சோனியா காந்தி மீதான நிர்மலா, கோயல் கருத்துகளை நீக்க காங்கிரஸ் கோரிக்கை

நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெள்ளிக்கிழமை (ஜூலை 29) துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மக்களவை எம்பி., காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது எம்.பி.க்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அந்தக் கடிதத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் மக்களவை உறுப்பினர் மீது விமர்சன கருத்துக்கள் தெரிவிக்க அனுமதியில்லை. இந்தப் புனிதமான ஷரத்துக்கள் மீறப்பட்டுள்ளதால், இதற்காக நிர்மலா சீதாராமன் … Read more

லாரியில் இருந்து குதித்த ஒட்டுநர், உடல் நசுங்கி பரிதாப பலி..!

லாரியில் இருந்து குதித்த ஒட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை – தென்காசி முதல் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றனர். எனவே வாகனங்களை வேறு பாதையில் திருப்பிவிட தற்காலிகமாக குளத்தின் உள்ளே பாதை அமைக்கப்பட்டது. இந்த பணிகளில் இசக்கி என்பவர் லாரி ஒட்டுநரகாக வேலை செய்து வருகிறார்.சம்பவதன்று அவர் ஓட்டிவந்த லாரி மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால், பதறி போன அவர் லாரியில் இருந்து குதித்துள்ளார். அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் அவர் மேலே ஏறியது. … Read more

டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியா? – விளக்கம் கோரும் தினகரன்

சென்னை: திருவாருர் அருகே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: ”காவிரி டெல்டாவின் திருவாரூர் சேந்தமங்கலம் பெரியகுடி பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக அரசு அனுமதி அளித்திருப்பதாக வரும் செய்திகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய விளக்கம் அளிக்க … Read more

குமரியில் மணப்பெண், அமெரிக்காவில் மணமகன்: வீடியோ கால் திருமணத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

மதுரை: கன்னியாகுமரி பெண்ணும், அமெரிக்க ஆணும் வீடியோ காலில் திருமணம் செய்ய அனுமதி வழங்கி, அவர்களின் திருமணத்தை சிறப்பு திருமண பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்றிதழ் வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வாஷ்மி சுதர்ஷினி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நானும் அமெரிக்காவை சேர்ந்த ராகுல் எல்.மதுவும் காதலித்தோம். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருமணத்துக்காக ராகுல் இந்தியா வந்தார். ஆனால் காரணம் இல்லாமல் … Read more

இரவு வரை நீடித்த அமலாக்கத்துறை விசாரணை!கட்சி தலைமை மீது வருத்தத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி?

கடந்த 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி ஜாபர்சேட்டுக்கு வீட்டு வசதி வாரியத்தில் நில ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அப்போதைய வீட்டு வசதி வாரிய அமைச்சரும், தற்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் நேற்று முன் தினம் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது. வழக்கின் பின்னணி: கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரியாக திகழ்ந்தவர் ஜாபர் சேட். இவர் தமிழக … Read more

அதிமுக பிரச்சினை; ஒபிஎஸ், சென்னை உயர் நீதிமன்றத்தை நாட உத்தரவு

அதிமுக பொதுக்குழு நடத்த தடை விதிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுக்குழு நடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் ஏதேனும் விதி மீறல் நடந்தால் நீதிமன்றத்தை நாடலாம் எனத் தெரிவித்தது.இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடு மனுவில், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் கட்சி விதிகள் காற்றில் … Read more

“உங்களுக்கு எனது வாழ்த்துகள், எஞ்ஜாய்” – அண்ணா பல்கலை., மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பிரதமர்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இடநெருக்கடி காரணமாக வேறு இடங்களில் அமரவைக்கப்பட்ட மாணவர்களை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விழாவில் பேசிய பிரதமர், “இந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கூட பங்கேற்றிருக்கிறார். இந்த … Read more

முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை -தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்த விதிகளை வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி, கொரோனா சிகிச்சைப் பணியில் முன்கள பணியாளராக ஈடுபட்டார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் கொரோனா பாதித்து உயிரிழந்தார்.   கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தால், 50 … Read more

"விரைவு விசாரணையில் நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்றம் முதலிடம்” – தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பெருமிதம்

மதுரை: நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண்பதில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது என தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பாண்டாரி கூறினார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் 18-வது ஆண்டு விழா மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் (எம்எம்பிஏ) 17-வது ஆண்டு விழா ஆகியன உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்றது. இதையொட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, உயர் நீதிமன்ற கிளை நிர்வாக … Read more

கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை!

ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மீட்டர்கேஜ் பாதைகளை அகல ரயில்பதையாக மாற்றியும் கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே துறை சுணக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. கீழே உள்ள வீடியோவில் நாம் பார்க்கும் காட்சி பேருந்துகள் கிடைக்காமல் மக்கள் அங்கும் இங்குமாக நள்ளிரவிலும் அலைபோதும் காட்சிகள் .. இந்த காட்சிகள் அரங்கேறும் இடம் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம், தென்மாவட்ட பேருந்துகள் பெரும்பாலும் இங்கிருந்துதான் இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல … Read more