நீ கிறிஸ்டியன் தான..? எச். ராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் தரக்குறைவு பேச்சு

பாஜக மாவட்ட தலைவர் டாக்டர். சரவணன் திமுகவில் இணைந்த விவகாரத்தால் பாஜக நிர்வாகிகள் புலம்பலில் உள்ளனர். தென்மாவட்டங்களில் காலூன்றியாக வேண்டும் என்ற இலக்கில் பாஜக இருந்து வருகிறது. முதலில் மதுரையை கைப்பற்றிவிட்டால் மற்ற மாவட்டங்களை எளிதாக அடைந்து விடலாம் என்று எண்ணி மதுரை மாவட்ட பொறுப்பு டாக்டர். சரவணனுக்கு வழங்கப்பட்டது. ஆனால், ஒரேநாளில் திமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டு அதே நாளில் திமுகவில் இணைந்துவிட்டார் டாக்டர் சரவணன். இந்த நிலையில் காரைக்காலில் இன்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் … Read more

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

மதுரை அல்லாது சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி என ஒட்டுமொத்த தென் தமிழகத்திற்கும் மருத்துவ தலைநகரமாக விளங்கக்கூடியது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இக்கட்டடம் 1984ல் கட்டப்பட்டது.   சில ஆண்டுகளாக கட்டடத்தின் சுவர் பகுதிகளில் ஆங்காங்கே விரிசல் விட்டு காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால் மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு 90வது வார்டின், ஆப்பரேஷன் தியேட்டர் மேற்கூரையின், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதில் … Read more

கீழக்கரை பகுதியில் நிலத்தடி நீருக்கு வேட்டு வைக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கீழக்கரை: கீழக்கரை தாலுகாவில் மழை நீரை பாதுகாக்க சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதுடன் பலன் தரும் மரக்கன்றுகளை நடுவதற்கு உள்ளாட்சி அமைப்புகள் முன் வரவேண்டும். இதன் மூலம் அடுத்த 3 மாதங்களுக்கு தண்ணீர் எதிர்பார்ப்பின்றி மரங்கள் வளர்ந்து சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா கண்டங்கள் உட்பட 129 நாடுகளில் சீமை கருவேல மரங்கள் உள்ளது. 1870ல் சமையலுக்கான எரி பொருளாகவும் பயிர்களுக்கு வேலிகளாகவும் முதன் … Read more

அப்படி நிர்பந்தம் செய்தால் பெண்கள் செருப்பை கழற்றி அடிப்பார்கள்: ரேகா நாயர்

Rekha Nair open talks about adjustment in cinema industry: திரைத்துறையில் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லி நிர்பந்தம் செய்தால் பெண்கள் செருப்பைக் கழற்றி அடிப்பார்கள் என நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார். சன் டிவியின் பூவே உனக்காக வம்சம் உள்ளிட்ட சீரியல்களிலும், விஜய் டிவியின் பகல் நிலவு, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளவர் ரேகா நாயர். இவர் தற்போது பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்திலும் நடித்துள்ளார். இரவின் நிழல் படத்தில் … Read more

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை இயற்ற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் புலமை பெறாத வெளிமாநிலத்தவர் இனி தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேருவது தடுக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் … Read more

தமிழக மக்களே உஷார்..! 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 21.08.2022 மற்றும் 22.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில … Read more

உதகை அருகே தலைகுந்தா பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த கரடி

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை தினமும் காண்கிறோம். இதில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெளியிடப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் கரடிகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கரடிகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. கரடிகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. கரடிகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. கரடியை நினைத்தாலே முதலில் வரும் வார்த்தை … Read more

ஆகஸ்ட் 23-25ல் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: ஆகஸ்ட் 23-25ல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னைக்கு வயது 383.. Save The blue பேரில் பெசன்ட் நகர் பீச்சில் தூய்மைப்பணி!

383வது சென்னை தினத்தையொட்டி , யமஹா மோட்டார் இந்தியா குழுமம் சார்பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் அரசு சாரா நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட யமஹா வாகன வாடிக்கையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கடற்கரை பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தினர். யமஹா நிறுவனத்தின் தலைவர் ஈஷின் சிஹானா மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையர் சினேகா … Read more

இங்கிலாந்து, அரபு நாடுகள் உட்பட 7 நாடுகளில் ஐ.ஐ.டி தொடங்க திட்டம்

Sourav Roy Barman UK, Gulf countries and Egypt among 7 locations on IIT expansion list: ஐ.ஐ.டி.,களின் உலகளாவிய விரிவாக்கத்திற்கான மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு, வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் கலந்தாலோசித்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, சவுதி அரேபியா, கத்தார், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை “இந்தியன் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி” பிராண்ட் பெயரின் கீழ் வெளிநாட்டு வளாகங்களுக்கு வருங்கால இடங்களாக அடையாளம் கண்டுள்ளது என்பதை … Read more