ராஜிவ்காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி: காங்கிரஸ் செம பிளான்!

சென்னை வரும் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க

கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் ரூபி மனோகர், அசன் மவுலானா, மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன், ரஞ்சன் குமார், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, திருவான்மியூர் மனோகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப் பெருந்தகை, “மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்துக்கு 31 ஆண்டுகள் கழித்து ராகுல்காந்தி செப்டம்பர் 7ஆம்தேதி காலை வருகை தர உள்ளார். இதற்காக 6ஆம்தேதி இரவு சென்னை வரும் அவருக்கு காங்கிரசார் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி புறப்பட்டு செல்லும் அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை தொடங்குகிறார். 7ஆம் தேதி இரவு கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். தமிழகத்தில் 4 நாட்கள் 59 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்து வருகிறது” என்று கூறினார்.

குமரியில் நடை பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி 148 நாட்கள் 3,500 கி.மீ தூரம் 12 மாநிலங்கள் வழியாக செல்கிறார். இது 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக அமையும் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.