மூத்த அதிகாரிகளை நியமித்து மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைப்படுத்தவும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூத்த அதிகாரி ஒருவரை பொறுப்பு அதிகாரியாக நியமித்து வடிகால் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகள் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பல முறை வெள்ளத்தில் மூழ்கியதும், அதனால் சென்னை மாநகர மக்கள் அனுபவித்த கொடுமைகளும் எவராலும் எளிதில் மறக்க முடியாத கொடுந்துயரம் ஆகும். அத்தகைய … Read more

மதுரை: வரத்து குறைந்து பூக்களின் விலை அதிகரிப்பு – மகிழ்ச்சியில் விவசாயிகள்

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ ரூ. 1100 விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் 600 ரூபாய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னர். தென் மாவட்டங்களின் பிரதான மலர் சந்தையாக விளங்கும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையான உயர்ந்துள்ளது. நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களின் வரத்து வழக்கத்தை விட குறைந்துள்ளதாலும் மல்லிகை உள்ளிட்ட பிரதான பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது, நேற்று வரை 500 ரூபாய்க்கு விற்பனையான … Read more

தாஜ்மஹாலில் பூட்டப்பட்ட 22 அறைகள்… ரகசியத்தின் பின்னணி இதுதான்

இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை ஆய்வு செய்திட, அங்கு பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை திறக்க உத்தரவிடும்படி தொடரப்பட்ட வழக்கை, அலகதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த கோரிக்கை நியாயமற்றவை. இத்தகைய பிரச்னை கல்வியாளர்கள், அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் விவாதத்திற்கு விடப்பட வேண்டியவை என்றனர். நோ ரகசியம் தாஜ்மஹாலின் அடித்தளத்தில் இருப்பதாக … Read more

பெண்ணுரிமைக்கு எதிராக நடக்கும் செயல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்.. ஓ.பி.எஸ்.!!

பெண்ணுரிமைக்கு எதிராக நடக்கும் செயல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா!” என்று பெண்ணின் உயர்வைப் போற்றிப் பாடினார் கவிமணி தேசிக விநாயகம் அவர்கள். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று முழங்கினார் மகாகவி பாரதியார் அவர்கள். “நாட்டுக்கு ஏற்றம் தருவது பெண்களின் முன்னேற்றமே” என்றார் … Read more

மதுபோதையில் காரை ஓட்டி இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பிரபல ரவுடி கைது

புதுச்சேரியில் மது போதையில் காரை ஒட்டி சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டான். புதுச்சேரி ரயில் நிலையம் அருகே வேகமாக காரை ஓட்டிச் சென்றவனை போலீசார் உதவியுடன் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.  காரில் இருந்த நபர் உச்சகட்ட போதையில் இருப்பது தெரிய வந்ததை அடுத்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த நபர் மேட்டுபாளையத்தைச்  சேர்ந்த பிரபல ரவுடி ஆறுமுகம் என்ற  நண்டு ஆறுமுகம் என்பது தெரிய … Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே கடந்த வாரம் உருவான அசானி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் நேற்று முன்தினம் காலை கரையைக் கடந்தது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒருசில இடங்களில் லேசான மழை … Read more

தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை – IBPS அறிவிப்பால் சர்ச்சை

தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்ற வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனமான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது வங்கிகளில் கிளர்க் பணிகளுக்கு மாநில அலுவல் மொழி கட்டாயமில்லை என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமான IBPS அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் பணியாற்ற 843 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில், சுமார் 400 பேர் வெளிமாநிலத்தவர் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ஆங்கில நாளேடுக்கு பேட்டி அளித்துள்ள அகில … Read more

டெல்லி வணிக வளாகத்தில் தீ விபத்து… குறைந்தது 27 பேர் பலி, பலர் காயம்

Delhi Fire accident: டெல்லியில் முண்ட்கா மெட்ரோ நிலையம் அருகே 4 மாடி வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் இரவு முழுவதும் போராடி தீயை அணைத்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வீடியோவில், தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து மக்கள் கயிறு மூலம் தப்பிப்பதும், உடைந்த ஜன்னல் கண்ணாடியில் தொங்கிட்டு இருப்பதையும் காண முடிகிறது. பலர், அங்கிருந்து வேறு கட்டிடங்களுக்கு … Read more

டெல்லி தீ விபத்து.. தமிழக முதலமைச்சர் மு‌.க ஸ்டாலின் இரங்கல்.!

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 27 பேர் உயிரிழந்தனர். Extremely pained by the tragic loss of so many lives in #DelhiFire accident. I extend my heartfelt condolences to the families of victims and wishing … Read more

உதவிப் பொருட்கள் தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – இலங்கை முன்னாள் எம்பி வலியுறுத்தல்

சென்னை: இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள் இலங்கை தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ் தேசிய இனப் பிரச்சினையை ஒடுக்க பணத்தை கடனாகப் பெற்றது, படைகளை மிகப்பெரிய அளவில் பெருக்கியதுதான் தற்போதைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம். போர் முடிந்த பிறகும், 2 லட்சம் படைகள் தமிழர் வாழும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இலங்கை … Read more