பிரியாணித் திருவிழாக்களில் இனி மாட்டிறைச்சி தவிர்க்கப்படக் கூடாது: ஆதி திராவிடர் ஆணையம் உத்தரவு

சென்னை: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில், பிரியாணித் திருவிழாக்களில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது என்று ஆதி திராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் மே 13,14,15 ஆகிய மூன்று நாட்களில், “ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022” நடைபெறும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், … Read more

300 மாணவர்களுக்கு இந்தாண்டும் இலவச உயர்கல்வி – பாரிவேந்தர் எம்.பி அறிவிப்பு

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இந்தாண்டும் இலவச உயர்கல்வி வழங்கப்படும் என்று பாரிவேந்தர் எம்.பி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான டாக்டர் பாரிவேந்தர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 வருடங்களாக பொறியியல், கலை-அறிவியல், விவசாயன், உணவக மேலாண்மை போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளில் அவரது தொகுதிக்குட்பட்ட 900 மாணவ-மாணவியர் … Read more

அரசாங்க விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி படங்கள்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஐகோர்ட் விளக்கம்

தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, மேலும் இருவருடன் மோடியின் புகைப்படங்களை அரசு விளம்பரப் பலகைகளில் பொருத்தும் வீடியோ கிளிப்பை வெளியிட்டார். அந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களைச் சேர்க்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு … Read more

தர்மபுரி || காதலியுடன் ஏற்பட்ட தகராறு, இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி அப்பாவு நகரை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் … Read more

மதுரை கலைஞர் நூலக கட்டுமான பணியின்போது மேற்கு வங்க தொழிலாளி தவறி விழுந்து மரணம்

மதுரை: மதுரையில் கலைஞர் நூலக கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, தவறி விழுந்த மேற்கு வங்க மாநில கட்டிடத் தொழிலாளி மரணம் அடைந்தார். மதுரை – நத்தம் சாலையில், கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கலைஞர் நூலகம் கட்டுமான பணி நடக்கிறது. 6 மாடி கட்டிடத்திற்கான இப்பணியில் வடமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளிகள் அவ்வளாகத்தில் தங்கியிருந்து கொணடு கட்டுமான பணியில் ஈடுபடுகின்றனர். காலை, மாலை என ஷிப்ட் முறையில் பணி செய்கின்றனர். இவர்களுடன் … Read more

சென்னையில் காணாமல்போன இளம்பெண் ஆந்திர நீர்வீழ்ச்சி அருகே அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

ஆந்திர மாநிலம் கைலாச கோனா நீர் வீழ்ச்சி அருகே அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டார். சென்னை புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் – பால்கிஸ் தம்பதியரின் மகள் தமிழ்ச்செல்வி (18) இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாடியநல்லூரைச் சேர்ந்த மதன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதையடுத்து மதனும், தமிழ்ச்செல்வியும் பாடியநல்லூரில் தனிவீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தமிழ்ச்செல்வியின் பெற்றோர் போன் செய்துள்ளனர். ஆனால், தமிழ்ச்செல்வி போனை எடுக்காததால் … Read more

டப்பா பசங்க.. நாங்கதான் அதிமுக.. தேர்தல் ஆணைய கூட்டத்தில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., தரப்பு உரசல்!

சென்னையில் திங்கள்கிழமை (ஆக.1) சார்பில் மாநில தேர்தல் ஆணைய கூட்டத்தில் அதிமுக (எடப்பாடி அணி) சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘நாங்கள் அதிமுக கட்சி சார்பில் கலந்துகொண்டோம். அவர்கள் எந்தக் கட்சி சார்பில் கலந்துகொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது. அவர் எந்தக் கட்சியை சார்ந்தவர் என்பதை தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்க வேண்டும்” என்று பேசினார். இந்தப் பேட்டி நடந்துகொண்டிருக்கும்போதே போலீசாரை … Read more

மதுரை திருமலை நாயக்கர் அரண்மணையில் குறும்படம், போட்டோ, வீடியோ எடுக்க நிரந்தர தடை 

மதுரை: சினிமா படப்பிடிப்பு தடையைத் தொடர்ந்து மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படம், போட்டோ, வீடியோ எடுக்க தொல்லியல்துறை நிரந்தர தடை விதித்துள்ளது. திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையின் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாது கல்வி சுற்றுலாவுக்காகவும் மாணவர்கள் அதிகளவு வந்து செல்கிறார்கள். கடந்த காலத்தில் இந்த அரண்மனை சினிமா படப்பிடிப்புகளுக்காக வாடகைக்குவிடப்பட்டன. அப்போது அரண்மனையின் கட்டிடங்களை சினிமா ஷூட்டிங் தொழிலாளர்கள் சேதப்படுத்தினர். … Read more

தமிழகத்தை அதிரவைத்த கச்சநத்தம் கொலை சம்பவம்: 27பேரும் குற்றவாளிகளே – நீதிமன்றம் அறிவிப்பு

திருப்புவனம் அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த மூன்று பேர் கொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என அறிவிப்பு . தண்டனை விபரங்கள் வரும் புதன்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் பட்டியலின இன சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கும் அருகே உள்ளது ஆவாரங்காடு கிராமத்திற்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 28.5.2018 அன்று … Read more

ஆகஸ்டில் வங்கி 18 நாள்கள் விடுமுறை.. முழு விவரம் இதோ!

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் 18 நாள்கள் மட்டுமே இயக்கவுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை அட்டவணையின்படி ஆகஸ்ட் மாதத்தில் 12 நாள்கள் மூடப்பட்டிருக்கும். இத்துடன் வார இறுதி நாள்கள் 6 விடுமுறையையும் சேர்த்தால் மொத்தம் 18 நாள்கள் வங்கி விடுமுறை நாள்கள் ஆகும்.மேலும் இதில் சில விடுமுறைகள் பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை தினம் ஆகும். அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ள விடுமுறை … Read more