கோவையில் கஞ்சா விற்பனை செய்த 5 தனியார் கல்லூரி மாணவர்கள் கைது
கோவையில் கஞ்சா விற்றதாக 5 கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். … Read more