ராமேசுவரம் – திருவனந்தபுரம் இடையே அமிர்தா விரைவு ரயில் சேவை தொடங்கியது
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு ரயில் புதிய சேவை, ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டது. கேரள மாநிலத்திற்கு ரயில் இயக்கப்பட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இருந்த வந்த நிலையில், ரயில்வே வாரியம் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரையிலும இயக்கப்பட்ட அமிர்தா விரைவு ரயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க அனுமதி வழங்கியது. இதனடிப்படையில், ராமேசுவரம் – திருவனந்தபுரம் இடையான அமிர்தா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டது. … Read more