மோடி, அமித்ஷா படங்களுடன் போஸ்டர்: ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிரடி

காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் மோடி, அமித்ஷா ஆகியோர் இடம் பெறும் வகையில் ஒட்டபட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இது ஒரு புதிய சர்ச்சயை உருவாகி உள்ளது. தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் பெரிதாக வெடித்தது. இரண்டு செயற்குழு நடத்தப்பட்டு இறுதியாக அதிகமுகவிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் இருந்ததால், எடப்பாடி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக … Read more

மறக்க முடியாத அனுபவம்! மனதார பாராட்டிய அன்புமணி! யாரை? எதற்காக?!

தமிழர் நாகரிகப் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய செஸ் ஒலிம்பியாட் தொடக்க திருவிழாவிற்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள் தெரிவித்திருக்கிறார் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு கோப்பையை வென்றிருக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் கண்டு களித்த சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், இனப் பெருமைகள், துயரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அனைவர் மனதிலும் பதிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு … Read more

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படம் இடம்பெற வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படம் இடம் பெற வேண்டும். இருவரின் புகைப்படங்கள் இடம் பெற்ற விளம்பரங்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களை சேர்க்க உத்தரவிடக் கோரி சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். … Read more

இரவில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு – கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

இரவில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 4 மணி முதல் நள்ளிரவு வரை பெய்த கன மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா … Read more

புத்தக அட்டை படத்தில் காவி உடையில் திருவள்ளுவர்: கோவையில் சர்ச்சை

கோவையில் நடைபெற்ற மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வில், கொடுக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தின் அட்டைப்படத்தில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போல புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியின் ஒரு அங்கமாக மாபெறும் புத்தக வாசிப்பு நிகழ்வு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 5000 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குறள் … Read more

1000 ஆண்டுகள் பழமையான செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு – தமிழகம் கொண்டுவர போலீஸார் நடவடிக்கை

சென்னை: தமிழகத்திலிருந்து கடத்தி செல்லப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சோழப் பேரரசி செம்பியன் மகாதேவியின் உலோக சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சோழப் பேரரசில் வலிமையான அரசியாகத் திகழ்ந்தவர் செம்பியன் மகாதேவி. ராஜராஜ சோழனின் மூதாதையரான இவர், சோழப் பேரரசில் தவிர்க்க முடியாத சக்தி யாகத் திகழ்ந்தார். கோயில் திருப்பணிகள் இவரது காலத்தில்தான் செங்கல் கோயில்கள் கருங்கல் கோயில்களாக மாற்றப்பட்டன. … Read more

களைகட்டத் துவங்கிய நெத்திலி மீன் சீசன்- அதிக விலை கிடைப்பதால் குளச்சல் மீனவர்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நெத்திலி மீன் சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 4000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், பைபர் படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று 42-வது பட்டமளிப்பு விழா – பிரதமர் மோடி, ஆளுநர், முதல்வர் பங்கேற்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் இன்று காலை 10 முதல் 11.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். அவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, … Read more