’வீடியோவா எடுக்குற?’.. புகார் அளிக்க வந்தவர்கள் மீது மின் மீட்டரை வீசிய ஊழியர்!

தருமபுரி மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு குறித்து புகார் கூற வந்தவர் மீது, மின்வாரிய ஊழியர் மின் மீட்டரை வீசி தாக்க முற்படும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் தொடர்ந்து மின்வெட்டு நேரிடுவதாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். அப்போது பணியில் இருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ், அவர்களை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. அதை ஒருவர் தனது அலைபேசியில் படம்பிடித்ததால் ஆத்திரமுற்ற குப்புராஜ், அங்கிருந்த மின்மீட்டரை … Read more

கண்களில் தேசிய கொடி: கோவை இளைஞரின் புதிய முயற்சி… பாராட்டு மழை பொழியும் பொதுமக்கள்!

பி.ரஹ்மான் – கோவை மாவட்டம் Coimbatore Tamil News: கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் புகைப்பட கலைஞராக உள்ளார். இயற்கை சார்ந்த புகைப்படங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் கண்களில் தேசிய கொடியின் வடிவம் ஒளிப்படமாக தெரிவது போன்று தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். கணினியில் தேசியக் கொடியின் வடிவத்தை வைத்த அவர் அதன் எதிரே மற்றொருவரை அமர வைத்து தேசிய கொடியின் வடிவம் … Read more

மதுரையில் கள்ளழகர் கோயில் ஆடித்திருவிழா கோலாகல கொண்டாட்டம்

மதுரையில் இரு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கள்ளழகர் கோவில் ஆடிப்பெருக்கு தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய ஆடித்திருவிழாவின் 9-ம் நாளான இன்று, திருத்தேரோட்ட விழா நடைபெற்றது. மதுரை, மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இரவு பூப்பல்லாக்கு பவனி நடைபெறவுள்ளது. Source link

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கி அழியும் தும்பிக்கை மீன்கள்

மன்னார் வளைகுடாவில் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கி தும்பிக்கை மீன்கள் அழிந்து வருகின்றன. அவற்றை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் அருகே கடல் பகுதியில் 560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகத்தில் 0.25 ஹெக்டேர் முதல் 125 ஹெக்டேர் பரப்பளவிலான சிங்கில் தீவு, குருசடை தீவு, புள்ளிவாசல் தீவு, பூமரிச்சான் தீவு, மனோலி தீவு, மனோலி புட்டி தீவு, முயல் தீவு, முள்ளி … Read more

சேகர் ரெட்டி மீதான வருமான வரித்துறை வழக்கு ரத்து..!- உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை..!

திமுக, அதிமுக என இரண்டு கட்சி ஆட்சிகளிலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கக்கூடியவர் சேகர் ரெட்டி.2 ஆயிரத்து 682 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி, சேகர்ரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ். மைனிங் என்ற நிறுவனம், கடந்த 2014-15 முதல் 2017-18ம் மதிப்பீட்டு ஆண்டுகளில் 384 கோடியே 55 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறி வருமான வரிக் கணக்கை … Read more

ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசையில் ஏவுகணை தளம் அமைந்தால் இவ்வளவு நன்மைகளா!

ராக்கெட் ஏவுவதற்கு மிக பொருத்தமான இடம் இந்த குலசேகரப்பட்டினம். நிலம்  ஆர்ஜிதம் முடிந்தது, அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாக கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என குலசேகர பட்டினத்தில் ஆய்வு மேற்கொண்ட இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.   இஸ்ரோவின் பிரதான ராக்கெட் ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ளது. ஆனாலும், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுவதற்கான தளம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்திரா காந்தியின் காலத்திலிருந்தே விஞ்ஞானிகளால் … Read more

அசாமில் ரூ.5,500 கோடியில் என்எல்சியின் புதிய மின் திட்டம்: மாநில மின்துறையுடன் இணைந்து செயல்படுத்துகிறது

கடலூர்: மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம், நெய்வேலி அனல் மின்நிலையங்களில் மட்டும் மின் உற்பத்தி செய்து வந்தது. தற்போது இந்நிறுவனம், காற்றாலை மற்றும் சூரியஒளி போன்ற புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறை ஆகியவற்றில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி உள்ளது. நெய்வேலி மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளிலும், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா,ஜார்க்கண்ட் மாநிலங்களிலும், அந்தமான் தீவுகளிலும் தனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அசாமில் ரூ.5 ஆயிரத்து 500 கோடி … Read more

தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம்: நீதிமன்றம் காட்டிய அதிரடி!

தமிழகத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பத்தாயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கடடாயம் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும் அவ்வாறு அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் … Read more