ஊடகங்களில் சொல்லப்பட்ட செய்தி தவறானது -அமைச்சர் மூர்த்தி விளக்கம்

Parandur Airport: சென்னை புதிய விமான நிலையம் அமையவுள்ள காஞ்சிபுரம் வட்டம் பரந்தூர் கிராமத்தில் உயர் மதிப்பில் பதிவான ஆவணம் குறித்து ஊடகங்களில் வந்த செய்தி குறித்த உண்மை நிலை என்ன என்பதை தமிழக வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் என்ன கூறியிருக்கிறது என்பதைக் குறித்து அறிந்துக்கொள்ளுவோம்.  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிக்கையில் கூறியதாவது,  சென்னை புதிய விமான நிலையம் அமையவுள்ள காஞ்சிபுரம் வட்டம் … Read more

ஆன்லைனில் வேலை தேடிய இளம்பெண்- மோசடி செய்து ரூ.6 லட்சத்தை அபேஸ் செய்த இளைஞர்!

சென்னையில் ஒ.எல்.எக்ஸ் செயலியில் பகுதி நேர வேலை தேடிய பெண்ணை நூதன முறையில் மோசடி செய்து ஆறு லட்சம் ரூபாய் ஏமாற்றிய திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆவடி கோயில் பதாகை பகுதியை சேர்ந்தவர் 24 வயதான சந்தியா. கடந்த மே மாதம் வீட்டில் இருந்தபடி பணியாற்ற ஆன்லைனில் வேலை தேடி உள்ளார் சந்தியா. அப்போது ஒ.எல்.எக்ஸ் எனும் தனியார் வர்த்தக செயலின் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சந்தியாவுக்கு அறிமுகமாகியுள்ளார். வீட்டில் இருந்தபடி பேக்கிங் … Read more

'பத்திரப்பதிவுத் துறையில் சட்டமீறல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன' – மநீம கண்டனம்

சென்னை: “புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பத்திரப்பதிவுத் துறையின் நம்பகத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது” என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: “புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப் பத்திரப்பதிவு … Read more

ஸ்டாலினிடம் சென்ற ரிப்போர்ட்: இனி அதிரடி கைது தான்!

ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார் இன்று (ஆகஸ்ட் 20 ) தாக்கல் செய்தார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2015ஆம் ஆண்டு சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது. நகரம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. பல … Read more

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா – அமைச்சர் தகவல்

அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி, சென்னை மாநகரப் பேருந்துகளில் முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது என்றும், அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் திருமாவேலனின் ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் புதுக்கோட்டை வருகை தந்திருந்தார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த … Read more

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 14 மயான பூமிகளில் எல்.பி.ஜி தகன மேடை

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள 14 மயான பூமிகள் திரவ பெட்ரோலியம் என்ற எல்.பி.ஜி. தகன மேடையாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநகரை அழகுப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற பணிகள், சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் செய்யப்படுகிறது. அதன்படி, சி.பி.சி.எல்., நகர், புழல், முல்லை நகர், ஜி.கே.எம். காலனி உள்ளிட்ட 14 மயான பூமிகளை மாநகராட்சி … Read more

மருந்துகளை போதைக்கு பயன்படுத்துவது தீவிர குற்றம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!

புதுக்கோட்டையைச் சேர்ந்த அண்ணாதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டையில் நகர் பகுதியில் சொந்தமாக மெடிக்கல் வைத்து நடத்தி வருகின்றேன். என் மீது போதை ஊசி விற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரர் அண்ணாதுரை மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் போதை … Read more

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காகவும், 20 மாவட்டங்களுக்கு குடிநீருக்காகவும் தண்ணீர் வழங்குகிறது மேட்டூர் அணை. தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணைக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர் கதையாக உள்ளது. மிரட்டல் வரும் நேரங்களில் போலீசார் மேட்டூர் அணையில் வெடிகுண்டு சோதனை நடத்துவதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்துவர். மேலும் முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்புக்காக … Read more

டிஆர்பியில் தமிழ் தகுதித்தேர்வு அறிமுகம்

பிற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில், தமிழ் தகுதித்தேர்வு நடைமுறையை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், முதன்முறையாக தமிழ் தகுதித் தேர்வாக அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்த தமிழ் தகுதித் தேர்வு நடைமுறையைப் பின்பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் இதனை அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 30 கேள்விகள், 50 மதிப்பெண்களுக்கு … Read more

‘அரிதான மருந்துகளை போதைக்கு பயன்படுத்தக் கூடாது’ – உயர் நீதிமன்றம் கருத்து

மதுரை: ‘அரிதாக பயன்படுத்தப்படும் மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவதை ஏற்க முடியாது’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அண்ணாதுரை என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் மீது போதை ஊசி விற்பனை செய்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அண்ணாதுரை முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை நீதிபதி ஜி. இளங்கோவன் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “போதை ஊசி விற்பனை செய்ததாக … Read more