கரூர் துயரம்: சென்னை ஐகோர்ட் நீதிபதியை விமர்சித்த காவல்துறை ஓய்வு அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிக்கு, ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. கரூரில், செப்டம்பர் 27ம் தேதி தவெக. தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து, காவல்துறையில் பணியாற்றி ஓய்வு … Read more

பிடிபட்ட ரோலக்ஸ்: ஒற்றை காட்டு யானை பிடிக்கப்பட்டதில் விவசாயிகள் மகிழ்ச்சி

நீண்ட நாட்கள்  போராட்டத்திற்கு பிறகு யானையை பிடித்த  வனத்துறையினருக்கு தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நன்றி தெரிவித்தார்.

சென்னையிலிருந்து கடந்த 2 நாட்களில் அரசுப் பேருந்துகளில் 3.56 லட்சம் பேர் பயணம்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: கடந்த இரண்டு நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து முதல் நாள் 1 லட்சத்து 28 ஆயிரம் பேரும், இரண்டாவது நாள் 2 லட்சத்து 28 ஆயிரம் பேரும் என 3 லட்சத்து 56 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து சென்னை மாதவரத்துக்கு, குளிர்சாதன வசதி பேருந்து சேவையினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (அக்.18) தொடங்கி வைத்தார். பின்னர் … Read more

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: தனியார் பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகச் சட்டம் 2019- ல், தனியார் பல்கலைக் கழகம் அமைக்க தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 100 ஏக்கர் பரப்பளவு நிலம் தேவை என்ற சட்டப் பிரிவை திருத்தம் செய்யும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் … Read more

இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா: கரூர் தொகுதி மக்களுக்கு செந்தில் பாலாஜி தீபாவளி பரிசு

கரூர்: கரூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா பரிசு வழங்கும் பணியினை கரூர் கோடங்கிபட்டியில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ சார்பில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 88,000 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் கூடிய சிறிய சில்வர் அண்டா வழங்கும் பணி கரூர் மாநகராட்சி 48-வது வார்டு கோடங்கிப்பட்டியில் தொடங்கியது. கரூர் கோடங்கிபட்டியில் தீபாவளி பரிசு வழங்கும் பணியினை இன்று (அக்.18ம் … Read more

20 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி

காஞ்சிபுரம்: செம்​பரம்​பாக்​கம் ஏரி​யின் நீர்​மட்​டம் நேற்​றைய நில​வரப்​படி 19.28 அடி​யாக உள்​ளது. ஏரி​யின் மொத்த கொள்ளளவு 2429 மில்​லின் கன அடி​யாகும். நீர் வரத்து விநாடிக்கு 820 கன அடி​யாக பதி​வாகி​யுள்​ளது. இதனால் ஏரி​யின் மொத்த உயர​மான 24 அடி​யில், நீர்​மட்​டம் தற்​போது 20 அடியை நோக்​கிச் சென்று கொண்​டிருக்​கிறது. அணை​யின் பாது​காப்பு கருதி ஏரி​யில் 21 முதல் 22 அடி வரை மட்​டுமே நீர் தேக்கி வைக்​கப்​படும். இந்த ஏரி​யின் ஐந்து கண் மதகு​களின் மீது … Read more

மேட்டூர் அணையில் வேலைவாய்ப்பு! மீன் பிடிக்க தெரிந்தால் போதும் – முழு விவரம்

Mettur Dam Job : மேட்டூர் அணை அரசு மீன்பண்ணை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள 8 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைக் கூட்​டம் கடந்த அக்​.14-ம் தேதி தொடங்கி முதல்​நாளில் மறைந்த உறுப்​பினர்​களுக்கு இரங்​கல் குறிப்​பு, கரூர் சம்​பவத்​தில் இறந்த 41 பேர் மறைவுக்கு இரங்​கல் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. அக்​.15-ம் தேதி இந்த நிதி​யாண்​டுக்​கான முதல் துணை பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டது. அன்று கரூர் சம்​பவம் தொடர்​பாக விவாதம் நடை​பெற்​றது. அக்​.16-ம் தேதி துணை பட்​ஜெட் மீதான விவாதம் நடை​பெற்​றது. நிறைவு நாளான நேற்​று, விவாதத்​துக்கு நிதி​யமைச்​சர் பதி​லுரை அளித்​தார். 16 மசோ​ … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ், இனி பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றலாம்

TNPSC : தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட உள்ளது.  

தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தெருக்​களுக்கு வைக்​கப்​பட்​டுள்ள சாதிப் பெயர்​களை நீக்​கு​வது தொடர்​பான அரசாணை மீது அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கக் கூடாது என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இந்து வழக்​கறிஞர் முன்​னணி​யின் மாநில துணைத் தலை​வர் பரமசிவம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: கிராமங்​கள், குடி​யிருப்​பு​கள், தெருக்​கள், சாலைகள், நீர்​நிலைகளுக்​கான சாதிப் பெயர்​களை நீக்​கு​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்கி தமிழக அரசு 6.10.2025-ல் அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. அதில், புதிய பெயரிடும் பணி​களை நவம்​பர் 19-ம் தேதிக்​குள் … Read more