அனைவரும் அர்ச்சகராகும் திட்டம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணிபுதிய விதிகள் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. அதில்,18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஒராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.  … Read more

மேட்டுப்பாளையத்தில் 40 மாடுகள் மீது ஆசிட் வீச்சு: போலீசார் தீவிர விசாரணை…

கோவை: மேட்டுப்பாளையத்தில் 40 மாடுகள் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசி இருக்கிறார்கள். ஆசிட் வீச்சால் மாடுகளின் தோள்கள் சுருங்கி, தோல் கருகி காயம் ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் கல்லார் என்ற இடத்தில் உள்ள ரயில்வே கேட் அருகில் ராஜ்குமார் என்பவர் 40 எருமை மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ராஜ்குமார் தனது இடத்தில் கட்டி வைத்து பராமரித்து வந்த  40 மாடுகளையும் பார்த்தபோது அதனுடைய தோல்கள் சுருங்கிய நிலையிலும், சில இடங்களில் தோல்கள் உரிந்தும் காணப்பட்டது. … Read more

செங்கல்பட்டு: பயணிகள் ரயிலில் கேட்பாரற்று கிடந்த பை – சோதனையில் சிக்கிய கஞ்சா

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை சோதனை செய்தபோது 9 கிலோவை கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் காச்சிக்கூடாவில் இருந்து வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில் வழக்கம்போல ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயிலின் அனைத்து பெட்டிகளையும் சோதனையிட்டனர். அப்போது முன்பதிவில்லாத ஒரு ரயில் பெட்டியின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று சிவப்பு பை ஒன்று கிடந்துள்ளது. அதை கண்ட ரயில்வே காவலர் அந்தப் பையை ரயில்வே … Read more

நிதித் துறைக்கு பொருத்தம் இல்லாமல் விமர்சனங்களை வைக்கிறார் பிடிஆர்: வானதி சீனிவாசன்

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டுவதில்லை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார். கோவை பெரியகடை வீதி, தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருக்கு மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, இ-ஷ்ரம் எனும் அமைப்புசாரா தொழிலாளர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற வானதி சீனிவாசன் கூறியதாவது: அமைப்புசாரா தொழிலாளர் நல … Read more

அர்ச்சகர்கள் நியமனம்: அரசு விதிகள் செல்லும் – ஆனால்.. இப்படியொரு ட்விஸ்ட்!

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு அறிவித்த புதிய விதிகளை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. அதில்,18 … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு- நாளை விசாரணை

கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து இருந்தார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், … Read more

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள், சரக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தனியார் பங்களிப்புடன் கப்பல் சேவை துவங்கப்பட உள்ளதாக பேரவையில் ரங்கசாமி கூறியுள்ளார். 

மேட்டுப்பாளையம்: மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள்

மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (39). விவசாயியான இவர், 10 ஏக்கர் விவசாய விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்து பாக்கு மற்றும் வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருவதோடு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். நாள்தோறும் காலையில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள மலையடிவார பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை நேரத்தில் திரும்பவும் ஓட்டி … Read more

இலவசங்கள் தமிழகத்தை ஏழ்மை நிலைக்கு தள்ளிவிடவில்லை: உச்ச நீதிமன்றத்தில் திமுக வாதம்

புதுடெல்லி: இலவசங்கள் என்று பொதுமைப்படுத்தி அழைக்கப்படும் நலத்திட்டங்களால் தமிழக அரசு ஏழ்மைக்கு தள்ளப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் சார்பில் எழுத்துபூர்வமாக வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்களால் மக்கள் மத்தியில் வருமான இடைவெளி குறைந்துள்ளது. மாநில வளர்ச்சிக்கு அது வித்திட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற திட்டங்கள் தான் தமிழகத்தை ஒட்டுமொத்த பொருளாதார வளார்ச்சி குறியீட்டின் அடிப்படையில் தேசத்தில் முதல் மூன்று மாநிலங்கள் பட்டியலில் இடம்பெறச் … Read more

ராஜிவ்காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி: காங்கிரஸ் செம பிளான்!

சென்னை வரும் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் ரூபி மனோகர், அசன் மவுலானா, மாவட்ட தலைவர்கள் சிவ … Read more