அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்து.. இருவர் பலி..!

பொள்ளாச்சி அருகே அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம், சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இருவர் பலியானது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆழியாருக்கு சென்றுவிட்டு இரு இளைஞர்கள் தங்கள் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர். அங்கலக்ககுறிச்சி பகுதியில் முன் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற அவர்கள், அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பறந்து சென்று மோதினர். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இருவரும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு … Read more

புதுக்கோட்டையில் ஜல் ஜீவன் மிஷன் முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: ஜல் ஜீவன் மிஷன் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை வயல் பிளானஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முத்துசாமி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-ல் ரூ.96.60 லட்சம் மதிப்பில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்துக்கான ஒப்பந்தம் எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை … Read more

போலீசாருக்கு செம ஹாப்பி நியூஸ்..! – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!

இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழக சட்டசபையில் கடந்த மே மாதம் 10ம் தேதி காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசும்போது, போலீசாருக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதை தொடர்ந்து, தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இதன் மூலம் 10 ஆயிரத்து 508 … Read more

”ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு வாசல் திறந்துவிடுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?” –சீமான் கண்டனம்

”வார்த்தைக்கு வார்த்தை, ‘திராவிட மாடல் அரசு’ என கூறும் முதல்வர் ஸ்டாலின், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு வாசல் திறந்துவிடுவதுதான் திராவிட மாடல் அரசா? என்பதை விளக்க முன்வர வேண்டும்” என விமர்சித்துள்ளார் சீமான்.   நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-   ”தமிழக அரசுக்குச் சொந்தமான கல்வி தொலைக்காட்சியின் முதன்மைசெயல் அலுவலராக மணிகண்ட பூபதி எனும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரை நியமனம் செய்திருக்கும் திமுக அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சமத்துவத்தையும், … Read more

மதுரையில் பி.டி.ஆர் கார் மீது தாக்குதல்: செருப்பு அரசியலில் சிக்கிய திருச்சி பிரபலம்

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்தில் திருச்சி தொழிலதிபர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த விபரம் வருமாறு; ஜம்மு-காஷ்மீர் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் பலியானார். அவரது உடல் நேற்று முன் தினம் தனிவிமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. இதையொட்டி ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் … Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை, சினிமா துணை நடிகர் மீது பாய்ந்தது போக்சோ..!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சினிமா துணை நடிகரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவர் சினிமா மற்றும் நாடகங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார்.  இவரது வீட்டிற்கு அதே பகுதியில் வசிக்கும் சினிமாத்துறையை சேர்ந்த தம்பதிகளின் 6 வயது மகள் இவரது வீட்டிற்கு விளையாட வந்துள்ளார்.  அப்போது அந்த சிறுமியை அவரின் வீட்டில் உள்ள அறைக்கு அழைத்து சென்ற அவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது … Read more

ஆக.20-ல் ஒண்டி வீரன் நினைவு தபால்தலை வெளியீடு

புதுடெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தபால்தலையை வெளியிட ஒப்புதல் அளித்த, மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு மத்திய தகவல் ஒலிப்பரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தபால்தலையை வெளியிட ஒப்புதல் அளித்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் திருநெல்வேலியில் … Read more

இபிஎஸ்ஸுக்கு இருந்த துணிச்சல் ஸ்டாலினுக்கு இல்லாமல் போனது ஏன்?

அன்று புறக்கணிப்பு: ஏப்ரல் 14… தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு தேநீர் விருந்துக்காக அழைப்பு விடுத்திருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவற்றை மாதக்கணக்கில் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். ஒப்புதல் அளிக்கும்படி கேட்டால் அவை பரிசீலனையில் உள்ளது என்ற ஒரே பதிலே அவரிடம் இருந்து வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் … Read more

”தம்பியாக கேட்கிறேன்.. இதனை தயங்காமல் செய்யுங்கள்”..ஸ்டாலினிடம் திருமாவளவன் வைத்த கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கலைவாணர் அரங்கில் மணிவிழா கொண்டாட்டம் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பேசிய திருமாவளவன், “பெரியாரித்தை அண்ணா செழுமைப்படுத்தினார். கலைஞர் வலிமைப்படுத்தினார். நீங்கள் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) அதை முழுமைப்படுத்த வேண்டும். உங்கள் தம்பியாகக் கேட்கிறேன். பெரியாரியத்தை முழுவீச்சில் கொண்டு செல்வதில் உங்களிடம் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது. திமுக என்ற … Read more

#மதுரை || கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

மதுரை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கே.பரசுராமன்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி சித்ரா (23). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சித்ரா வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து … Read more