தொடர் மழையால் மகசூல் அதிகரிப்பு: சூளகிரி சந்தையில் கொத்தமல்லி விலை வீழ்ச்சி
தொடர் மழையால் மகசூல் அதிகரித்துள்ளதால், சூளகிரி சந்தையில் கொத்தமல்லி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதியில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதேபோல, சூளகிரி தாலுகாவில் உள்ள 42 ஊராட்சிகளில் 600-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சூளகிரி, புலியரசி, செம்பரசனப்பள்ளி, மாரண்டப்பள்ளி, அத்திமுகம், ஒம்தேபள்ளி, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொத்தமல்லி அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இதேபோல, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி … Read more