தமிழகத்தில் 18 நாட்களில் 37.81 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைத்தனர்

சென்னை: தமிழகத்தில் 18 நாட்களில் 37.81 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பை இணைத்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளைப் போக்கும் வகையிலும், இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட சிக்கல்களைத் தீர்க்கவும் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரைஇணைக்கும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்காக ஆக. 1-ம் தேதி முதல் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று, விவரங்களைப் பெற்று இதற்கான ‘கருடா’ செயலியில் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக … Read more

பூஞ்சேரி கிராமமும், வெடித்த சர்ச்சையும்… நிஜமாவே நரிக்குறவர், இருளர் குடும்பங்கள் பயன்பெற்றனவா?

செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியை சேர்ந்த நரிக்குறவ மற்றும் இருளர் சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு வழங்கிய கடன் உதவி கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக நரிக்குறவ பெண் அஸ்வினி பேசும் வீடியோ பல்வேறு ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. அதில் அவர், எங்கள் பகுதிக்கு முதல்வர் வந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளித்தார்கள். ஆனால் எதுவும் வந்து சேரவில்லை. சுமார் ஓராண்டாகி விட்டது. கடன் தர வங்கி அதிகாரிகள் மறுக்கின்றனர். எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. ஆனால் உதவிகள் … Read more

கோவையில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை!

கோவையில் முதுகலை பட்ட படிப்பு படிக்கும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த பிரவின் அன்னதத்தா (33) இவர் எம்பிபிஎஸ் (இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல்) அங்குள்ள மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரியில் முதுகலை பட்டத்தில் மருத்துவ பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் கோபாலபுரம் பகுதியில் … Read more

புதுக்கோட்டை: போக்சோ வழக்கில் சிறையில் இருக்கும் கோயில் பூசாரி மீது பாய்ந்த குண்டாஸ்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் கோயில் பூசாரியை குண்டர் சட்டத்தில கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வயிற்று வலி பிரச்னை இருந்துள்ளது. இதை அறிந்த கோயில் பூசாரி பழனி (65) என்ற முதியவர் சிறுமியின் தாயாரை அணுகி சிறப்பு பூஜை மூலம் சிறுமியின் வயிற்றில் வலியை குணப்படுத்தலாம் என கூறியுள்ளார். இதனை நம்பிய … Read more

பில்கிஸ் பானோ வழக்கு தீர்ப்பு: 11 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி என்ன சொல்கிறார்?

2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோவை கூட்டுப் பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொன்றதற்காக 2008 இல் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி (ஓய்வு) யு டி சால்வி, வியாழன் அன்று “பாதிக்கப்படுகிறவருக்கு தான் அது நன்றாகத் தெரியும்” என்றார். தண்டனையை நீக்குவதற்கான விண்ணப்பத்தை குஜராத் அரசு குழு ஏற்றுக்கொண்டதையடுத்து, 11 குற்றவாளிகள் திங்கள்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். விசாரணைக்கு தலைமை தாங்கிய, மும்பை நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் … Read more

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கனடா பயணம் – காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார்

சென்னை: காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் கனடா செல்கின்றனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆக.22 முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் பிரதிநிதியாக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் நடைபெறும் சொசைட்டி ஆஃப் கிளர்க்ஸ் அட் த டேபிள் (எஸ்ஓசிஏடிடி) கூட்டங்களில் பேரவை செயலர் கி.சீனிவாசன் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பதறவைத்த இறுதி அறிக்கை… சிக்கிக் கொண்ட 17 போலீசார்!

தூத்துக்குடி என்றாலே துப்பாக்கிச்சூடு என்று நினைவுக்கு வரும் அளவிற்கு வரலாற்றில் அழியாத கறை படிந்துவிட்டது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த அமைதி போராட்டம் 2018 மே 22ஆம் தேதி அன்று 100வது நாளை எட்டிய நிலையில் யாரும் எதிர்பார்த்திராத கோர சம்பவம் அரங்கேறியது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பொதுமக்கள் சென்று கொண்டிருக்கையில் போலீசார் … Read more

பிரத்யேக ரேக் மற்றும் பினியன் அமைப்பைக் கொண்ட நீலகிரி மலை ரயில்

ஊட்டி: மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் நீலகிரியில் உதகமண்டலம் வரை செல்லும் மலை ரயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் பெற்றது. ஊட்டி மலை ரயிலைப் போலவே இயங்கி வரும் டார்ஜீலிங் மலை ரயிலும் உலக பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில், தனித்துவமான ரேக் மற்றும் பினியன் அமைப்பைக் கொண்ட நாட்டிலேயே முதல் மலை ரயில் ஆகும் என்று தென்னக … Read more

பொதட்டூர் பேட்டை பேரூராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.84 லட்சம் ஒதுக்கீடு: மன்ற கூட்டத்தில் ஒப்புதல்

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.84 லட்சம் ஒதுக்கீடு செய்து மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்  பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற  சாதாரண கூட்டம்  பேரூராட்சி தலைவர் ஏ.ஜி.இரவிச்சந்திரன்( அதிமுக) தலைமையில் நேற்று நடைபெற்றது. செயல் அலுவலர் பிரகாஷ் வரவேற்றார். இக் கூட்டத்தில்  பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். வரவு செல்வு கணக்கு விவரங்கள் புதிய திட்டப் பணிகள் மேற்கொள்வது குறித்து விவாதம் நடைபெற்றது.  குறிப்பாக  மழை காலம் தொடங்க … Read more