தமிழக காவல்துறையில் புதிய சீருடை ‘லோகோ’அறிமுகம் – காவலர் முதல் டிஜிபி வரை ஒரே அடையாளம்

சென்னை: தமிழக காவல் துறையில் முதல்முறையாக காவலர் முதல் டிஜிபி வரையிலான அனைவரது சீருடையிலும் ஒரே மாதிரியான அடையாள ‘லோகோ’ இடம் பெற உள்ளது. தமிழ்நாட்டில் காவலர் முதல் டிஜிபி வரை அனைவருக்கும் காக்கி நிறச் சீருடை வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொருவருக்கும், அவரவர் அதிகாரம், அடிப்படைத் தகுதிகளுக்கு ஏற்ப சீருடை அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். அதன்படி, டிஜிபியின் தோள்பட்டையில் ஐபிஎஸ், அசோக சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாள், குறுந்தடி, தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவ … Read more

கலாம் ஒரு கனவுக்காரர்! – விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல்

திருவனந்தபுரத்தின் மிக அமைதியான புறநகர் பகுதி. ஒரு குறுகலான தெருவில் அமைந்துள்ள வெள்ளை வீட்டின் பெயர் பலகையில் ‘நம்பி நாராயணன்’ என்ற பெயர். சாதனைகளுக்காக மட்டுமின்றி, சோதனைகளுக்காகவும் தேசத்தின் உதடுகளில் உரக்க உச்சரிக்கப்படும் பெயர் இது. வெளியே மழை தூவும் ஒரு மாலை நேரத்தில், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் சில மணி நேரம் உரையாடினேன். அதில் இருந்து சில துளிகள் இங்கே.. திருவனந்தபுரம் அடுத்த தும்பாவின் மேரி மகதலேனா தேவாலயத்தில், இஸ்ரோ தனது ஆய்வுப் … Read more

வேகமாக சென்ற இருசக்கர வாகனம் மாட்டின் மீது மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், திடீரென சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பைக் மெக்கானிக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். நத்தம் புறநகர் பகுதியில் டூவீலர் மெக்கானிக் கடை நடத்தி வந்த அழகர்சாமி என்பவர், நேற்று இரவு வழக்கம் போல் தனது கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, மூன்றுலாந்தர் பகுதியில் சாலையின் குறுக்கே திடீரென வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் விபத்தில் சிக்கி … Read more

உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்தினருக்கு அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: “கபடிப் போட்டியின்போது உயிரிழந்த விளையாட்டு வீரர் விமல்ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடலூர் மாவட்டம் பண்ருட்டி மானடிக்குப்பத்தில் நடைபெற்ற கபடி போட்டியின்போது காடாம்புலியூரைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற வீரர் மார்பில் அடிபட்டு உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபத்தையும் … Read more

இன்று காங்கிரஸ் ஊழல்வாதிகளை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது – மத்திய அமைச்சர் அனுராப் தாக்கூர் கருத்து.!

இன்று காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நடந்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், நாட்டில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்கட்சித் தலைவர்கள் மிரட்டுவதை கண்டித்தும் தலைநகர் டெல்லியின் ராஜபாதையில் அமர்ந்து ராகுல் காந்தி போராட்டம் நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை தடுப்புக் காவலில் டெல்லி போலீஸார் கைது செய்தனர். மேலும், கே.சி.வேணுகோபால், இம்ரான் உள்ளிட்ட … Read more

முதலமைச்சர் அழைப்பு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு: மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார்

சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அழைப்பு மையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொலைபேசியில் பொதுமக்களின் புகார் குறித்து கேட்டறிந்தார். நாவலூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி முடிந்தபின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அழைப்பு மையத்தில், முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஈரோட்டிலிருந்து அழைப்பு மையத்தை தொடர்பு கொண்டவரிடம், அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் குறித்து முதல்வர் … Read more

ஒருதலை காதலில் மாணவி கழுத்தறுத்து கொலை – தப்பமுயன்ற குற்றவாளி கீழே விழுந்து கைமுறிவு

புதுச்சேரியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தபோது அவர் தப்பிக்க முயற்சித்ததால் தவறி விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டது. புதுச்சேரி அடுத்த சன்னியாசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கீர்த்தனா (18), கடந்த 19 ஆம் தேதி கல்லூரி முடிந்த பின்னர் வீடு திரும்பினார். அப்போது அவரது உறவினரான முகேஷ்(22) என்பவரால் ஒரு தலைக்காதல் காரணமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த முகேஷை … Read more

அருள்மொழி வர்மனா? அருண்மொழி வர்மனா? பொன்னியின் செல்வன் குழு புதிய வீடியோ

இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம்ரவி நடித்து வரும் கேரக்டரின் பெயர் அருள்மொழி வர்மனா அல்லது அருண்மொழி வர்மனா என்பது குறித்து படக்குழு தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மணிரத்னம் தற்போது பெரிய பொருட்செலவில் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில். இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக … Read more

#திருநெல்வேலி || மொபட் மீது கார் மோதி விபத்து.! தந்தை, மகள் உயிரிழப்பு.!

திருநெல்வேலி மாவட்டத்தில் மொபட் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(55). இவரது மகள் ஜான்சி (24). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் டெய்லரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜான்சி இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தந்தையோடு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பணகுடி முத்துசாமிபுரம் போக்குவரத்து தடுப்பை கடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக அவர்கள் மீது … Read more