கணவனை இழந்த பெண்ணை அவரது கொழுந்தனார் அரிவாள் மனையால் ஓட ஓட வெட்டிய கொடூரம்

சொத்து பிரச்னை காரணமாக கணவனை இழந்த பெண்ணை உறவினர் ஒருவர் அரிவாள்மனையால் ஓட ஓட வெட்டிய சம்பவம் திட்டக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் வசித்துவருபவர் காவேரி. கணவனை இழந்த இவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது கணவரின் சகோதரர், சகோதரிக்குமிடையே சொத்து சம்பந்தமான பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் சுப்பிரமணியனுக்கும், அவரது அண்ணி காவிரிக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பிரச்னை … Read more

‘ஒன் சைட் லவ்’ ராகவேந்திரன் புலி தற்கொலை முயற்சியா? புதிய வீடியோ

பிரபல சின்னத்திரை நடிகர் ராகவேந்திரன் புலி கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் உள்ளதாக தகவல வெளியான நிலையில், தற்போது இது குறித்து அவரே வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகனமானவர் ராகவேந்திரன். அந்த சீரியலில் நல்ல வரவேற்பை பெற்ற இவர், தொடர்ந்து காற்றுக்கொன்ன வேலி தொடரில் நடித்தார். ஆனால் இந்த தொடரில் சம்பள பிரச்சினை மற்றும் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் … Read more

தமிழக அரசின் மதுக்கடைக்கு போட்டியாக மதுவிற்பனை., அதுவும் கடைக்கு பக்கத்திலேயே கடையை போட்ட கொடுமை.! 

தமிழக அரசின் டாஸ்மாக் கடைக்கு போட்டியாக செங்கல்பட்டு அருகே தனியாக மது விற்பனை நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரமாக தமிழக அரசின் மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடை அருகே திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக, கூடுவாஞ்சேரி மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், டாஸ்மாக் கடைக்கு போட்டியாக … Read more

விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்த மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (19-ம் தேதி) இரவு சுமார் 9.45 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், பிரம்மதேசம் கிராம எல்லை பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் வைத்திருந்த மின்கம்பியில் சிக்கி வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ் (வயது 45), வெங்கடேஷ் (வயது 44) மற்றும் சுப்பிரமணி (வயது 40) ஆகிய மூவரும் … Read more

தமிழகத்திலுள்ள 582 கோவில் குளங்களின் நிலை என்ன? – இந்து சமய அறநிலையத்துறை பதில்

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வேலூர்,  திருநெல்வேலி மாவட்ட இணை ஆணையர்களுக்கு உட்பட்ட 582 கோவில்களில் 380 கோவில் குளங்கள் நல்ல நிலையில் உள்ளன எனவும் 202 கோவில்களின் குளங்கள் புதுப்பிக்கப்பட வேண்டியது உள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவில் பல கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தனக்கே உரிய சிறப்பை கொண்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 615 கோவில்கள் உள்ளன. இந்த … Read more

ஐஸ்வர்யா ராய் கர்ப்பமா? வைரல் வீடியோ

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவரான ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருவது தற்போது இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் இருந்து ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் மற்றும் குழந்தை ஆராத்யாவுடன் இருக்கும் வீடியோ பதிவு வெளியானது. இந்த வீடியோவில்,  ஐஸ்வர்யா ராய் தான் கர்ப்பமாக இருப்பதை மறைப்பதற்கு முயற்சி செய்கிறார் என்று நெட்டிசன்கள் தங்களது யூகத்தைபதிவு செய்ததை தொடர்ந்து இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. … Read more

உடல்நிலை குறைவால் கொத்தனார் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்.!

உடல்நலக்குறைவால் கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடமனாங்குழி விளையில் கொத்தனாரான சுகுமாறன் (வயது 50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் திருமணமாகி 2 மகள்களும் உள்ளனர்.  கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சுகுமாறன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், நேற்று முன்தினம் படுக்கை அறையில் இருந்த சுகுமாறன் திடீரென அலறி சத்தம் போட்டார். அவரது … Read more

ஏக்கருக்கு ரூ.5,000 வரை மிச்சம்: குறுவை சாகுபடியில் நேரடி நெல் விதைப்பில் டெல்டா விவசாயிகள் ஆர்வம்

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் வழக்கத்தைவிட நிகழாண்டு நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இதனால் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவை மிச்சப்படுத்தி உள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறுவை சாகுபடியில் குறுகியகால ரகங்களான 110 நாள் வயது உடைய நெல் ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்வது வழக்கம். இதற்காக பம்பு … Read more

போதையில் மட்டையான பாஜக பிரமுகர் – தூக்கிச் சென்ற தொண்டர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் மது போதையில் நடக்க முடியாமல் இருந்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவரை பாஜகவினர் தூக்கி சென்ற காட்சி வெளியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அசோக்குமார். பாஜகவை சேர்ந்த இவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கடந்த 17ம் தேதி பல்லடம் ராயர்பாளையத்தில் பாஜவின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து … Read more

‘டிஎன்பிஎஸ்சி தேர்வு விண்ணப்பங்களில் இனி இறுதிநாள் வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்’

சென்னை: டிஎன்பிஎஸ்சியில் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில், விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வரை மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கப்படும் என்று தேர்வாணைய செயலாளர் பி.உமா மகேஸ்வரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை இணையவழியே பெற்றுவருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை, இணையவழியில் சமர்ப்பிக்கும் போது அறியாமல் சில தகவல்களை தவறாகப் பதிவு செய்துவிடுகின்றனர். இதனால், ஒருசில விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவேண்டிய … Read more