கருணாநிதி குறித்து அவதூறு வீடியோ – இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்குப்பதிவு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து ட்விட்டரில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக கோவை காவல்துறை இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. கோவை கெம்பட்டி காலனியில் இயங்கும் இந்து மக்கள் கட்சி அலுவலகத்திலிருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் சமூகவலைதள கணக்குகளை கையாண்டு வருகின்றனர். அவர்கள் கடந்த 7ஆம் தேதி வெளியிட்ட ஒரு வீடியோவில் கருணாநிதி பற்றி அவதூறாக பதிவிட்டிருந்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணி அளித்த அந்தப் புகாரின் … Read more

தமிழகத்தில் இதுவே முதல் முறை.. தங்கப் பொருள் கண்டுபிடிப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பரும்பு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 3-வது கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை இயக்குநர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில், 15-க்கும் அதிகமான குழிகள் அமைக்கப்பட்டு, அதில் 40-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு நடைபெறும் அகழாய்வுப் பணியில் இதுவரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், பழங்கால … Read more

காரில் சென்ற பெண்ணை கத்தி முனையில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்.. 5 பேர் கொண்ட கும்பல் கைது!

சென்னை போரூர் அருகே காரில் சென்ற பெண்ணை கத்தி முனையில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்முறை செய்து நகை பறித்து சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். போரூரைச்  சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார். கொளுத்துவான்சேரி அருகே சென்ற போது காரை வழி மறித்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரை தாக்கி விரட்டி விட்டு பெண்ணுடன் காரை கடத்திச் சென்றனர். பின்னர் … Read more

தோண்ட தோண்ட அற்புதம்… சிவகளை அகழாய்வில் தங்கம் கண்டெடுப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளையில் நடந்து வரும் அகழாய்வில் தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கடந்த 2 வருடங்களாக மாநில அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த மார்ச் மாத இறுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணிகள் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இதற்காக சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீ மூலக்கரை பகுதியில் இறந்தவர்களை … Read more

கொடநாடு வழக்கு விசாரணை: ஸ்டாலின் சொன்னதும்…செய்ததும்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது 2017ம் ஆண்டு நடைபெற்ற கொடநாடு கொலை கொள்ளை வழக்குகளை தீர விசாரித்து அதன் பின் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பதவியேற்றபோது, இந்த விவகாரம் சமந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று முதல்வர் கூறியிருந்தார். மேலும் இதில் அரசியல் தலையீடு இருக்காது என்று கூறினார். இந்நிலையில் கடந்த 14 மாதங்களாக சிறப்பு புலனாய்வு குழு இந்த விவகாரம் தொடர்பாக நடத்திய விசாரணையில் குறிப்பிட தகுந்த  முன்னேற்றம் இல்லை என்றே கூற … Read more

16 நாட்களுக்கு பிறகு கீழச்சேரி பள்ளி திறப்பு.. ஒரே நாளில் 23 மாணவிகள் டிசி வாங்கினர்..!

திருவள்ளூர் அருகே, விடுதியில் மாணவி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்ட கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 16 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் செயல்பட தொடங்கியது. திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவி சரளா (17) கடந்த மாதம் 25ம் தேதி காலை விடுதி அறையின் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. … Read more

செஸ் ஒலிம்பியாட்: யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் குறிப்பிட்டு பிரதமருக்கு முதல்வர் நன்றி

சென்னை: “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில், ” 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும், அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்” என்று தெரிவித்து … Read more

விருந்தோம்பலும், சுயமரியாதையும்: மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின்

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக தமிழ்நாடு அரசை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்பித்தார். 12 நாள்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 9) கோலாகலமாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கும் … Read more

நெகிழி பாட்டிலில் வருகிறதா மது? என்ன சொல்கிறது டாஸ்மாக் நிறுவனம்?

மதுவை நெகிழி பாட்டிலில் விற்பது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், தற்போதுவரை நெகிழி பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் பதில் விளக்கம் அளித்துள்ளது. பிரதாப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக நெகிழி பாட்டில்களில் விற்க 1996 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. அப்படி பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டால் தீங்கு ஏற்படும் என்பதால் … Read more

லதா ரஜினிகாந்த் மீதான வழக்கில் 3 பிரிவு ரத்து – கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி, ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றார். இதற்காக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையொப்பம் இட்டிருந்தார். இந்நிலையில் முரளி கடனாக பெற்ற பணத்தை அபிர்சந்த் நஹாருக்கு கொடுக்கவில்லை. இதனால் அபிர்சந்த் நஹார் முரளி, லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் … Read more