‘யானை’ படத்துக்கு எதிரான வழக்கு: தணிக்கைக் குழு மேல்முறையீட்டுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: ‘யானை’ படத்துக்கான சான்றிதழை எதிர்த்து தணிக்கை குழு முன் மேல்முறையீடு செய்ய அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படத்துக்கு எதிராக சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “யானை திரைப்படத்தில் ராமநாதபுரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சமூக விரோதிகளாகவும், கூலிப்படையினராகவும் … Read more

வண்டலூர் பூங்காவில் பசியின்மையால் அவதிப்படும் ஆண் புலி – காரணம் என்ன?

வண்டலூர் பூங்காவில் உள்ள 6 வயது ஆண் புலி, சரிவர உணவு உண்ணாததால் மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 6 வயது ஆண் புலி நகுலன், கடந்த ஏப்ரல் 4-வது வாரத்திலிருந்து சரியாக உணவு உண்ணவில்லை. வழிகாட்டு நெறிமுறையின்படி புலிக்கு உடனடியாக அறிகுறி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் புலி நன்றாக இருந்தது. ஆனால், ஜுலை 25 ஆம் தேதி, நகுலன் மீண்டும் பசியின்மை காரணமாக … Read more

மழையை  சமாளிக்க முடியாமல் தடுமாறும் திமுக அரசு: இபிஎஸ் விமர்சனம்

சென்னை: திமுக அரசு தற்போது தமிழகத்தில் பெய்து வரும் மழை சமாளிக்க முடியாமல் தடுமாறுவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கடந்த வியாழன் (28.7.2022) அன்றே, சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அதே போல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது. நான் பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும், … Read more

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது. தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு … Read more

கலைஞருக்கு வங்கக் கடலில் பேனா நினைவிடம்: மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய தமிழக அரசு

முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு கடலுக்குள் ரூ.80 கோடி மதிப்பில் பேனா சிலை வைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.இந்தத் திட்டம் தொடர்பாக அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் எ.வ. வேலு ஆகியோர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கலைஞர் கருணாநிதிக்கு வங்கக் கடலில் பேனா நினைவிடம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி … Read more

நகைக்காக கொலை செய்யப்பட்ட மூதாட்டி, காவல்துறையினர் விசாரணை..!

மூதாட்டியை கொலை செய்து விட்டு நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், துட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னம்மா. இவர் அவரது வயலை பார்க்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவராததால் சந்தேகமடைந்த அவரது பேரன் வயலுக்கு அங்கே தேடி சென்றனர். அப்போது மூதாட்டி கழுத்தை நெறித்து கொலை செய்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் … Read more

மதுரை மண்டல கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தொடக்கம்: 14,430 இடங்களுக்கு 73,260 பேர் போட்டி

மதுரை: மதுரை மண்டலத்திலுள்ள மதுரை மண்டலத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 29 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலுள்ள 14,430 இடங்களுக்கு 73,260 பேர் போட்டி ஓரிரு நாளில் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குகிறது. சமீப ஆண்டுகளாக பொறியியல் போன்ற படிப்புக்கு ஆர்வம் குறைந்து, கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுவதால் ஒவ்வொரு ஆண்டும், இக்கல்லூரி களுக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வருகின்றன. குறிப்பாக குறைந்த கட்டணத்தை கருத்தில்கொண்டு … Read more

”தாழ்வான மின்கம்பிகளை சரி செய்யாததால் மாதம் ஒரு யானை பலி ஆகிறது” – நீதிபதிகள் வேதனை

தமிழக வனப்பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் … Read more

மேலே செல்லும் கேபிள்கள் இல்லாத சென்னை: மாநகராட்சி அதிரடி முடிவு

சென்னை: சென்னையில் மேலே செல்லும் கேபிள்களை எல்லாம் புதைவட கேபிள்களாக மாற்ற சென்னை மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளது. சென்னை மாநகராட்சியில் தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் கேபிள்கள் அனைத்தும் மேலே செல்லும் வகையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாநகராட்சி தெரு விளக்குகளை இணைத்துதான் இந்த கேபிள்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். இதன் காரணமாக ஒவ்வொரு தெரு விளக்கும் கம்பங்களிலும் பல கேபிள்கள் தொங்கிக் கொண்டு இருக்கும். தெருக்களில் பெரிய வாகனங்கள் செல்ல … Read more

நல்ல மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்க – தமிழ் பாட்டுப்பாடி அசத்திய கேரள பெண் எம்பி

ஈரோடு அருகே தமிழ் பாட்டுப்பாடி திருமணத்திற்கு மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கள் என கேரளா எம்பி ரம்யா ஹரிதாஸ் நகைச்சுவையாக பேசிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தலைவர்கள் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கினர். இதையடுத்து இதில் கலந்து கொண்ட கேரளா … Read more