இந்த பள்ளிகளுக்கு சிக்கல்: சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு!

சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தில் செயல்பட்டு வந்த சாய் விஹார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதலும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக கூறி, பள்ளியை மூன்று நாட்களில் மூடும்படியும், மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும் சேலத்தில் உள்ள வட்டார கல்வி அதிகாரி, … Read more

திருவாடானையில் பராமரிப்பின்றி கிடக்கிறது 100 ஆண்டு பழமையான கோயில் புதுப்பொலிவாகுமா?: புனரமைத்து குடமுழுக்கு நடத்த பக்தர்கள் கோரிக்கை

திருவாடானை: திருவாடானையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமகா மாரியம்மன் கோயில் பராமரிப்பு இன்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனை புனரமைப்பு செய்து குடமுழுக்கு விழா நடத்தி வழிபாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாடானை பேருந்து நிலையம் அருகில் மிகவும் பிரசித்திபெற்ற 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவில் ராமநாதபுரம் சமஸ்தானம் – தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மேலும் … Read more

கோவை: காயம்பட்ட காட்டு யானை… 5வது நாளாக தேடுதல் வேட்டை நடத்தும் வனத்துறை!

பி. ரஹ்மான் – கோவை மாவட்டம் கோவை ஆனைக்கட்டி வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஒற்றை காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடந்த நான்கு நாட்களாக தேடியும் கிடைக்காத நிலையில் நேற்றிரவு ஆனைக்கட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்திற்குட்பட்ட நான்கு இடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி வனப்பகுதியில் கடந்த 15 ஆம் தேதி உடல் நலத் குறைவு காரணமாக கடும் சோர்வுடன் அங்குள்ள ஆற்றின் ஓரமாக நின்றிருந்த ஒற்றை காட்டு … Read more

கோத்தகிரி  அரக்காடு தேயிலை தோட்டத்தில் சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரக்காடு பகுதியில் 4 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரக்காடு பகுதியில் கடந்த 10-ம் தேதி தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளி கிஷாந்த் என்பவரின் நான்கு வயது மகள் சாரிதாவை தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் கிராம பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க … Read more

எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டமா? நோ சொன்ன நீதிமன்றம்!

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணைநல்லூர் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட அரசு நிலங்களுக்கு அவர்கள் … Read more

கீழக்கரை கடற்கரை ‘கிளீன்’ஆனது

கீழக்கரை: தினகரன் செய்தி எதிரொலியாக கீழக்கரையில் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது.கீழக்கரையில் கடற்கரை ஓரங்களில் சேதமடைந்த படகு மரத்துண்டுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் குவிந்து கடும் துர்நாற்றம் வீசியது. மேலும் கீழக்கரை கடல் பகுதியிலும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்ததால் மீனவர்கள் கவலை அடைந்தனர். இவற்றை உடனே அகற்ற வேண்டும் என தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் எதிரொலியாக கீழக்கரை கடற்கரை பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. … Read more

ஸ்மார்ட் சிட்டி ஊழல்: முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார் இன்று தாக்கல் செய்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த மே மாதம் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில், ஒரு நபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 2015-ம் ஆண்டு … Read more

தமிழ் ஆராய்ச்சி மேம்பாடு: முதல்வர் ஸ்டாலினுக்கு ரவிக்குமார் எம்.பி., கடிதம்!

தமிழ் நூல் விவர அட்டவணைத் திட்டத்தை உயிர்ப்பித்து அதன்மூலம் தொடர்ந்து விவர அட்டவணைகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பல்வேறு பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கென்று தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய முக்கியமானதொரு நடவடிக்கை குறித்துத் தங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். … Read more

தமிழகத்தின் நிலுவைத்தொகையை உயர்த்திக் காட்டும் மத்திய அரசு: அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: தமிழகத்தில் மின்சார வழங்கல் சீராகவே உள்ளது. மின் தடை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் கொள்ள தேவையில்லை என்று கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மத்திய அரசின் மின் தொகுப்பிற்கு தமிழக அரசு சார்பில் செலுத்த வேண்டிய பாக்கி 70 கோடி மட்டுமே உள்ளது அது ஓரிரு நாட்களுக்குள் செலுத்தப்படும். மத்திய அரசின் போர்டலில் சரிவர வரவு வைக்கப்படாத காரணத்தால் நிலுவை அதிகமாக காட்டப்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். கரூரில் … Read more

பருவமழை துவங்கும் முன் கோமுகி அணை நிரம்பியது: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே கோமுகி  அணையின் நீர்மட்டம் 46 அடியாகும். இந்த அணையில் உள்ள ஆற்று பாசனம் மற்றும் முதன்மை கால்வாய் பாசனம் மூலம் சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின்மூலம் சுமார் 78க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கடந்த 10 ஆண்டுகளாக இந்த அணையில் நீர்பிடிப்பு பரப்பில் ஆக்கிரமிப்பு இருப்பதாலும்,  அணையின் நீர்பிடிப்பு பகுதி மண்ணால் தூர்ந்து போய் உள்ளதாலும் அதிகளவு … Read more