங்களுக்கு குடிநீருக்காகவும் தண்ணீர் வழங்குகிறது மேட்டூர் அணை. தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணைக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர் கதையாக உள்ளது. மிரட்டல் வரும் நேரங்களில் போலீசார் மேட்டூர் அணையில் வெடிகுண்டு சோதனை நடத்துவதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்துவர். மேலும் முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்புக்காக … Read more

டிஆர்பியில் தமிழ் தகுதித்தேர்வு அறிமுகம்

பிற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில், தமிழ் தகுதித்தேர்வு நடைமுறையை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், முதன்முறையாக தமிழ் தகுதித் தேர்வாக அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்த தமிழ் தகுதித் தேர்வு நடைமுறையைப் பின்பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் இதனை அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 30 கேள்விகள், 50 மதிப்பெண்களுக்கு … Read more

‘அரிதான மருந்துகளை போதைக்கு பயன்படுத்தக் கூடாது’ – உயர் நீதிமன்றம் கருத்து

மதுரை: ‘அரிதாக பயன்படுத்தப்படும் மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவதை ஏற்க முடியாது’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அண்ணாதுரை என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் மீது போதை ஊசி விற்பனை செய்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அண்ணாதுரை முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை நீதிபதி ஜி. இளங்கோவன் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “போதை ஊசி விற்பனை செய்ததாக … Read more

காசநோய் தடுப்பூசி விரைவில் அறிமுகம்: அமைச்சர் சொன்ன அப்டேட்!

காசநோயை ஊசிகளின் மூலம் குணப்படுத்தவும், குறுகிய காலகட்டத்தில் மருந்துகளை உட்கொண்டு குணப்படுத்தும் ஆராய்ச்சியை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிருவனம் மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் 65ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த மாதத்தில் ஒன்றிய அமைச்சரோடு இங்கு வரும் வாய்ப்பு … Read more

கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: மத்திய அமைச்சர் பேட்டி

திருச்சி: கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று திருச்சியில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் கூறினார். திருச்சி மாவட்டம் அதவத்தூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் நிறுவன தினம் மற்றும் வாழை வயல் தின விழாவில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் இன்று காலை விமானத்தில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் … Read more

எளியோரின் வலிமைக் கதைகள் 40: “கஸ்டமர் தர்ற புன்முறுவல்தான் எங்களுக்கான சர்ட்டிபிகேட்”

“அகத்தின் அழகு முகத்திலே” என்று சொல்லுவார்கள். முகம் பொலிவோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறவர்களிடம்தான் அதிக ஆர்வத்துடன் பேசுவார்கள் பழகுவார்கள். அப்படி முகம் பொலிவோடு இருப்பதற்கு சிகை அலங்காரம் ஒரு மிக முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. “தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்குப் போவென்று சொன்னாள் உன் அன்னை” என்று பள்ளிக்கு செல்லுகிற குழந்தையைகூட தலைவாரி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடியுள்ளார். அப்படி தலை வாருதல் என்பது அழகியலில் மிக முக்கியமான அங்கமாகவே கருதப்படுகிறது. … Read more

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி

மதுரை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி காய்ச்சல் காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் மதுரையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஐ பெரியசாமி, அதனைத் தொடர்ந்து ஓய்வில் இல்லாமல் செஸ் ஒலிம்பியாட் போட்டி, அமைச்சரவை கூட்டம், மாவட்டத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வத்தலகுண்டில், அவரது உறவினர் மரணமடைந்ததை தொடர்ந்து துக்க நிகழ்வில் பங்கேற்றார். அங்கு … Read more

விநாயகர் சிலைகளை கரைக்க புதிய வழிமுறைகள்..! – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த புதிய விதிமுறைகள்..!!

வருகின்ற 31 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட விநாயகர் பக்தர்கள் தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. விநாயகர் சிலை தயாரிக்க பயன்படுத்த வேண்டிய பொருட்கள் மற்றும் கரைக்க வேண்டிய விதிமுறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலையை கரைக்க தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் அறித்துள்ள விதிமுறைகள் : … Read more

நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை: நாகை, காரைக்கால், தூத்துக்குடி வஉசி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் ஒடிசா மாநிலம் அருகேயுள்ள  சாகர் தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த  தாழ்வுநிலை மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்குவங்கம் மற்றும்  ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்து சென்று வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழக கடலோர பகுதிகளுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாகை … Read more