க்ரீன் சிக்னல்..! ஒன்றிணையும் ஓபிஎஸ் – சசிகலா; எடப்பாடி அன்கோ ஷாக்!

– வி.கே.சசிகலா சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் என்றும் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி … Read more

காவல்துறையினர் கால்களை பிடித்துக்கொண்டு கதறி அழுத சகோதரிகள்: சேலத்தில் பரபரப்பு

சேலத்தில் காவல்துறையினரின் கால்களை பிடித்து அழுத சகோதரிகளின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கே பதபதைக்கும் வகையில் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சகோதரரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்றதாக இந்த சகோதரிகள் குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள்.  சேலம் மாமாங்கம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா மொத்த வியாபாரிகளிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அவர் … Read more

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் கதண்டு கடித்து பள்ளி மாணவிகள் உள்பட 10 பேர் படுகாயம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் கதண்டு கடித்து பள்ளி மாணவிகள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். பள்ளிக்கு சென்றபோது கதண்டு கடித்து காயமுற்ற மாணவிகள் உள்பட 10 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலையை கடக்க முயன்ற 11 வயது சிறுமி பைக் மோதி பலி

சென்னையில் சாலையை கடக்க முயன்ற 11வயது சிறுமி மீது இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் சீசோர் டவுன் 10வது அவென்யூவை சேர்ந்தவர் பிரதாப் சிங். இவரது மகள் ஸ்ரீசனா(11). இவர் பனையூர் பாரத் பெட்ரோல் பங்க் எதிரில் சாலையை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து … Read more

ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு: உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு (ஆக.25) சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், “கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ம் … Read more

மாணவர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு – பள்ளிக்கல்வி துறை அதிரடி!

ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இட வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும், இனிஷியலை, தமிழில் தான் எழுத வேண்டும் என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிறப்பித்திருந்த உத்தரவில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், … Read more

கொடைக்கானல் மலைச் சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைச் சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் சிக்கிக் கொண்டனர். பேருந்தின் கண்ணாடியை உடைத்து பயணிகள் மீட்கப்பட்டனர்.

ஆய்வுக்குள்ளான கள்ளக்குறிச்சி மாணவி உடற்கூராய்வு: நீதிமன்றத்தில் தாக்கலானது அறிக்கை!

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் இறந்த மாணவியின் பிரேத பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவக் குழுவினர், தங்கள் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியையடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவியொருவர், கடந்த மாதம் 13ம் தேதி அதிகாலை பள்ளியின் தரைதளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து, மாணவி இறப்புக்கு நீதி கேட்டு 17ம் தேதி பொதுமக்கள், இளைஞர்கள் பள்ளி முன் … Read more

சாதி ரீதியாக பேசிய கல்லூரி இணைப் பேராசிரியர் மீது விசிக புகார்

மாணவர்களை சாதி ரீதியாக தாழ்த்தி பேசிய, சென்னையில் உள்ள அரசுக் கல்லூரித் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திங்கள்கிழமை சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. விசிகே-வைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.செல்வம் செஞ்சுடர் அளித்த புகாரின்படி, சென்னையில் உள்ள பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றின், தமிழ்த் துறைத் தலைவர் மாணவர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசும் போது சாதிரீதியாக இழிவாக பேசினார். . மாணவர்களின் சமூகப் பின்னணி குறித்தும், ஒரு குறிப்பிட்ட … Read more

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை.. இதுவரை 93,000 மாணவிகள் சேர்ப்பு.!

மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் இதுவரை 93 ஆயிரம் மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.  அந்த வகையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ.யில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தில் இதுவரை 93 … Read more