எம்பி, எம்.எல்.ஏக்களுக்கும் தேசிய கொடி ஏற்றும் உரிமை: ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்!

நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உடையாற்றினார். அதேபோல், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் மூவர்ண கொடியேற்றினார். இரண்டாவது ஆண்டாக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக, இந்தியா விடுதலை பெற்ற பின்பு, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரும், ஆகஸ்ட்15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமரும் டெல்லியில் … Read more

தமிழக கேரள எல்லையில் மாநில ஒற்றுமையை பறைசாற்றும் பிரமாண்ட சுதந்திர தின பேரணி!

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின அமுத பெருவிழாவில் மக்கள் அனைவரும் பங்கேற்க ஏதுவாக, இல்லம் தோறும் தேசிய கொடுயை ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் வேண்டிகோளை ஏற்று மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி இந்த விழாவை பிரம்மாண்டமாக்கினர். இந்நிலையில், பாரதத்தின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும்  அனைத்து மாநில  கலாச்சார உடையணிந்து, நடைப்பெற்ற பேரணியில் … Read more

500, 200, 100..ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களை கொண்டு சுதந்திர தினம் கொண்டாடும் ஆசிரியை.!

500, 200, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளில் உள்ள வரிசை எண்களை கொண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் அரசு பள்ளி ஆசிரியை ஹேமலதா. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சே குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஹேமலதா. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நிகழ்த்தியவர். அதுமட்டுமல்லாமல் அப்போது மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வர முடியாத நிலை இருந்தபோதும், அவர்களுக்கான பாடத்தை பென்டிரைவ் மூலமாக தயார்செய்து நேரடியாக அவர்கள் … Read more

தமிழக போலீஸ் தேர்வு: காலியிடம் குறைவு; கட் ஆப் அதிகரிக்கும்; உஷார் மக்களே!

TNUSRB Police exam Cut off Syllabus and Preparation tips: தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் பணியிடங்களுக்கான கட் ஆஃப் இந்த ஆண்டு அதிகரிக்கும் என தெரிகிறது. அது ஏன்? என்பதையும், இந்த தேர்வுக்கான தேர்வு முறை, சிலபஸ் உள்ளிட்ட தகவல்களையும் இப்போது பார்ப்போம். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதையும் படியுங்கள்: … Read more

பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய விவகாரம்.. ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது!

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள குறித்து அவதூறாக பேசிய புகாரில் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மதுரவாயலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பெரியார் சிலையை அகற்றுவது பற்றி பேசியதாக கனல் கண்ணன் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து, வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்த போலீசார், புதுச்சேரியில் நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்தவரை கைது செய்தனர். இதனிடையே, கனல் கண்ணனை நீதிமன்ற … Read more

தேசப்பற்றையும், ராணுவத்தையும் அரசியலுக்காக இழுக்கக்கூடாது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: ” நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது. ஏற்கெனவே ஒரு கட்சி, ஒரு மதத்தை அவர்களது சொத்து போல் இழுத்தது போன்று நாட்டையும், ராணுவத்தையும் அவர்களுடைய சொத்துபோல் இழுப்பது, நாட்டிற்கு நல்லது இல்லை” என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் … Read more

'குடும்ப அரசியலை ஒழிக்க பாஜக உழைக்கும்' – அண்ணாமலை சபதம்!

தமிழகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் குடும்ப அரசியலை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்து உள்ளார். 76வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேசியக்கொடி ஏற்றினார். இதனைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது: 75வது சுதந்திர தினம் முடிந்து, 76வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தருணமிது. காஷ்மீரில் இருந்து கொண்டு வரப்பட்ட … Read more

கிராம சபை கூட்டம்: புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக மக்கள் தீர்மானம்

தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது .அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால், இரண்டாவது புதிய சர்வதேச விமான நிலையம் தொடங்குவதற்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்களை பரிந்துரை செய்தனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.மேலும் புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 … Read more

சென்னை வங்கிக் கொள்ளை: முக்கிய நபர் கைது – 18 கிலோ தங்க நகைகள் மீட்பு

சென்னை தனியார் வங்கி நகைக் கொள்ளையில் தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், கொள்ளையில் ஈடுபட்டவர்களிடமிருந்து 18 கிலோ மதிப்பு கொண்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் தங்க நகைக் கடன் பிரிவில் லாக்கரில் இருந்த பணம், நகைகள் சனிக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டன. வங்கியின் காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, அதே வங்கியில் பணியாற்றும் முருகன் மற்றும் இருவர் துப்பாக்கி முனையில் மேலாளர் உள்ளிட்டோரை கட்டிப்போட்டு லாக்கரில் இருந்த நகைகளை கொள்ளையடித்தாக கூறப்பட்டது. வங்கி மேலாளர் அளித்த … Read more

காலை உணவாக தயிர்- வாழைப் பழம்: இந்த 5 நன்மைகள் இருக்கு!

ஒவவொருவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. அன்றைய தினம் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு காலை உணவு ஒரு முக்கிய தேவையாக உள்ளது. இதனால் சத்தான ஊட்டச்சத்து அதிகம் உள்ள காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். எனவே இயற்கையில் அதிக சத்தானது எது என்பதை உணர்ந்து அந்த உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் காலை உணவாக தயிர் மற்றும் வாழைப்பழத்தின் கலவையை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் உள்ளது. இதை … Read more