புதுச்சேரி | புத்தகம், சீருடை தராததால் கல்வித்துறை அலுவலகம் முற்றுகை: 4 பெண்கள் உட்பட 50 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து ஒரு மாதமாகியும் அரசுப் பள்ளிகளில் பாடப் புத்தகம், சீருடை தராததால் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்ததை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிகழ்வில் 4 பெண்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறந்து 1 மாதத்துக்கு மேலாகியும் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை தரப்படவில்லை. மாணவர்களுக்கான பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி … Read more

சிறிய கூண்டில் 76 குரங்குகளை அடைத்து வைத்த வனத்துறை அதிகாரிகள்! செங்கல்பட்டில் பரிதாபம்

செங்கல்பட்டு அருகே 76 குரங்குகளை ஒரு சிறிய கூண்டுக்குள் வனத்துறை அதிகாரிகளே அடைத்து வைத்த சம்பவம் பலரது கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. அருகில் இருந்த வனப்பகுதிகளில் இருந்து ஊருக்குள் நுழைந்த குரங்குகள், அங்கிருந்த வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களை உடைப்பது, உணவுப் பொருட்களை திருடிச் செல்வது என பல சேஷ்டைகளை செய்துள்ளன. இதையடுத்து, ஊருக்குள் இருக்கும் குரங்குகளை பிடித்துச் செல்லுமாறு … Read more

சென்னை செஸ் ஒலிம்பியாட்: விமானத்தில் பறந்த அரசுப் பள்ளி மாணவர்கள்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற 152 மாணவ, மாணவிகளை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்தது. … Read more

ஆண்மையற்றவர் என்பதை மறைத்து 200 பவுன் நகை வாங்கி திருமணம் -வழக்குப்பதிய உத்தரவு

தான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது ஐபிசி 417,420 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 4 வாரத்தில் விசாரணை செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இர்பானா ரஸ்வீன் தனது கணவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் சில பிரிவுகளை சேர்க்கக்கோரி மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், “மனுதாரரின் … Read more

திருச்சி விசிட்… மீண்டும் துப்பாக்கி எடுத்த அஜித்!

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், பிஸ்டல் மற்றும் ரைபிள் சுடும் போட்டி கடந்த 24-ம் தேதி தொடங்கியது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருச்சி மாநகர ரைபிள் கிளப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து … Read more

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்

சென்னை: சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. இந்தியாவின் மகத்தான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஜோதியை எடுத்துச் சென்றார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஜோதி நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்ட இன்று சென்னை வந்தது. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இன்று நடைபெற்றது. மாநிலக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் வரை ஜோதி … Read more

எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? – சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர – தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை நீடிக்கும் என்றும், சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது. ஆந்திர – தமிழக கடலோரப் பகுதிகலின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஜூலை 27) அடுத்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் … Read more

#தென்காசி || நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.! வியாபாரி உயிரிழப்பு.!

தென்காசியில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்துள்ளார். தென்காசி சங்கரன்கோவில் அருகே உள்ள நைனாபுரத்தைச் சேர்ந்தவர் பால் வியாபாரி மாடசாமி(32). இவருடைய மனைவி ராமசீதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மாடசாமி, இன்று காலை டீக்கடை ஒன்றிற்கு பால் ஊற்றிவிட்டு இரு சக்கர வாகனத்தில் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் … Read more

கோடநாடு வழக்கு | ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோடாநாடு கொலை , கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள் காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் இருந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சோலூர்மட்டம் காவல் … Read more