மின்சார திருத்த மசோதாவுக்கு பஞ்சாப்பில் எதிர்ப்பு ஏன்?

மின்சார திருத்த மசோதா (2022) நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை (ஆக.8) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மசோதா தாள்களை தீயிட்டு கொளுத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் ஆம் ஆத்மி, எதிர்க்கட்சிகளான ஷிரோமணி அகாலிதளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.இதற்கிடையில் ட்விட்டரில், ‘மின்சார திருத்த மசோதா ஏழை மக்களுக்கு நன்மை பயக்கும். … Read more

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 10) இந்த மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு … Read more

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் இன்று மிதமான மழை வாய்ப்பு

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் … Read more

கூடங்குளம் | முழு மின்சாரத்தையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் – மத்திய மின் துறைக்கு தமிழ்நாடு மின்வாரியம் கடிதம்

சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைக் கருத்தில்கொண்டு, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4-வது அலகில் உற்பத்தி செய்யப்பட உள்ள, தலா 1,000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்று மத்திய மின் துறைக்கு, தமிழ்நாடு மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக 3 மற்றும் 4-வது அலகுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், 3-வது அலகில் வரும் 2025 மே … Read more

ஆக.15-ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை: சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும், வீடுகளில் தேசியக் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டுதல்களில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம்தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராமசபைக் கூட்டத்தை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் … Read more

ஸ்கூட்டருடன் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட ஆசிரியை..! பாய்ந்து காப்பாற்றிய காவலர்..!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற அரசு பள்ளி ஆசிரியை மீது மற்றொரு வாகனம் மோதியதில் வாகனத்துடன் ஆற்றுக்குள் தூக்கிவீசப்பட்டு தத்தளித்த ஆசிரியையின் உயிரை ஆற்றில் குதித்து போலீஸ்காரர் காப்பாற்றினார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மகிழஞ்சேரியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவரது மனைவி உஷா . இவர் நன்னிலம் அடுத்த ஆணைக்குப்பம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து பள்ளிக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற ஆசிரியை உஷா, பனங்குடி அருகே … Read more

செஸ் ஒலிம்பியாட்: ‘வரவேற்ற உடை’யில் வழியனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்புப் பாடலில் அணிந்து இருந்த கருப்பு உடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவு விழாவில் கலந்துகொண்டார். சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கமும், அர்மீனியா வெள்ளியும், இந்தியா பி வெண்கலமும் வென்றது. மகளிர் பிரிவில் உக்ரைன் தங்கமும், … Read more

‘ப்ரா’ அணியாமல் இருப்பதே ஆரோக்கியம்: அறிவியல் கூறும் உண்மை

ப்ரா இல்லாமல் ஒருநாள் என்ற பரப்புரை ஒருபுறம் கேட்கிறது. அதெல்லாம் நமக்கெதுக்குப்பா என சிலர் காதைப் பொத்திக் கொள்ளும் நிலையில்தான், இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டி பெசன்கான் மருத்துவமனை மருத்துஆராய்ச்சி படிப்பு மையத்தின் விரிவுரையாளர் ஜூன் டெனிஸ் ரெவ்லின் என்பவர் பெண்களின் உடல் ஆரோக்கியத்துக்கு ப்ரா அணிவது நல்லதா? அல்லது ப்ரா அணியாமல் இருப்பதா என ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.18 வயது முதல் 35 வயது கொண்ட 330 பெண்கள் இந்த ஆராய்ச்சியில் தன்னார்வத்துடன் … Read more

ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை.. தலை துண்டாகி உயிரிழப்பு.!

ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதில் முதியவரின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று … Read more

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: டிரம்ஸ், வீணை, கீ போர்டு, புல்லாங்குழல் இணைந்து ஒலித்த பாடல்கள் 

சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் டிரம்ஸ், வீணை, கீ போர்டு, புல்லாங்குழல் ஆகிய நான்கு கருவிகளில் இருந்து ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ பாடல் இசைக்கப்பட்டது. சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் … Read more