மறைக்கப்பட்ட வரலாறு.. சுதந்திர போராட்டத்தின் முதல் ஆயுதப்போராளி சேலம் உழவன் அப்பாவு!

இந்திய சுதந்திர வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் ஆயுதப்போராளி சேலம் உழவன் அப்பாவு. வரலாற்று பக்கங்களிலும் பள்ளி கல்லூரி வரலாற்று பாட புத்தகங்களிலும் நம்மை ஆட்சி செய்த மன்னர்களை பற்றி மட்டுமே கற்பித்தும் படித்தும் வரும் நிலையில், கடந்த இரண்டு தலைமுறையினருக்கும் இந்த தலைமுறையினருக்கும் நம் நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி தேடித் தெரிந்து கொள்ளும் இடத்திலும், புதியது போல தெரிவிக்கும் இடத்திலும் தான் நாம் இருக்கிறோம். அப்படி மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட … Read more

சுதந்திர தினத்தில் புதிய கார் அறிவித்த ஓலா எலெக்ட்ரிக்; 500 கிமீ மைலேஜ்… 4 வினாடிகளில் 100 கி.மீ வேகம்

ஓலா எலெக்ட்ரிக் அறிவித்துள்ள புதிய எலெக்ட்ரிக் கார் சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் தொலைவு செல்லும் என்றும் அந்த கார் 4 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை தொடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புதிய கார் 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் (Ola Electric) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார காரை அறிவித்துள்ளது. ஆனால், அந்த வாகனத்தைப் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. இந்தியாவின் 75 வது சுதந்திர … Read more

தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரான்ஸ் இளைஞர்கள், அக்காள், தங்கை மூவருக்கு ஒரே மேடையில் திருமணம்..!

தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிரான்ஸ் இளைஞர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட மாசிலாமணி-ஆனந்தி  தம்பதியினர் 30 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் குடியேறினர். அவர்களுக்கு காயத்ரி, கீர்த்திகா, நாராயணி என 3 மகள்கள் உள்ளனர். மூவரும் பிரான்ஸிலே தங்களது படிப்பை முடித்துள்ளனர். இந்நிலையில், மூவரும் பிரான்ஸை சேர்ந்த இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். அவர்களுக்கு தமிழ்முறைப்படி திருமணம் செய்து வைக்க செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தனது உறவினர்களுடன் … Read more

’தேசிய கல்விக் கொள்கை ஒரு புரட்சிகர முன்னெடுப்பு’ – சுதந்திர தினத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை

சென்னை: காலனியாதிக்கக் கல்வி முறையின் வழியில், வெற்றுப் பட்டதாரிகளையும் மனப்பாடக் கிளிகளையும் மட்டுமே உருவாக்குகிற கல்வித் திட்டம் செயல்பட்டது. நம்முடைய கல்வித் திட்டத்தை நவீனப்படுத்தும் புரட்சிகர முன்னெடுப்பே, தேசியக் கல்விக் கொள்கை 2020 என்பதாகும்.என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இனைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில் “இந்தியத் தாய், சுதந்திரத் திருநாளின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடுகிறாள். நம்முடைய நாட்டின் … Read more

நாடக அரசியல்: ஸ்டாலினை காட்டமாக விமர்சித்த பாஜக அண்ணாமலை

பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது, நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நாடக அரசியலின் அடுத்த காட்சி நாட்டுப்பற்றா? மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களே, மூவண்ணக் கொடியை போற்றுவோம் என்ற உங்கள் பசப்பு அறிக்கையை படிக்க நேர்ந்தது. தங்கள் நாடக அரசியலின் அடுத்த தேசபக்தி ஸ்டிக்கர் ஒட்டும் காட்சியை நானும், தமிழக மக்களும் அறிந்துகொண்டோம். ஏமாற்றுவதை மட்டுமே … Read more

பார்வை சவால் கொண்டவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வரும் தனியார் அறக்கட்டளை!

சென்னையில் இயங்கி வரும் “கனவுகள் லைப்லைன் பவுண்டேசன்” எனும் தனியார் அறக்கட்டளை நிறுவனம் பார்வைச் சவால் கொண்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் பல சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பார்வைச் சவால் கொண்ட பட்டதாரிகள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை இலவசமாக இந்த அறக்கட்டளை நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 83 பார்வைச் சவால் கொண்ட பட்டதாரிகள் தற்போது இவ்வகுப்புகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். பார்வைச் சவால் கொண்ட … Read more

ஸ்டாலின், ஓ.பி.எஸ்… ஆளுநர் ரவி தேநீர் விருந்தில் பங்கேற்ற தலைவர்கள் யார், யார்?

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று (ஆகஸ்ட் 15) மாலை 05.00 மணிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அளித்த தேநீர் விருந்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின், ஓ. பன்னீர் செல்வம், ஜி.கே. வாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) இந்தியாவின் 76வது சுதந்திர தின அமுதுப் பெருவிழா கோலாலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி … Read more

75ஆவது விடுதலை நாளையொட்டி, 75 பேருக்கு 75 பைசாவில் பிரியாணி விற்பனை.!

75ஆவது விடுதலை நாளையொட்டி சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே செயல்படும் கடையில் முதலில் வரும் 75 பேருக்கு, 75 பைசாவில் பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், பிரியாணியை வாங்க இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முண்டியடித்தனர். இதே போன்று, அந்த உணவகத்தின் நாகர்கோவில் வடசேரி கிளையில் சலுகை விலையில் சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. Source link

மடிக்கணினி திட்டம் மீண்டும் தொடங்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது: ராமதாஸ்

சென்னை: “மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. அத்தகைய நடவடிக்கை எதையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் தடைபட்ட, அரசு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், நிலைமை … Read more

ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக… அடக்கி ஆள்வாரா ஸ்டாலின்?

மதுரையில் அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு, பொள்ளாச்சியில் சரக்கு லாரி மீது கல்வீச்சு, தருமபுரியில் பாரதமாதா கோயில் பூட்டு உடைப்பு என பாஜகவினர் தங்களது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இவற்றில் மதுரை, தருமபுரி சம்பங்களில் தங்களுக்கு உரிய அனுமதி மறுக்கப்பட்டதுதான் தாங்கள் வன்முறையை கையில் எடுக்க காரணம் என்று அவர்கள் சமாதானம் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. சம்பவம் 1: ஆனால், ஜம்மு -காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரருக்கு தமிழக அரசின் சார்பில் … Read more