செங்கல்பட்டு | சாலையோரத்தில் நடமாடிய ஒட்டகம் – வனத்துறை மீட்பு.! 

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையோரம் காலி இடத்தில் மிகவும் உடல் மெலிந்த நிலையில் ஒரு ஒட்டகம் சுற்றிக்கொண்டிருந்தது.  இதை கண்ட பொதுமக்கள், கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார், வண்டலூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து, மெலிந்த நிலையில் காணப்பட்ட ஒட்டகத்தை மீட்ட வனத்துறையினர், வண்டலூர் பூங்காவின் பாதுகாப்பில் வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.  மேலும், அந்த ஒட்டகம்  திடீரென இங்கு எப்படி வந்தது? யாராவது ஒட்டகத்தை இரவு நேரத்தில் … Read more

பாஜகவினர் நடந்துகொண்ட விதம் வேதனை அளிக்கிறது: ஆர்.பி.உதயகுமார்

மதுரை: மதுரையில் பாஜக தொண்டர்கள் நடந்துகொண்ட விதம் வேதனை அளிக்கிறது என்று அதிமுக எம்எல்ஏ.வும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” நேற்று விமான நிலையத்திற்கு வெளியே இருந்த பாஜக தொண்டர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில், அவர்களது உணர்ச்சியை வெளிக்காட்டும் விதமாக ஒரு விரும்பத்தகாத நிகழ்வை நடத்தினர். இது அனைவருக்கும் வேதனை அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வு. ஏனென்றால், பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், உபசரிப்பு, … Read more

பெரியார் பாணியில் பிடிஆர்: செருப்புக்கு பின்னால் இருக்கும் வெறுப்பு அரசியல்!

ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் உடலுக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்திவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பாஜகவினர் அவரை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினார். அப்போது, மகளிரணியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீசிய செருப்பு அமைச்சர் கார் மீது விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை கைது … Read more

செருப்பை வீசிய சின்றெல்லாவே!… அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக ராணுவ வீரரின் உடலானது மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.  இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டதால், பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் சுமார் … Read more

'திமுக அரசு பதவியேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது' – இபிஎஸ்

சென்னை: ” இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்று விளம்பரங்கள் மூலம் தன்னைத் தானே மார்தட்டிக் கொள்ளும், நிர்வாகத் திறமை இல்லாத இந்த விடியா அரசின் முதல்வர் தலைமையிலான ஆட்சியில், சென்னை மாநகரில், பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான சூத்திரதாரிகள், கொள்ளையர்களை காவல் துறை கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? … Read more

China Spy Ship: இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலை தடுத்து நிறுத்துக!

இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்த வேண்டும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் உளவுக் கப்பலை நிறுத்திக் கொள்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ள தகவல் அதிர்ச்சி தருகிறது. சீனாவின் ஆய்வு மற்றும் கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங்க் -5, விண்வெளி மற்றும் செயற்கைக் கோள் கண்காணிப்பு தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். இந்தக் … Read more

பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார் டாக்டர் சரவணன்

மதுரை நகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணனை பாஜகவில் இருந்து நீக்கி தமிழக பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும்போது திமுக – பாஜக இடையே நடைபெற்ற மோதலை அடுத்து மதுரை விமான நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினார்கள், இச்சம்பவம் தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு நிதியமைச்சர் … Read more

75-வது சுதந்திர தினம் | தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திரன தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ராமதாஸ்: “ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்தது மற்றும் விடுதலை அல்ல. பொருளாதாரம், சமூகம் என எவையெல்லாம் மனிதர்களை அடிமைபடுத்துகின்றனவோ, அவை அனைத்திலும் சமநிலையை உருவாக்கி, அவற்றிலிருந்து மக்களுக்கு விடுதலை அளிப்பது … Read more

வயலில் பறந்த 100க்கும் மேற்பட்ட தேசியக் கொடிகள்; அசத்தும் தேனி விவசாயி

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்பதற்கேற்ப இன்று 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக்கொடி பறக்க விடப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவுக் கூறும் விதமாகவும், சுதந்திர தினம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குழந்தைகள், இளைஞர்கள்,  பெரியவர்கள் என அனைவரிடமும் தேசப்பற்று அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தோடு வீடு தோறும் தேசிய … Read more

நீலகிரி: குடியிருப்பு பகுதிக்குள் உலாவரும் சிறுத்தை – அச்சத்தில் அம்பிகாபுரம் மக்கள்

குடியிருப்பு வளாகத்திற்குள் மூன்றாவது நாளாக வந்து சென்ற சிறுத்தையால் அம்பிகாபுரம் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அம்பிகாபுரம் பகுதியில் அவ்வப்போது கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வருவது வழக்கம், இந்நிலையில் இங்குள்ள முருகன் என்பவரின் பங்களா காம்பவுண்ட் சுவரை தாண்டி உள்ளே நுழைந்த சிறுத்தைக்கு அங்கு உணவு எதுவும் கிடைக்காததால் சிறிது நேரம் வீட்டை சுற்றி வந்து பின்னர் மீண்டும் திரும்பிச் சென்றது, இது அங்கிருந்த … Read more