விமான நிலையம் கட்டுவதா வளர்ச்சி?… சீமான் கேள்வி

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றன்பர். இந்தப் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது, “கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஏக்கர் பல கிராமங்கள், பல்லாயிரக்கணக்கான விளை நிலங்களை காலி செய்துவிட்டனர். இதில் 40க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள். அதாவது 2605 சதுப்பு நிலப்பகுதி நீர்பிடிப்புப் பகுதிகள். அதுபோக 985 நீர்நிலைகள், இவையெல்லாம் காலி செய்துவிட்டு … Read more

ஜோதிட, ஜாதக, எண் கணித அடிப்படையில் தனது அரசியல் வாழ்வை முன்னெடுக்கிறார்?.. சொந்த ஊரில் பூஜை, புனஸ்காரங்களில் பொழுது கழித்து வரும் ஓபிஎஸ்

தேனி: அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ம்தேதி நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்” என்று தீர்ப்பு அளித்தார். … Read more

மதுரை: பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் பெயரில் நடந்த மோசடி; போலீஸ் விசாரணை

பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் காப்பீடு அட்டைக்கு எனக்கூறி தலா 100 ரூபாய் வசூல் செய்த நபர்களை கிராம மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் என்ற பெயரில், இலவச சிகிச்சை பெற காப்பீடு அட்டை வழங்குவதாகக் கூறி இரண்டு இளைஞர்கள் மற்றும் இரண்டு இளம் பெண்கள் கிராம மக்களை திரட்டி காப்பீடு அடையாள அட்டைக்கு … Read more

மேட்டூர் அணைக்கு 50,000 கன அடி நீர்வரத்து: 11 டெல்டா மாவட்டங்களுக்கு ‘அலர்ட்’

சேலம்: காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் 11 டெல்டா மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு மேட்டூர் நீர்வளத் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை காலை விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்த … Read more

பரந்தூரில் ஏர்போர்ட் வர காரணம் திமுக எம்பி கனிமொழி தான் – சீமான் குற்றச்சாட்டு

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசும் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் தொடர்ந்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக பாதிக்கப்படும் கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டும், நெல் கொள்முதல் நிலையத்தையும் பார்வையிட்டும், பொது மக்களின் கருத்துக்களை கேட்டு … Read more

வருமானத்துக்கு அதிகமாக ₹65.87 லட்சம் சொத்து குவிப்பு: கோவை மாவட்ட மாஜி பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

கோவை: கோவை மாவட்டத்தில் தணிக்கை பிரிவு மாவட்ட பதிவாளராக பணியாற்றி வந்தவர் செல்வகுமார்(46). இவர் விளாங்குறிச்சி ரோடு வராகமூர்த்தி அவென்யூ பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வரை கணபதி சார்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை இவர் தனது மாமியாரான சிவகங்கையை சேர்ந்த பாண்டியம்மாள் (67) என்பவரது பெயரிலும், மனைவியின் தங்கையான தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றும் மதுரையை சேர்ந்த தென்றல் (40) … Read more

'மிமிக்கிரி செய்து கலங்கம் ஏற்படுத்துறாங்க' – அண்ணாமலை ஆடியோ விவகாரத்தில் பாஜக புகார் மனு

அண்ணாமலை ஆடியோ விவகாரத்தில் ஆடியோவை மிமிக்ரி செய்து வெளியிட்டு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதாக டாக்டர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய விவகாரம் நடைபெற்றபோது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் ஆகிய இருவரும் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி … Read more

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மனு

சென்னை: அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆரம்பகட்ட … Read more

விபத்தில் சிதைந்த மூளை, மகனின் 9 உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்: நெகிழ்ச்சி சம்பவம்

சில நேரங்களில் சிலர் செய்யும் அரிய செயல்கள் மூலம் அவர்கள் பலருக்கு உயிர் கொடுத்த தெய்வங்களாக உயர்ந்து விடுகிறார்கள். ஆதரவான ஒரே மகனையும் தாரை வார்த்த பெற்றோர், மூளை சிதைவடைந்த  மகனின் உறுப்புகளை தானம் செய்த சம்பவம் இதற்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாகும். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழன்மாதேவி கிராமத்தில் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து சில மாதங்கள் ஆகியுள்ளன. … Read more

புதிய பஸ் ஸ்டாண்ட் டூ அயோத்தியாபட்டணத்திற்கு புதிய வழிதடத்தில் டவுன் பஸ் இயக்கம்

சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணத்திற்கு  டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து சீலநாயக்கன்பட்டி வழியாக அயோத்தியாப்பட்டணத்திற்கு டவுன் பஸ் இயக்கம் இல்லாமல் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து குகை, சீலநாயக்கன்பட்டி வழியாக அயோத்தியாப்பட்டணத்திற்கு டவுன் பஸ் இயக்கம் தொடங்கியது. இதேபோல்  சேலம் புதிய  பஸ் ஸ்டாண்டில் இருந்து 5 ரோடு, கந்தம்பட்டி பைபாஸ், … Read more