தமிழக செய்திகள்
யூடியூப் பார்த்து கொள்ளையடித்து சிக்கிய இன்ஸ்டா காதல் எலிகள்..!
கோவையில், பொதுஅறிவு புத்தகம் விற்பது போல் ஊருக்குள் புகுந்து வயதானவர்களைத் தாக்கி வீட்டுக்குள் கட்டிப் போட்டு கொள்ளையடித்த இன்ஸ்டாகிராம் காதல் ஜோடியை விரட்டிப்பிடித்த ஊர்மக்கள் உரித்தெடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கோவை வடவள்ளி அடுத்த பொம்மணாம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் 80 வயதான பெரிய ராயப்பன் தனது மனைவி ராஜம்மாளுடன் வசித்து வந்தார். இவர்களது மகன் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். வீட்டில் கணவன் … Read more
பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு
சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடித்துள்ள அவர், சுதந்திர தினத்துக்குப் பிறகு மீண்டும் திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை தொடர இருக்கிறார். இந்நிலையில், முன்னாள் முதல்வரான அவருக்கு சுற்றுப் பயணத்தின்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சேலத்தைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஏ.பி.மணிகண்டன், சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதில், … Read more
தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்க இதுதான் காரணம்: சசிகலா
ஆட்சியில் என்ன தவறு செய்தாலும் எளிதில் தப்பித்து கொள்ளலாம் என்று நினைப்பதால்தான் குற்றங்கள் அதிகரிக்கின்றன என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் திமுகவைச் சேர்ந்த காராட்சி ஒன்றிய கவுன்சிலரின் கணவர் வெற்றிச்செல்வன் என்பவர் பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், அரிவாளால் ஒருவரை வெட்ட ஓடி ஓடி துரத்திய சம்பவம், நேற்று சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சியிலும் பார்க்க முடிந்தது. அதேபோன்று, பாலகோடு மின் வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரில் வந்து, நீர்த்தகிரி … Read more
வருவாரா, வரமாட்டாரா? மீண்டும் ஒலிக்கும் பழைய பாடல்
இந்தி எதிர்ப்பு கொள்கையை முன்னிறுத்தும் அரசான திமுகவுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பவர் ஆளுநர் ஆர்.என். ரவி. அவரை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் தாம் அரசியல் பேசியதாக கூறியது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.மேலும் மீண்டும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துகளும் எழுந்துள்ளன. ஆனால் ரஜினிகாந்த்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் அவர் அரசியலுக்கு வரமாட்டார் எனக் கூறுகின்றன.எனினும் அவரிடம் வேறு திட்டங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், ரஜினி, ஆர்என் ரவி சந்திப்பை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் … Read more
தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்தியமலை அறிவிப்பு: முதல்வர் மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், “உலக யானைகள் தினத்தில், தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியமலை அறிவிக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. காணுயிர்ச் சூழலமைப்புகளின் சமநிலையைப் பேணுவதில் யானைகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இயற்கையின் கொடையான இந்த மிடுக்குமிகு பாலூட்டிகளை எவ்விலை கொடுத்தேனும் நாம் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். Source link
மத்திய அமைச்சருக்கு கனிமொழி எழுதிய கடிதம்..! – என்ன எழுதினார் தெரியுமா..?
ஆபத்தான வாயுக் கசிவு குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரிக்கு எழுதிய கடிதத்தில் “சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு உள்ளிட்டஆலைகளில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகவே வாயுக் கசிவு ஏற்பட்டு வருகின்றது. இது தொடர்பாகமத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரிக்கு மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும்,மக்களவை திமுக துணைத் தலைவருமான கனிமொழி எம்பி கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த ஆகஸ்டு … Read more
பருவமழைக்கு முன்னர் முடிவடையுமா சென்னை மழைநீர் வடிகால் பணிகள்? – முழு அலசல்!
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் பருவமழைக்கு முன்னர் முழுமையாக நிறைவடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மழைநீர் வடிகால் பணிகளின் தற்போதைய நிலை குறித்து இத்தொகுப்பில் காணலாம். பருவமழைக் காலத்தில் சாலைகளில் நீர் தேங்கி நிற்கும் நிலையை மாற்றும் வகையில் புதிய மழைநீர் வடிகால்களை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவளம் வடிநில பகுதி, கொசஸ்தலையாறு வடிநில பகுதி மற்றும் சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் வேளச்சேரி தொடங்கி திருவொற்றியூர் வரை பல்வேறு பகுதிகளிலும், இந்தப் … Read more
மோசடி பத்திரப்பதிவை பதிவாளர் ரத்து செய்யலாம்: சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
சென்னை: தமிழகத்தில் மோசடி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை பதிவு அலுவலர்களுக்கு வழங்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதா கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில், அசையா சொத்துகளின் பதிவில் மோசடி, போலியான ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டத்தை தடுக்க, பதிவு செய்யும் அலுவலரால் பதிவுக்கு முன்னதாக மூல உரிமை ஆவணம், வில்லங்க சான்றிதழ், வருவாய் ஆவணங்களை சரிபார்த்தல் தொடர்பான பல்வேறு சுற்றிக்கைகள் பதிவுத்துறை தலைவரால் அவ்வப்போது வழங்கப்படுகிறது, இருப்பினும் பொய்யான ஆவணங்களின் பதிவு தொடர்ந்து … Read more