இந்த படத்தில் மறைந்திருக்கும் முதலை… 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நிஜமாவே ஷார்ப் பாஸ்!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தைக் கலக்கிவரும் மிகவும் சுவாரஸ்யமான ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு. பல சமூக ஊடகப் பயனர்கள், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களின் சுவாரஸ்த்தில்மயங்கிப்போய் வெறித்தனமாக விடை தேடி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல், சமூக ஊடக பயனர்கள், சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் படங்களை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு அவர்களிடம் விடை கேட்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் மிகவும் சுவாரசியமாக இருப்பதற்கு காரணம், குறைந்த நேரத்தில் பதிலைக் கண்டுபிடிக்க … Read more

திருப்பூர் | போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி.!

பனியன் தொழிலாளர்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்த திருப்பூர் போலீசார். திருப்பூரில் உள்ள திருமுருகன் பூண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அனைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.  இதில், திருமுருகன்பூண்டி போலீசார் கலந்து கொண்டு போதை பொருட்கள் பயன்படுத்துபடுவதினால், பயன்படுத்துபவர்களுக்கும், அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார்கள்.  முடிவில் போதை ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவன தொழிலாளர்கள் பங்கேற்று … Read more

விமானதளத்தை விரிவுபடுத்தினால் உலக வரைபடத்தில் புதுச்சேரிக்கு முக்கிய இடம் கிடைக்கும்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான தளத்தை விரிவுபடுத்த ரூ.425 கோடி நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம். இத்திட்டம் நிறைவேறும் போது உலக வரைபடத்தில் புதுவை ஒரு முக்கிய இடத்தை பெறும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். நாட்டின் 75வது சுதந்திர தின விழா நாடுமுழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் சுதந்திர தின விழா நடந்தது. விழாவையொட்டி கடற்கரை சாலை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு கொடிக்கம்பம், … Read more

ஓபிஎஸ்.,க்கு தூது விட்ட டிடிவி தினகரன் – எடப்பாடி பழனிசாமிக்கு 'நோ'

அதிமுகவின் தற்போதைய நிலை வருத்தமாக உள்ளது எனவும், பதவி வெறி, சுயநலம் கொண்டவர்களிடம் அதிமுக உள்ளது எனவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 16 தீர்மானங்கள் … Read more

நாடும், ராணுவமும் அவர்கள் சொத்தா?… நாட்டுக்கு நல்லதில்லை – அமைச்சர் பிடிஆர்

75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதேபோல், சுதந்திர தினத்தையொட்டிசென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவை சுற்றியிருக்கின்ற பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றைப் பார்த்தால், அந்த நாடுகளைவிட இந்தியாவின் ஜனநாயகம் … Read more

சென்னை: அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்து – தீப்பிடித்து எரிந்த பேருந்து

தாம்பரம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அடுத்த தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையோரம் தனியார் நிறுவனங்களுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி அதி வேகமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்பகுதியில் மோதியது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனமும் பேருந்தும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து … Read more

பொறியியல் கவுன்சலிங்; எந்த கோர்ஸ் படிக்கலாம்? வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் எவை?

TNEA Engineering counselling which course is best?: தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கான ரேங்க் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது. இந்தநிலையில், எந்த பாடப்பிரிவுக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்த முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். பொறியியல் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டவுன் உங்களுக்கு எந்த ரவுண்ட் கவுன்சலிங் வரும் என்பது தெரிந்துவிடும். முதல் ரவுண்ட்க்கு 15000க்கும் அதிகமான மாணவர்கள் அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அடுத்தடுத்த ரவுண்ட்களுக்கு அதிகமான எண்ணிக்கை மாணவர்கள் அழைக்கப்படுவர். இதையும் படியுங்கள்: ஒரே … Read more

மனவேதனையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனவேதனையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி குளுமைக்காடு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி செல்வராஜ்(55). இவரது மனைவி துளசி, கடந்த வருடம் உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால் செல்வராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மது குடித்து வந்துள்ளார். இதனை செல்வராஜின் உறவினர்கள் கண்டித்து உள்ளனர். இதனால் நேற்று முன்தினம் மனவேதனையில் செல்வராஜ் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடைத்து மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் … Read more

சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை: ஜெயக்குமார்

சென்னை: “நாங்கள் அதிமுகைவை விமர்சிக்கவில்லை. அதனால் அதிமுகவுடன் ஒருங்கிணைந்து செல்வோம் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால், எங்கள் கட்சியில் உள்ள தொண்டர்களும் சரி, கட்சியினரும் சரி, யாருமே சசிகலாவையும், தினகரனையும் ஏற்றுக்கொள்வதாக இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பலமுறை நாங்கள் கூறிவிட்டோம். அதிமுகவில், சசிகலா மற்றும் … Read more

எம்பி, எம்.எல்.ஏக்களுக்கும் தேசிய கொடி ஏற்றும் உரிமை: ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்!

நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உடையாற்றினார். அதேபோல், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் மூவர்ண கொடியேற்றினார். இரண்டாவது ஆண்டாக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக, இந்தியா விடுதலை பெற்ற பின்பு, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரும், ஆகஸ்ட்15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமரும் டெல்லியில் … Read more