புதிய சுமை.. ஏடிஎம் கட்டணத்தை அதிகரித்த வங்கிகள்.. மக்களே உஷார்..!

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, பல வங்கிகளும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. எந்தெந்த வங்கிகள் எவ்வளவு இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கின்றன. பல வங்கிகளும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. மற்ற வங்கிகள் ஏடிஎம்களைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளன. அனைத்து வங்கிகளும் ஏடிஎம்களைப் பயன்படுத்துவதற்கு வரம்புகளை நிர்ணயித்துள்ளன. கூடுதல் கட்டணங்கள் மற்றும் பிற விவரங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் பார்ப்போம். ஸ்டேட் பேங்க் ஆஃப் … Read more

அய்யனார் கோயில் குளத்தை காணவில்லை – போஸ்டர் ஒட்டிய கிராம மக்கள்.!

பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள அய்யனார் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான பக்கிரிச்சி  குளத்தை காணவில்லை என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் பட்டுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டி வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து குளம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் கட்டாயம் மீட்டு தரப்படும் என்று வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் நில அளவை மேற்கொண்ட போது, … Read more

டாஸ்மாக் பார் உரிமங்களுக்கான டெண்டர் வழங்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையைத் தொடரலாம் என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதேவேளையில் அவற்றை இறுதி செய்து டெண்டர் வழங்கக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடை அருகில் தின்படங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி அறிவிப்பானை வெளியிட்டது. தற்போது பார் உரிமம் பெற்றவர்கள் பார் … Read more

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு: டிடிவி தினகரன் ட்வீட்!

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த , “அதிமுகவின் நலன் கருதி இதுவரை ஏற்பட்ட கசப்புகளை மனதில் வைக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.” என்று அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பேசிய அவட், “அதிமுகவுக்குள் எழுந்த பிளவு தான் திமுக ஆட்சிக்கு வர காரணம், இன்றைக்கு அதே சூழல் தான் ஏற்பட்டுள்ளது; இன்றைக்கு … Read more

மேட்டூர் அணைக்கு 19,000 கனஅடி நீர்வரத்து

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19 ஆயிரம் கனஅடியாக உள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டது. தொடர் மழை மற்றும் கர்நாடக அணை களின் உபரிநீர் வரத்து காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, கடந்த மாதம் 16ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை தொட்டது. நீர்வரத்து தொடர்ந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி, 16 கண் மதகுகள் வழியாக உபரி … Read more

’ஒரு போலீஸ் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார்’-அருணா ஜெகதீசன் ஆணையம் கொடுத்த அதிர்ச்சி தகவல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், முழு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான 2018, மே 22 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, பேரணியாகச் சென்றனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில், காவல் துறையினர் … Read more

“அமைச்சர் கார் மீது காலணி வீசியது ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல்” – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கருத்து

மதுரை: ‘தமிழக நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவம், ஜனநாயகத்துக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்’ என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த வழக்கில் பாஜக மகளிரணியை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், மதுரையைச் சேரந்த பாஜக கட்சியைச் சேர்ந்த மணிகண்டன், … Read more

ஓபிஎஸ்சின் திடீர் வெண்தாடி தோற்றம்… ரகசியம் என்ன?

டிரேட்மார்க் தோற்றம்: கருப்பு, சிகப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட அதிமுக கரை வேட்டி… பாக்கெட்டில் ஜெயலலிதாவின் படம் தெரியும்படியான வெள்ளை நிற சட்டை… நெற்றியில் பளிச்சிடும் விபூதி, குங்குமம்… இவற்றுடன் கிளீ்ன் ஷேவ் செய்யப்பட்ட முகம்….இதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் டிரேட்மார்க் தோற்றம். கூடவே இருகரம் கூப்பி அவர் வணக்கம் தெரிவிக்கும் பாங்கும் (மேனரிசம்) அரசியல் வட்டாரத்தில் படுபிரபலம். தான் முதல்வராக இருந்த காலத்திலும் சரி… அண்மையில் அதிமுக சந்தித்த ஒற்றைத் தலைமை யுத்த காலத்திலும் சரி…. தமது டிரேட்மார்க் … Read more

வேலூரில் பொதுமக்கள் வேதன; ரூ.32.52 கோடியில் கட்டிய விமான நிலையம் பயன்பாட்டிற்கே வராமல் பாழாகும் அவலம்: முட்புதர்கள் சூழ்ந்து காடு போல் மாறியது

வேலூர்: வேலூர் விமான நிலையம் ரூ.32.52 கோடியில் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் இது பயன்பாட்டிற்கு வருவதற்குள் முட்புதார்கள் சூழ்ந்து காடு போல மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் ரூ.32.52 கோடியில் 120 ஏக்கர் பரப்பளவில் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடந்தது. இங்கிருந்து சரக்குகளை கையாளவும், பயணிகள் பயணம் செய்யும் வகையில் சிறிய ரக விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக டெர்மினல் பில்டிங், … Read more

இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை தமிழக நிதியமைச்சர் நிரூபிக்க தயாரா? – சீமான் கேள்வி

இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிரூபிப்பாரா என்று நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழருக்கும், ம.தி.மு.க.வினருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் தொடர்பான வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை தமிழக நிதியமைச்சர் நிரூபிப்பாரா என கேள்வி எழுப்பினார். இலவசம் என்பது ஒருவகை லஞ்சம்தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், அதிமுகவில் நகைச்சுவை நாடகம் நடப்பதாகவும், … Read more