நகை, கணக்கு விவரம் – சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் நகைகள் மற்றும் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனக சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய கோவில் தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு பக்தர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தெய்வத் தமிழ் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சிதம்பரம் நடராஜர் கோயில் கனக … Read more

பாஜக டூ ரஜினி டூ தனிக்கட்சி டூ பாஜக… அரசியல் களத்தில் ஒரு ரவுண்டு வந்த ரா.அர்ஜுனமூர்த்தி!

ரா.அர்ஜுனமூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைந்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. பல்வேறு தொழில்களை நடத்தி வரும் பிரபல தொழிலதிபராக விளங்குகிறார் ரா.அர்ஜுனமூர்த்தி. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். இதன் விளைவாக தமிழக பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு மாநில வர்த்தகப் பிரிவு தலைவர் பதவி அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அறிவு சார் பிரிவின் தலைவராகவும் இருந்திருக்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ரா.அர்ஜுனமூர்த்தி மனைவியின் பள்ளி தோழி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பாஜக முன்னெடுத்த … Read more

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அரைகுறை ஆடையுடன் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி

Ramanathapuram District News: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில், ஆபாச நடனம் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆபாச நடனம் ஆடக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவும் போலீசார் முன்னிலையிலேயே நடைபெற்ற ஆபாச நடன நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதுகுளத்தூர்  அருகே உள்ளது வாகைக்குளம் கிராமம். இங்குள்ள கிருஷ்ண ஜெயந்தி விழா  கடந்த சிலநாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது இதில் தேர் ஊர்வலம், உரியடி நிகழ்ச்சி … Read more

குஜிலியம்பாறை அருகே இறந்த கோயில் காளைக்கு 72 கிராம மக்கள் அஞ்சலி

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே இறந்த கோயில் காளைக்கு கும்மி, தேவராட்டம் ஆடி 72 கிராம மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். குஜிலியம்பாறை  ஒன்றியத்தில் ஒரு சமூகத்தினர் சலகருது என்ற கோயில் காளைகளை வளர்த்து  வருகின்றனர். இவர்களது குலதெய்வம் வழிபாட்டின் போது நடைபெறும் திருவிழா  நாட்களில் கோயில் காளைக்கு முக்கியத்துவம் தரப்படும். மேலும் திருவிழா  இறுதி நிகழ்ச்சியாக நடக்கும் சலகருது ஓட்ட பந்தயங்களில் கோயில் காளை  பங்கேற்கும். திருவிழாக்களில் மட்டுமே பங்கேற்பதால் இவை சாமி மாடுகள்  என்றழைக்கப்படுகிறது. … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம்: நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மனு – நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுக்களை நாளை விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு … Read more

TNPSC Group 4 தேர்வு; கட் ஆஃப் எப்படி இருக்கும்? ரிசல்ட் எப்போது?

TNPSC Group 4 VAO exam expected cut off and result date: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பிரிவு வாரியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு வரும் என்பதை இப்போது பார்ப்போம். தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை … Read more

தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் அரசின் விதிகள் செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசின் விதிகள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் பணி நியமனம் மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய பணி விதிகள் கடந்த 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும், ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி … Read more

ஐந்து நாள்களுக்கு கனமழை தான்: உங்க ஊர் லிஸ்டுல இருக்கான்னு பாருங்க!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஐந்து தினங்களுக்கு எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பது குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (22.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, … Read more

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ 22.08.2022:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 23.08.2022:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி … Read more

குமரி மாவட்டத்தில் 1.70 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்தனர்-வீடு வீடாக சென்று பதிவு செய்யும் அலுவலர்கள்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 92 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்களர்கள் 7 லட்சத்து 92 ஆயிரத்தி 410 பேர், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 950 மற்றும் இதர வாக்காளர்கள் 195 பேர் உள்ளனர். இந்தநிலையில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைத் தடுக்கவும், ஒரு வாக்காளரின் விவரம் ஒரே தொகுதியில் … Read more